என் மலர்
இந்தியா

சீன வெளியுறவு மந்திரி வாங் யீ அடுத்த வாரம் இந்தியா வருகை
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார்.
- சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதினை ஆகியோரை சந்திக்க உள்ளார்.
புதுடெல்லி:
சீனாவில் நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் மத்திய மந்திரிகள் ஜெய்சங்கர், ராஜ்நாத் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். இது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. அங்கு அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதினை ஆகியோரை சந்திக்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சீன வெளியுறவு மந்திரி வாங் யீ அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலைச் சந்தித்து எல்லைப் பிரச்சினை தொடர்பாக பேச்சு நடத்துகிறார். பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரையும் அவர் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிக்கிமின் நாது லா கணவாய், உத்தராகண்டின் லிபுலெ கணவாய், இமாசல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக வர்த்தம் தொடர்பாக சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.






