என் மலர்
நீங்கள் தேடியது "சீன வெளியுறவு மந்திரி"
- சீனாவின் தியான்ஜின் நகரில் வருகிற 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
- தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வாங் யி 24-வது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.
சீன வெளியுறவு மந்திரி வாங் யி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை டெல்லி வந்தார். அவரை மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றனர்.
பின்னர் சீன வெளியுறவு மந்திரி வாங் யி மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது. அனைத்து வடிவங்களிலும் வரும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது என்பது இரு நாடுகளின் முக்கிய முன்னுரிமையாகும். எங்களின் பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகள் இடையே நிலையான கூட்டுறவும், எதிர்கால நல்லுறவும் உருவாகும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது இந்தியாவுக்கு உரம், அரிய வகை கனிமங்கள், சுரங்கபாதை எந்திரங்களை வழங்க சீனா தயாராக இருப்பதாக ஜெய்சங்கரிடம் அவர் உறுதியளித்தார். இது தொடர்பான வினியோகம் மீண்டும் தொடங்கும் என்று வாங் யி தெரிவித்து உள்ளார்.
கடந்த மாதம் ஜெய்சங்கர் சீனாவுக்கு சென்ற போது உரம், அரியவகை கனிமங்கள் வினியோகம் தொடர்பான பிரச்சனையை வாங்யி-யிடம் எழுப்பியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அவர் தற்போது இந்த உறுதியை அளித்து உள்ளார்.
தைவான் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அவரிடம் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
சீன வெளியுறவு மந்திரி வாங் யி இன்று காலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் வருகிற 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் சீனா செல்வார் என எதிர்பாார்க்கப்படும் நிலையில், மோடி-வாங் யி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்திய-சீனா எல்லை விவகாரங்கள் தொடா்பான 23-வது சுற்று பேச்சுவாா்த்தை சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. இதில் அஜித் தோவல் பங்கேற்றார். இதைத்தொடா்ந்து, தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வாங் யி 24-வது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார்.
- சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதினை ஆகியோரை சந்திக்க உள்ளார்.
புதுடெல்லி:
சீனாவில் நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் மத்திய மந்திரிகள் ஜெய்சங்கர், ராஜ்நாத் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். இது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. அங்கு அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதினை ஆகியோரை சந்திக்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சீன வெளியுறவு மந்திரி வாங் யீ அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலைச் சந்தித்து எல்லைப் பிரச்சினை தொடர்பாக பேச்சு நடத்துகிறார். பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரையும் அவர் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிக்கிமின் நாது லா கணவாய், உத்தராகண்டின் லிபுலெ கணவாய், இமாசல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக வர்த்தம் தொடர்பாக சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.
- மியான்மரில் 2021, பிப்ரவரி மாதத்தில் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
- சீன வெளியுறவு மந்திரி வாங் யி வருகை தருவதற்கு மியான்மர் நாட்டு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பர்மா:
சீனா தலைமையிலான லங்காங்-மெகாங் ஒத்துழைப்பு குழு கூட்டம் மியான்மர் நாட்டில் உள்ள பாகன் நகரில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மீகாங் டெல்டா பகுதி நாடுகளான மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
மீகாங் டெல்டா பகுதியில் நீர்மின்சாரத் திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்க உள்ளனர்.
இந்நிலையில், மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யி வருகை தந்துள்ளார். இதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மியான்மரில் அமைதி முயற்சிகளை மீறுவதாக உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக மியான்மர் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், மியான்மர் நாட்டில் நடைபெறும் கூட்டத்தில் வெளியுறவு மந்திரிகள் கலந்து கொண்டது நாட்டின் இறையாண்மை மற்றும் அரசாங்கத்தை அங்கீகரிப்பதாகும் என தெரிவித்தார்.






