search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minerals"

    • வித்தியாசமாக ஆரோக்கியம் அதிகம் உள்ள தினை அரிசி பொங்கலை செய்யலாம்.
    • தினைகளில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

    பொங்கல் செய்யலாம் என்றாலே நம் நினைவில் வருது பச்சரிசி, வெல்லம் தான் ஆனால் சற்று வித்தியாசமாக ஆரோக்கியம் அதிகம் உள்ள தினை அரிசி பொங்கலை செய்யலாம். பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் தினை அரிசி பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது. தினைகளில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. கார்போஹைட்ரேட் மிக குறைவான அளவே இருக்கிறது. உங்கள் நாளை ஒரு இனிப்புடன் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் தினை பொங்கல் செய்யுங்கள். இது ஒரு ஆரோக்கியமான உணவாகும் கூட அமையும். இந்த தினை பொங்கல் உங்களை பசியாற்ற வைத்ததுமின்றி உடலில் சேரக்கூடிய சர்க்கரை அளவை தடுத்து நல்ல ஆரோக்கியமான உடல் எடையையும் பராமரிக்க செய்கிறது.

    தேவையான பொருட்கள்:

    தினை- 100 கிராம்

    கடலைப்பருப்பு, பாசிபருப்பு தலா- 25 கிராம்

    நெய்- 50 கிராம்

    ஜாதிக்காய் பொடி- ஒரு சிட்டிகை

    நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் தலா- ஒரு டீஸ்பூன்

    துருவிய கொப்பரை- 2 டீஸ்பூன்

    வெல்லம்- 150 கிராம்

    செய்முறை:

    தினை மற்றும் பருப்பு வகைகளை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து தேவையான அளவு நீர்விட்டு குழைய வேகவைக்கவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி தினை கலவையில் சேர்த்து பொங்கல் பதம் வரும் வரையில் கிளறி இறக்கவும்.

    சூடான நெய்யில் ஜாதிக்காய் பொடி, துருவிய கொப்பரை சேர்த்து வறுத்து பொங்கலில் சேர்க்க வேண்டும். இறுதியாக வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து பரிமாறவும்.

    • புளியரையில் இருந்து கேரளா செல்லும் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • கிராம சாலைகள் அதி கனரக வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.

    கடையம்:

    தென்காசி, அம்பை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் புளியரையில் இருந்து கேரள மாநிலம் செல்லும் சாலை மலைப்பாதையாகவும், குறுகிய சாலையாகவும் இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தென்காசி மாவட்ட மக்கள் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை மற்றும் அவசர சிகிச்சைக்காக செல்லும் போது போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அளவிற்கு பாதிப்புக்கு உள்ளாகிறது.

    தென்காசி மாவட்டத்தி லிருந்து வளைகுடா நாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் போக்கு வரத்து நெரிசலால் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அதிக அளவில் கனரக வாகனங்கள் கனிமங்களை ஏற்றி செல்வதால் சாலைகள் பாதிக்கப்படுவதோடு சாலையில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் மாசு படுகிறது.

    மேலும் குறைந்த யூனிட் அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டு அதிக யூனிட் கனிம வளங்களை ஏற்றி செல்வதால் தமிழக அரசுக்கு மிகுந்த வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தற்போது பெரும்பாலான குவாரிகள் உள்ள கிராம சாலைகள் அதி கனரக வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியே கனரக வாகனங்கள் செல்வதால் சாலைகள் சேதம் அடைகிறது.

    கிராமச் சாலைகள் அதிகனரக வாகனங்கள் செல்வதற்கு ஏற்றது தானா என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அறிக்கை பெற்ற பின்னரே அனுமதிக்கப்பட்ட வேண்டும்.

    எனவே கேரளாவிற்கு புளியரை வழியாக அதிகனரக வாகனங்கள் செல்ல நிரந்தரமாக தடை செய்ய உரிய சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சட்டென்று பலரும் ருசிப்பது வாழைப்பழமாகத்தான் இருக்கும்.
    • இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வைட்டமின் சி உள்ளது.

    திடீர் பசியைத் தணிக்க விரும்பினாலோ, பயணத்தின்போது சாப்பிட ஆசைப்பட்டாலோ சட்டென்று பலரும் ருசிப்பது வாழைப்பழமாகத்தான் இருக்கும். இதனை எந்த நேரத்திலும் சாப்பிட முடியும். தினமும் ஒரு வாழைப்பழமாவது சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் அறிவுறுத்துகிறார்கள். வாழைப்பழம் ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான ௧௦ காரணங்களையும், அதனால் கிடைக்கும் நன்மைகளையும் தெரிந்து கொள்வோம்.

    சத்துக்கள்

    எல்லா வகையான வாழைப்பழங்களிலும் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வைட்டமின் சி, செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அத்துடன் இயற்கை சர்க்கரையும், கார்போஹைட்ரேட்டும் உள்ளன. அவை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் சிற்றுண்டி உணவாகவும் அமைந்திருக்கின்றன.

    மேலும், வாழைப்பழத்தில் உள்ளடங்கி இருக்கும் மெக்னீசியம் எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். குறைந்த கலோரிகளே கொண்டிருப்பதும் வாழைப்பழத்தை பலரும் விரும்ப காரணமாக அமைந்திருக்கிறது.

    பொட்டாசியம்

    வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் உடலுக்கு தேவையான சிறந்த இயற்கை ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதயம் மற்றும் தசைகளின் செயல்பாட்டை பராமரிக்க பொட்டாசியம் முக்கியமானது. அதனால் தினமும் ஒரு வாழைப்பழமாவது தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

    ஆற்றல்

    வாழைப்பழத்தில் நிறைந்திருக்கும் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரை விரைவான மற்றும் நீடித்த ஆற்றலை உடலுக்கு அளிக்கின்றன. உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு அதிக எனர்ஜியை கொடுக்கும். உடற்பயிற்சியையும் உற்சாகமாக செய்யத் தூண்டும். மதிய உணவுக்குப் பின்பு வாழைப்பழம் சாப்பிடுவதும் நல்லது.

    செரிமானம்

    வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை பேண உதவும். குறிப்பாக 'பெக்டின்' குடல் இயக்கத்தை ஊக்குவித்து செரிமானம் சுமூகமாக நடைபெறுவதற்கு உதவிபுரியும். மலச்சிக்கலையும் தடுத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    வயிற்றுக் கோளாறு

    வயிற்று கோளாறு அல்லது செரிமானம் சார்ந்த அசவுகரியங்களை எதிர்கொள்பவர்களுக்கு வாழைப்பழம் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் வாழைப்பழங்கள் எளிதாக ஜீரணமாகும். வயிற்றில் ஏற்படும் வலியை போக்கவும் உதவும்.

    இதய ஆரோக்கியம்

    பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் போன்ற உணவுப்பொருட்களை தவறாமல் உட்கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். இதய நோய் மட்டுமின்றி பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும்.

    உடல் எடை

    வாழைப்பழங்களில் கலோரிகள் மட்டுமின்றி கொழுப்பின் அளவும் குறைவு. அவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம் அதிக பசியை கட்டுப்படுத்திவிடலாம். அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். உடல் எடையை சீராக பராமரிக்க முயற்சிப்பவர்களுக்கு வாழைப்பழம் சிறந்த தேர்வாக அமையும்.

    மனநிலை மேம்பாடு

    வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 உள்ளது. இது மூளையின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. மேலும் வைட்டமின் பி6  செரோடோனின்,டோபமைன் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களின் உற்பத்திக்கு துணைபுரியக்கூடியது. இது மனநிலையை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.

    சருமம்

    வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமம் விரைவில் வயதான தோற்றத்திற்கு மாறுவதை தடுக்கும். தோல் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமான சருமத்திற்கு வித்திடும்.

    இயற்கை இனிப்பு

    வாழைப்பழங்கள் ஆரோக்கியமான முறையில் உடலின் இனிப்பு தேவையை பூர்த்தி செய்யக்கூடியவை. ஸ்மூத்தி, பேக்கரி பொருட்கள் போன்றவற்றில் வாழைப்பழங்களை சேர்ப்பதன் மூலம் செயற்கை சர்க்கரையின் தேவையை குறைக்கலாம்.

    • நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் வழிவகுக்கின்றன.
    • உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க துணைபுரியும்.

    கவர்ச்சிகரமான பழ இனங்களுள் ஒன்றாக காட்சி அளிக்கும் டிராகன் பழத்தின் பூர்வீகமாக மெக்சிகோ அறியப்படுகிறது. ஆரம்பத்தில் அமெரிக்கா முழுவதும் பரவி இப்போது உலகம் முழுவதும் விளைவிக்கப்படுகிறது. இந்தியாவிலும் இதனை பலர் விரும்பி ருசிக்க பழகிவிட்டார்கள். டிராகன் பழத்தை ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணத்தை தெரிந்துகொள்வோம்.

    * டிராகன் பழத்தில் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை உடலில் செல்களை சேதப்படுத்தும் ப்ரீரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகின்றன. நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் வழிவகுக்கின்றன.

    * டிராகன் பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தக்கூடியது. நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடி உடல் பலவீனம் அடைவதை தடுக்கக்கூடியது.

    * டிராகன் பழத்தில் உள்ளடங்கி இருக்கும் நார்ச்சத்து செரிமான செயல்பாடுகளையும், குடல் இயக்கங்களையும் மேம்படுத்த உதவும்.

    * இதில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து சருமத்தை பாதுகாக்க வழிவகை செய்யும். விரைவிலேயே வயதான அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதை தடுக்கும்.

    *டிராகன் பழத்தில் உள்ள நார்ச்சத்துகள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் ஆரோக்கியமான கொழுப்பின் செயல்பாடுகளை ஊக்குவிக்க உதவும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதய நோய் அபாயங்களையும் குறைக்கும்.

    * டிராகன் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் வெப்பமான காலநிலையின்போது உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க துணைபுரியும். உடற்பயிற்சி செய்த பிறகு உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கும் டிராகன் பழம் சிறந்த தேர்வாக அமையும்.

    * டிராகன் பழத்தில் கலோரிகள் குறைவு. ஆனால் வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

    • இப்போது கடத்தப்படும் கனிம வளங்கள் எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது.
    • பல்லாயிரக்கணக்கான வருடங்களாக உருவாகி இருக்கும் இந்த கனிமவளங்கள் மீண்டும் உருவாக வேண்டும் என்றால் இன்னும் பல்லாயிரக்கணக்கான வருடங்களாகும்.

    கடையம்:

    அம்பை, தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    அமைச்சர் ஆய்வு

    கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குமரி மாவட்டம் கோழிவிளை சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தான் விமான நிலையத்தில் இருந்து வருவதற்குள் 50-க்கும் மேற்பட்ட கனிமவள் லாரிகள் சாலையில் சென்றதாகவும், 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள கனரக வாகனங்கள் கனிம வளங்களை ஏற்றிச் செல்லக்கூ டாது என்று அரசு தடை விதித்திருப்பது இருக்கிறது.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு போன் செய்து அனைத்து வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வைத்துள்ளார். அவ்வாறு அமைச்சர் உத்தரவிட்ட பிறகும் கனிமவள வாக னங்களின் படையெடுப்பு நிறுத்தப்பட வில்லை.

    கனிமவள கடத்தல்

    இப்போது கடத்தப்படும் கனிம வளங்கக்கள் எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. பல்லாயிரக்க ணக்கான வருடங்களாக உருவாகி இருக்கும் இந்த கனிமவளங்கள் மீண்டும் உருவாக வேண்டும் என்றால் இன்னும் பல்லாயிரக்க ணக்கான வருடங்களாகும். எனவே கனிமவளங்கள் பிற்கால சந்ததிகளுக்காக பாதுகாக்க வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • குளத்தில் உரிய அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அனுமதி இல்லாமல் சரள் மண் அள்ளியது சோதனையில் தெரிய வந்தது.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே குளத்தில் உரிய அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் இளந்தோப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரள் மண் ஏற்றிக் கொண்டு 3 டிராக்டர்கள் அந்த வழியாக சென்றது. அதனை போலீசார் சோதனை செய்த போது உரிய அனுமதி இல்லாமல் 3 யூனிட் சரள் மண் அள்ளியது தெரிய வந்தது.

    இதையடுத்து 3 டிராக்ட ர்களை பறிமுதல் செய்த போலீசார் மண் கடத்தியதாக கலுங்கடியை சேர்ந்த டக்ளஸ் சாமுவேல் (வயது 33), மறுகால்குறிச்சியைச் சேர்ந்த அருணாச்சலம் (49), ஆழ்வாநேரியை சேர்ந்த பிச்சுராஜா (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் சூரங்குடி பகுதியில் உள்ள குளத்தில் சரள் மண் அள்ளியதும், அதை செங்கல் சூளைக்கு டிராக்டர்களில் கொண்டு செல்ல முயன்றதும் தெரிய வந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டிய தமிழக அரசுத் துறைகள் அதற்கு துணை போவது கண்டிக்கத்தக்கது.
    • கனிமவளக் கொள்ளையை அனுமதிக்கவே கூடாது என்று உச்சநீதிமன்றம் பலமுறை கூறியிருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சட்டவிரோத கிரானைட் மற்றும் கருங்கல் குவாரிகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, அவர்களுக்கு மாவட்ட நிர்வாகமும், புவியியல் மற்றும் சுரங்கத்துறையும் சலுகை காட்டுவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டிய தமிழக அரசுத் துறைகள் அதற்கு துணை போவது கண்டிக்கத்தக்கது.

    இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கனிமவளக் கொள்ளையை அனுமதிக்கவே கூடாது என்று உச்சநீதிமன்றம் பலமுறை கூறியிருக்கிறது. ஆனால், அதை சற்றும் மதிக்காமல் கிரானைட் கொள்ளை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகமும், கனிமவளத்துறையும் செயல்படுவது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கிரானைட் கொள்ளை மற்றும் அதற்கு ஆதரவாக செயல்படும் அரசுத்துறைகள் குறித்து விசாரணை நடத்தினால் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட கிரானைட் கொள்ளை பற்றி உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். அதுவரை கிரானைட் குவாரிகளை மூட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாங்குநேரி ரெயில்வே கேட் அருகே வருவாய்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • சோதனையில் அனுமதி இல்லாமல் செம்மண்ணை கடத்தி வந்தது தெரியவந்தது.

    களக்காடு:

    நாங்குநேரி தெற்கு கிராம நிர்வாக அதிகாரி ஜெபஸ்டியன் மற்றும் வருவாய்துறையினர் சம்பவத்தன்று நாங்குநேரி ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக செம்மண் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அனுமதி இல்லாமல், சட்டவிரோதமாக செம்மண்ணை கடத்தி வந்தது தெரியவந்தது. அப்போது லாரியை நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    இதுபற்றி கிராம நிர்வாக அதிகாரி ஜெபஸ்டின், நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் செம்மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தப்பி ஓடிய டிரைவர் பானாங்குளத்தை சேர்ந்த முருகேசன் (வயது 54) என்பது தெரியவந்தது. இதையடுத்து முருகேசனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    • புளியரையில் வாகன சோதனை செய்வதற்காக காவல்துறை, கனிம வளம் உள்ளிட்ட துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைந்துள்ளன.
    • கையூட்டு பெற்றுக் கொண்டு வாகனங்களை அதிக யூனிட்டுகளை ஏற்றி செல்ல அனுமதி அளிப்பதாக ரவி அருணன் தெரிவித்துள்ளார்.

    கடையம்:

    அம்பை மற்றும் தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தென்காசி மாவட்டம் புளியரையில் வாகன சோதனை செய்வதற்காக காவல்துறை, கனிம வளத்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்து துறை ஆகிய சோதனை சாவடிகள் அமைந்துள்ளன.

    ஒவ்வொரு சோதனை சாவடிகளுக்கும் அதற்கான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அங்கு வரும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்து தான் அனுப்ப வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளது. இருந்தும் கூட எல்லா சோதனை சாவடிகளிலும் கையூட்டு பெற்றுக் கொண்டு வாகனங்களை அதிக எடையுடன் அதிக யூனிட்டுகளை ஏற்றி செல்வதற்கும் அனுமதி அளிக்கின்றனர்.

    இதை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லும் வகையில் ஒவ்வொரு சோதனை சாவடிகளிலும் சோதனை செய்யப்படாமலேயே வாகனங்களை அனுப்புவது குறித்தான வீடியோ ஆதாரங்கள் அனைத்து அதி காரிகளுக்கும் அனுப்பப் படும்.

    அதன் பிறகும் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களுடைய புகாரை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் புளியரைசோதனை சாவடிக்கு அப்பால் முன் அறிவிப்பின்றி ஒரு நாள் திடீர் மறியல் செய்வோம்.

    ஒரு யூனிட் கனிம வளம் 4.5 டன் எடை இருக்கும். வாகனத்தில் ஏற்றப்பட்ட கனிம பொருட்களின் உயரம், அகலம், நீளம் அனைத்தையும் சரியாக அளந்தாலே அவை எவ்வளவு டன் உள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வரும்.

    இதன் மூலம் 3 யூனிட்டுக்கு 'பாஸ்'வாங்கி கொண்டு 13 யூனிட் வரை கனிமங்களை ஏற்றிச் செல்வதும் நிரூபனம் ஆகும்.

    இவ்வாறு அடிக்கடி சோதனை நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி அரசினுடைய வருவாய் இழப்பை தடுக்கும் வகையில் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    எங்களின் நடவடிக்கை களை ஒடுக்கும் வகையில் காவல்துறை செயல்பட்டால் அரசின் வருவாய் இழப்பை தடுக்கும் நோக்கத்திற்காக சிறை செல்லவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிலத்தடி நீர் இருப்புக்கு ஆதாரமாக உள்ள கிராவல் மண் கடத்தலும் அதிகரித்து வருகிறது.
    • இயற்கையால் படைக்கப்பட்ட அரியவகை சிறு உயிரினங்கள் வாழ்வாதாரத்தை இழந்தும் அழிந்தும் வருகின்றன.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த அமராவதி போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் தம்புரான் கோவில் அருகே அனுமதியின்றி மலைகளை வெடிவைத்து தகர்த்து கற்கள் உற்பத்தி செய்தும் கிராவல் மண்ணை அள்ளிச் செல்லும் சம்பவமும் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    உடுமலையை அடுத்த அமராவதி பகுதியில் அரசு புறம்போக்கில் உள்ள மலைகளை வெடிவைத்து தகர்த்து சைஸ், சிறுகல் மற்றும் வேலி போடுவதற்கு பயன்படும் கம்பிகற்களை உற்பத்தி செய்து கடத்திச்சென்ற வண்ணம் உள்ளனர். அதே போன்று நிலத்தடி நீர் இருப்புக்கு ஆதாரமாக உள்ள கிராவல் மண் கடத்தலும் அதிகரித்து வருகிறது. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் இயற்கையால் படைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத அரியவகை சிறு உயிரினங்கள் வாழ்வாதாரத்தை இழந்தும் அழிந்தும் வருகின்றன. முறையான அனுமதி பெறாமல் முறைகேடான வழியில் நடைபெற்று வரும் தொடர் கனிமவள கொள்ளையால் தட்பவெப்ப நிலை மாற்றமும் ஏற்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.

    இது சம்பந்தமாக புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக புகார் அளிப்பவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கனிமவளம், வருவாய் மற்றும் காவல்துறையினர் கடத்தலை தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதன் காரணமாக இரவு பகலாக கனிமவள கொள்ளை தங்கு தடையின்றி முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அமராவதி பகுதியில் ஆய்வு செய்து கனிமவள கொள்ளையில் ஈடுபட்டு வருகின்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அதற்கு உறுதுணையாக செயல்பட்ட அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×