search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puliyarai"

    • புளியரையில் வாகன சோதனை செய்வதற்காக காவல்துறை, கனிம வளம் உள்ளிட்ட துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைந்துள்ளன.
    • கையூட்டு பெற்றுக் கொண்டு வாகனங்களை அதிக யூனிட்டுகளை ஏற்றி செல்ல அனுமதி அளிப்பதாக ரவி அருணன் தெரிவித்துள்ளார்.

    கடையம்:

    அம்பை மற்றும் தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தென்காசி மாவட்டம் புளியரையில் வாகன சோதனை செய்வதற்காக காவல்துறை, கனிம வளத்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்து துறை ஆகிய சோதனை சாவடிகள் அமைந்துள்ளன.

    ஒவ்வொரு சோதனை சாவடிகளுக்கும் அதற்கான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அங்கு வரும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்து தான் அனுப்ப வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளது. இருந்தும் கூட எல்லா சோதனை சாவடிகளிலும் கையூட்டு பெற்றுக் கொண்டு வாகனங்களை அதிக எடையுடன் அதிக யூனிட்டுகளை ஏற்றி செல்வதற்கும் அனுமதி அளிக்கின்றனர்.

    இதை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லும் வகையில் ஒவ்வொரு சோதனை சாவடிகளிலும் சோதனை செய்யப்படாமலேயே வாகனங்களை அனுப்புவது குறித்தான வீடியோ ஆதாரங்கள் அனைத்து அதி காரிகளுக்கும் அனுப்பப் படும்.

    அதன் பிறகும் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களுடைய புகாரை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் புளியரைசோதனை சாவடிக்கு அப்பால் முன் அறிவிப்பின்றி ஒரு நாள் திடீர் மறியல் செய்வோம்.

    ஒரு யூனிட் கனிம வளம் 4.5 டன் எடை இருக்கும். வாகனத்தில் ஏற்றப்பட்ட கனிம பொருட்களின் உயரம், அகலம், நீளம் அனைத்தையும் சரியாக அளந்தாலே அவை எவ்வளவு டன் உள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வரும்.

    இதன் மூலம் 3 யூனிட்டுக்கு 'பாஸ்'வாங்கி கொண்டு 13 யூனிட் வரை கனிமங்களை ஏற்றிச் செல்வதும் நிரூபனம் ஆகும்.

    இவ்வாறு அடிக்கடி சோதனை நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி அரசினுடைய வருவாய் இழப்பை தடுக்கும் வகையில் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    எங்களின் நடவடிக்கை களை ஒடுக்கும் வகையில் காவல்துறை செயல்பட்டால் அரசின் வருவாய் இழப்பை தடுக்கும் நோக்கத்திற்காக சிறை செல்லவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்து அதன் பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
    • அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி கண்காணித்து வருகின்றனர்.

    செங்கோட்டை:

    கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் நெல்லை கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் பொன்வேல், உதவி இயக்குனர் மகேஸ்வரி ஆகியோர் தலைமையில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் அமைத்து பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்து அதன் பின்னரே அனுமதிக்கப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்து கால்நடைகள், வாத்து, கோழிகள், முட்டைகள், இறைச்சி, கோழி கழிவுகள் ஆகியவற்றை கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சென்னை கால்நடை நோய் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சத்தியநாராயணன் புளியரை சோதனை சாவடிக்கு திடீரென நேரில் வந்து பறவை காய்ச்சல் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி கிருமிநாசினி தெளிப்பதை பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது கால்நடை டாக்டர்கள் ஜெயபால்ராஜா, செல்வராணி, கால்நடை ஆய்வாளர் தினேஷ், கால்நடை பராமரிப்பு உதவி யாளர் லூர்து பிரான்சிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • செங்கோட்டையை அடுத்த புளியரை அருகே உள்ள கேசவபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அருள் செல்வக்குமார். இவரது மகள் அமுதா(வயது 21).
    • குற்றாலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்து வந்தார்.

    நெல்லை:

    செங்கோட்டையை அடுத்த புளியரை அருகே உள்ள கேசவபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அருள் செல்வக்குமார். இவரது மகள் அமுதா(வயது 21).

    இவர் குற்றாலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் திடீரென மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமீப காலமாக அமுதாவுக்கு உடல்நிலை பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சரள்மண் அள்ளுவதற்கான போலி ரசீது தயார் செய்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • இதையடுத்து 1 டிப்பர் லாரி, 3 டிராக்டர்கள், 1 ஜே.சி.பி. உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நெல்லை:

    செங்கோட்டையை அடுத்த புளியரை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து சரள் மண் கடத்தப்படுவதாக புளியரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உடனே போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் லாரி, டிராக்டர்களை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றனர்.

    அதற்குள் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் அந்த பகுதியை சேர்ந்த மணிகண்டன், மதன், அய்யப்பன், அரிகரன், ரமேஷ், கார்மேக கண்ணன், மகேந்திரன், மணி ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் சரள்மண் அள்ளுவதற்கான போலி ரசீது தயார் செய்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 1 டிப்பர் லாரி, 3 டிராக்டர்கள், 1 ஜே.சி.பி. உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • முன்னதாக கடந்த 5-ந்தேதி விக்னேஷ்வர பூஜை புண்யாகவாசனம், மகாகணபதி ஹோமம், பூர்ணா குதி தீபாராதனையுடன் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை தாலுகா புளியரை தெற்கு தெருவில் வீற்றிருக்கும் விக்ன ராஜ விநாயகர் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கடந்த 5-ந்தேதி விக்னேஷ்வர பூஜை புண்யாகவாசனம், மகாகணபதி ஹோமம், பூர்ணா குதி தீபாராதனையுடன் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜை மற்றும் மூன்றாம் கால யாகபூஜை நடைபெற்றது.

    நேற்று நான்காம் கால யாக பூஜையுடன், தொடங்கிய விழா அதிகாலை 4 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 4.20 மணிக்கு விமானம் கும்பாபிஷேகமும், 6.45 மணிக்கு மூலவர் மகா கும்பாபிஷேகமும், 9 மணிக்கு மகா அபிஷேமும், 9.30 மணிக்கு தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

    கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரி புளியரையில் 1-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அய்யாத்துரை பாண்டியன் பேரவை அறிவித்துள்ளது.
    சங்கரன்கோவில்:

    தென் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி டாக்டர்.அய்யாத்துரை பாண்டியன் தலைமையில் நாளை மறுநாள் (1-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை புளியரை சோதனை சாவடி அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

    இதில், வழக்கறிஞர் முன்னாள் எம்.எல்.ஏ. குருநாதன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கணேச பாண்டியன், பெரியார், வைகை பாசன விவசாய சங்க செயலாளர் அன்வர் பாலசிங்கம், நெல்லை மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம், தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு நெல்லை மண்டல செயலாளர் செல்லத்துரை,

    நெல்லை, தென்காசி ஒருங்கிணைந்த விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாடசாமி, செண்பகவல்லி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பாண்டியன்ம மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்கின்றார்கள் என அய்யாத்துரை பாண்டியன் பேரவை தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    மேலும் இதில் கட்சி பாகுபாடு இல்லாது இயற்கை வளத்தை காக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பொதுமக்களும் அணி திரள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
    ×