புளியரையில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

செங்கோட்டையை அடுத்த புளியரை அருகே உள்ள கேசவபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அருள் செல்வக்குமார். இவரது மகள் அமுதா(வயது 21).குற்றாலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்து வந்தார்.
புளியரையில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
Published on

நெல்லை:

செங்கோட்டையை அடுத்த புளியரை அருகே உள்ள கேசவபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அருள் செல்வக்குமார். இவரது மகள் அமுதா(வயது 21).

இவர் குற்றாலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் திடீரென மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாக அமுதாவுக்கு உடல்நிலை பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com