என் மலர்

  நீங்கள் தேடியது "Border"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஓணம் பண்டிகையை முன்னிட்டு தடை செய்யப்பட்ட பொருட்கள் போன்றவை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு செல்வதை தடுக்கும்
  • கேரளா ஆரியங்காவு சோதனை சாவடியில் புளியரை காவல் துறையினர் மற்றும் கேரளா கலால் குழு இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

  தென்காசி:

  தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தடை செய்யப்பட்ட பொருட்கள் போன்றவை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு செல்வதை தடுக்கும் விதமாக கேரளா ஆரியங்காவு சோதனை சாவடியில் புளியரை காவல் துறையினர் மற்றும் கேரளா கலால் குழு இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

  இதில் செங்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர், சஞ்சய் காந்தி மற்றும் தமிழக கேரள போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு,அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனை செய்த பிறகே மாநிலங்களுக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் பார்டர்.
  • இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் நடித்துள்ளார்.

  இயக்குனர் அறிவழகன் மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'பார்டர்'. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொண்டுள்ளார்.

   

  பார்டர்

  பார்டர்

  இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த வருடம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த சமயத்தில் சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப் போனது. அதன்பின்னர் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

   

  பார்டர்

  பார்டர்

  பார்டர் படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை நீண்ட இடைவெளிக்கு பிறகு படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய-சீன எல்லையில் ரூ.21,040 கோடி செலவில் போர் முக்கியத்துவம் வாய்ந்த 44 சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. #IndiaChinaBorder #Road
  புதுடெல்லி:

  இந்தியா-சீனா இடையிலான எல்லை கோடு சுமார் 4 ஆயிரம் கி.மீ. நீளம் கொண்டது. காஷ்மீர், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக இது செல்கிறது. இந்த எல்லையில், ரூ.21 ஆயிரத்து 40 கோடி செலவில், போர் முக்கியத்துவம் வாய்ந்த 44 சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

  மோதல் சமயத்தில் ராணுவத்தினரை விரைவாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்ப வசதியாக இச்சாலைகள் போடப்படுகின்றன. மத்திய பொதுப்பணித்துறையிடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மத்திய மந்திரிசபை விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளது.

  இதுபோல், இந்திய-பாகிஸ்தான் எல்லையையொட்டி, ரூ.5 ஆயிரத்து 400 கோடி செலவில், 2,100 கி.மீ. நீளத்துக்கு உட்புற சாலைகள் மற்றும் முக்கிய சாலைகள் போடப்பட உள்ளன.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எல்லைப்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்தியில் உள்ள மோடி அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். #JammuBorderResidents #JKCeasefire
  ஜம்மு:

  ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக எல்லையோரம் வசிக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று  பர்க்வால் செக்டாரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதால், ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

  இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தாரா சந்த் சென்று பார்வையிட்டார். 

  அப்போது அவர் கூறுகையில், “பொதுமக்களை பாகிஸ்தான் குறிவைத்து தாக்குவது வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது. ஜம்மு காஷ்மீரின் எல்லையோரம் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மோடி அரசு முழுமையாக தவறிவிட்டது. பாகிஸ்தானுடனான மோதலை கையாள்வதில் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளதால், கடந்த 4 ஆண்டுகளில் அதிக உயிரிழப்பும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது” என்றார். #JammuBorderResidents #JKCeasefire
  ×