ஒரு வழியாக ரிலீஸ் தேதியை அறிவித்த அருண் விஜய்

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் பார்டர்.இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் நடித்துள்ளார்.
அருண் விஜய்
அருண் விஜய்
Published on

இயக்குனர் அறிவழகன் மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'பார்டர்'. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொண்டுள்ளார்.

பார்டர்
பார்டர்

பார்டர்

இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த வருடம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த சமயத்தில் சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப் போனது. அதன்பின்னர் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

பார்டர்
பார்டர்

பார்டர்

பார்டர் படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை நீண்ட இடைவெளிக்கு பிறகு படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com