என் மலர்
விளையாட்டு

பரிசு தந்த ஜெய் ஷா.. பூரித்த மெஸ்ஸி - டெல்லி மைதானத்தில் நடந்த ஹைலைட்
- மெஸ்ஸியும் அவரது குழுவும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
- முன்னாள் இந்திய கால்பந்து கேப்டன் பைச்சுங் பூட்டியாவை சந்தித்தார்.
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது குழுவினரின் மூன்று நாள் இந்திய சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவடைந்தது.
கொல்கத்தா, ஐதராபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த சுற்றுப்பயணத்தில் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி வீரர்களும் லூயிஸ் சுவாரெஸ் மற்றும் அர்ஜென்டினா ரோட்ரிகோ டி பால் உள்ளிட்ட புகழ்பெற்ற வீரர்களும் அவருடன் வந்திருந்தனர்.
இன்று, மதியம் மும்பையில் இருந்து டெல்லி வந்தடைந்த மெஸ்ஸியும் அவரது குழுவும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
மாலை 4 மணிக்குப் பிறகு நடந்த இந்த நிகழ்வில், மெஸ்ஸி குழந்தைகளுடன் கலந்துரையாடி, கால்பந்து விளையாடினார்.
முன்னாள் இந்திய கால்பந்து கேப்டன் பைச்சுங் பூட்டியா மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா ஆகியோரை அவர் சந்தித்தார். ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் அணியின் 10வது எண் ஜெர்சியை மெஸ்ஸிக்கு பரிசளித்தார்.
மேலும் 2026-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான டிக்கெட்டைப் பரிசாக வழங்கி, அவரைப் போட்டிகளை காண வருமாறு நேரில் அழைப்பு விடுத்தார்.






