என் மலர்
கால்பந்து

ரொனால்டோவின் சாதனையை சமன் செய்தார் கில்லியன் எம்பாப்பே!
- ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் 2009 முதல் 2018 வரை விளையாடினார்.
- ரியல் மாட்ரிட் அணியில் ரொனால்டோ மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) ரியல் மாட்ரிட் அணியில் விளையாடிய காலத்தில் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவர் ரியல் மாட்ரிட் அணியில் 2009 முதல் 2018 வரை விளையாடினார்.
2009-ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து ரூ.94 மில்லியன் கொடுத்து வாங்கப்பட்டார். அப்போது இது உலக சாதனை தொகையாக இருந்தது.
2018-ம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணியில் இருந்து ஜுவென்டஸ் அணிக்கு சென்றார். அவரை அந்த அணி ரூ.100 மில்லியன் கொடுத்து வாங்கப்பட்டார்.
ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் மொத்தம் 438 போட்டிகளில் விளையாடி 450 கோல்கள் அடித்தார். இது அந்த அணியின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், ரியல் மேட்ரிட் அணிக்காக ஓராண்டில் அதிக கோல்கள் (59) அடித்தவர் என்ற ரோனால்டோவின் சாதனையை கில்லியன் எம்பாப்பே சமன் செய்துள்ளார்.






