search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் அணி
    X
    சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் அணி

    ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் - சாம்பியன் பட்டம் வென்றது ரியல் மாட்ரிட்

    ரியல் மாட்ரிட் அணி வெல்லும் 14-வது ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
    மாட்ரிட்:

    கிளப் அணிகள் இடையேயான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), லிவர் பூல் (இங்கிலாந்து) அணிகள் மோதின.

    பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 59வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் லிவர் பூல் அணியை வீழ்த்தி ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    ரியல் மாட்ரிட் அணியின் ரசிகர்கள் வெற்றியை கொண்டாடியபோது அவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×