search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் லீக்: ரியல் மாட்ரிட்டை 3-0 என பந்தாடியது சிஎஸ்கேஏ மாஸ்கோ
    X

    சாம்பியன்ஸ் லீக்: ரியல் மாட்ரிட்டை 3-0 என பந்தாடியது சிஎஸ்கேஏ மாஸ்கோ

    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட்டை 3-0 என சிஎஸ்கேஏ மாஸ்கோ பந்தாடி அதிர்ச்சி அளித்துள்ளது. #ChampionsLeague
    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ‘ஜி’ பிரிவில் இடம் பிடித்துள்ள ரியல் மாட்ரிட் தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கேஏ மாஸ்கோவை எதிர்கொண்டது. ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிஎஸ்கேஏ மாஸ்கோ அணி ஆச்சர்யம் அளிக்கும் வகையில் விளையாடியது.

    ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் சாலோவ், 43-வது நிமிடத்தில் ஜியோர்ஜி ஆகியோர் கோல் அடித்து அசத்தினர். இதனால் முதல் பாதி நேரத்தில் சிஎஸ்கேஏ மாஸ்கோ 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    2-வது பாதி நேரத்திலும் சிஎஸ்கேஏ மாஸ்கோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரியல் மாட்ரிட் அணியை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் சிறப்பான வகையில் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் அர்னோர் ஒரு கோல் அடிக்க சிஎஸ்கேஏ மாஸ்கோ 3-0 என ரியல் மாட்ரிட்டை துவம்சம் செய்தது.



    ரியல் மாட்ரிட் தோல்வியடைந்தாலும் ‘ஜி’ பிரிவில் 6 போட்டிகளில் நான்கு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்ததோடு, நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ரோமா 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 9 புள்ளிகள் பெற்று நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
    Next Story
    ×