search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டி - லிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ரியல் மாட்ரிட்
    X

    சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டி - லிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ரியல் மாட்ரிட்

    ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி லிவர்பூல் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. #2018UEFAChampionsLeague
    ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் கீவ் நகரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) அணியும், லிவர்பூல் (இங்கிலாந்து) அணியும் மோதின.

    போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் அபாரமாக ஆடின. இதனால் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.



    இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கரிம் பென்சிமா முதல் கோல் அடித்தார். இதற்கு  பதிலடி கொடுக்கும் வகையில் லிவர்பூல் அணியின் சாடியோ மேன் 54-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.

    தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணி சிறப்பாக ஆடியது. அந்த அணியின் கரேத் பாலே 63 மற்றும் 82 வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது. #2018UEFAChampionsLeague
    Next Story
    ×