என் மலர்

  நீங்கள் தேடியது "tennis rankings"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவை சேர்ந்த பீட் சாம்ராஸ் 6 ஆண்டுகள் நம்பர்-1 இடத்தில் இருந்ததே சாதனையாக இருந்தது. இதை ஜோகோவிச் முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

  பாரீஸ்:

  உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரராக ஜோகோவிச் (செர்பியா) திகழ்கிறார். 34 வயதான அவர் 20 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்று ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோருடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார்.

  இந்த நிலையில் ஜோகோவிச் புதிய வரலாற்று சாதனை புரிந்துள்ளார். பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அவர் இறுதி போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்த ஆண்டு இறுதிவரை நம்பர்-1 இடத்தில் நீடிப்பார்.

  அவர் அரை இறுதியில் போலந்தை சேர்ந்த ஹூபர்ட்டை 3-6, 6-0, 7-6 (7-5) என்ற கணக்கில் வீழ்த்தினார்.

  ஜோகோவிச் தொடர்ந்து 348 வாரங்களாக நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறார். இந்த ஆண்டு இறுதி வரை அவர்தான் நம்பர்-1 இடத்தில் நீடிப்பார். இதன் மூலம் ஜோகோவிச் 7-வது ஆண்டாக நம்பர்-1 இடத்தில் இருக்கிறார்.

  அவர் ஏற்கனவே 2011, 2012, 2014, 2015, 2018, 2020, ஆகிய ஆண்டுகளில் நம்பர்-1 இடத்தில் இருந்தார். தற்போது இந்த ஆண்டிலும் (2021) முதல் வரிசையில் உள்ளார்.

  இதற்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த பீட் சாம்ராஸ் 6 ஆண்டுகள் நம்பர்-1 இடத்தில் இருந்ததே சாதனையாக இருந்தது. இதை ஜோகோவிச் முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். சாம்ராஸ் 1993 முதல் 1998 வரை தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தார்.

  ரோஜர் பெடரர் தொடர்ந்து 310 வாரங்கள் நம்பர்-1 இடத்தில் இருந்ததை ஜோகோவிச் கடந்த மார்ச் 8- ந் தேதி முறியடித்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த அமெரிக்க ஓபன் இறுதி போட்டியில் அவர் மெட்வதேவிடம் தோற்றார்.

  தற்போது பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சிறப்பாக ஆடி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

  ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 9 முறையும், பிரஞ்ச் ஓபன் பட்டத்தை 2 தடவையும், விம்பிள்டனை 6 முறையும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 3 தடவையும் கைப்பற்றி உள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான யூகி பாம்ப்ரி சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 84-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
  டென்னிஸ் வீரர்களுக்கான சர்வதேச டென்னிஸ் தரவரிசை நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியாவின் முன்னணி வீரரான யூகி பாம்ப்ரி 93-வது இடத்தில் இருந்து 84-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்றொரு வீரரான பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 14 இடங்கள் முன்னேறி 169-வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

  யூகி பாம்ப்ரி பிரெஞ்ச் ஓபனில் முதல் சுற்றோடு வெளியேறினாலும், சர்பிட்டோன் சேலஞ்சர் தொடரில் காலிறுதிக்கு முன்னேறினார். இதனால் 30 புள்ளிகள் கிடைத்தது. இதன்மூலம் 9 இடங்கள் முன்னேறினார்.  ராம்குமார் ராமநான் 7 இடங்கள் பின்தங்கி 128-வது இடத்திலும், சுமித் நகல் 14 இடங்கள் பின்தங்கி 234-வது இடத்திலும் உள்ளனர்.

  இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா 22-வது இடத்திலும், திவிஜ் ஷரன் 43-வது இடத்திலும், லியாண்டர் பயஸ் 59-வது இடத்திலும், புரவ் ராஜா 77-வது இடத்திலும் உள்ளனர்.
  ×