என் மலர்

  செய்திகள்

  ஜோகோவிச்
  X
  ஜோகோவிச்

  டென்னிஸ் தரவரிசை: ஜோகோவிச் புதிய சாதனை- 7வது ஆண்டாக நம்பர்-1 இடம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவை சேர்ந்த பீட் சாம்ராஸ் 6 ஆண்டுகள் நம்பர்-1 இடத்தில் இருந்ததே சாதனையாக இருந்தது. இதை ஜோகோவிச் முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

  பாரீஸ்:

  உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரராக ஜோகோவிச் (செர்பியா) திகழ்கிறார். 34 வயதான அவர் 20 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்று ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோருடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார்.

  இந்த நிலையில் ஜோகோவிச் புதிய வரலாற்று சாதனை புரிந்துள்ளார். பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அவர் இறுதி போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்த ஆண்டு இறுதிவரை நம்பர்-1 இடத்தில் நீடிப்பார்.

  அவர் அரை இறுதியில் போலந்தை சேர்ந்த ஹூபர்ட்டை 3-6, 6-0, 7-6 (7-5) என்ற கணக்கில் வீழ்த்தினார்.

  ஜோகோவிச் தொடர்ந்து 348 வாரங்களாக நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறார். இந்த ஆண்டு இறுதி வரை அவர்தான் நம்பர்-1 இடத்தில் நீடிப்பார். இதன் மூலம் ஜோகோவிச் 7-வது ஆண்டாக நம்பர்-1 இடத்தில் இருக்கிறார்.

  அவர் ஏற்கனவே 2011, 2012, 2014, 2015, 2018, 2020, ஆகிய ஆண்டுகளில் நம்பர்-1 இடத்தில் இருந்தார். தற்போது இந்த ஆண்டிலும் (2021) முதல் வரிசையில் உள்ளார்.

  இதற்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த பீட் சாம்ராஸ் 6 ஆண்டுகள் நம்பர்-1 இடத்தில் இருந்ததே சாதனையாக இருந்தது. இதை ஜோகோவிச் முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். சாம்ராஸ் 1993 முதல் 1998 வரை தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தார்.

  ரோஜர் பெடரர் தொடர்ந்து 310 வாரங்கள் நம்பர்-1 இடத்தில் இருந்ததை ஜோகோவிச் கடந்த மார்ச் 8- ந் தேதி முறியடித்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த அமெரிக்க ஓபன் இறுதி போட்டியில் அவர் மெட்வதேவிடம் தோற்றார்.

  தற்போது பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சிறப்பாக ஆடி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

  ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 9 முறையும், பிரஞ்ச் ஓபன் பட்டத்தை 2 தடவையும், விம்பிள்டனை 6 முறையும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 3 தடவையும் கைப்பற்றி உள்ளார்.

  Next Story
  ×