என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரிபாகினா
    X

    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரிபாகினா

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்தது.
    • இறுதிச்சுற்றில் பெலாரசின் சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ரியாத்:

    54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.

    லீக் சுற்றுகள் முடிவில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

    முதல் அரையிறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவும், 2வது அரையிறுதியில் பெலாரசின் அரினா சபலென்காவும் வென்றனர்.

    இந்நிலையில், இன்று நடந்த இறுதிப்போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, பெலாரசின் அரினா சபலென்கா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ரிபாகினா 6-3, 7-6 (7-0) என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.

    ரிபாகினா பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாக பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×