search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AUS Open"

    • டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த அவர், 'கிராண்ட்ஸ்லாம்' வெற்றிக் கோப்பையை காண்பித்தார்.
    • போபண்ணாவை பிரதமர் மோடி பாராட்டி மகிழ்ந்தார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில், ரோகன் போபண்ணா-மேத்யூ எப்டென் இணை சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் அதிக வயதில் 'கிராண்ட்ஸ்லாம்' பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை 43 வயது இந்திய வீரர் ரோகன் போபண்ணா படைத்தார்.

    இதையடுத்து அவருக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ரோகன் போபண்ணா வாழ்த்து பெற்றுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த அவர், 'கிராண்ட்ஸ்லாம்' வெற்றிக் கோப்பையை காண்பித்தார். அப்போது போபண்ணாவை பிரதமர் மோடி பாராட்டி மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படங்களை போபண்ணா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். #AUSOpen
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் பெட்ரா கிவிட்டோவா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    2-வது அரையிறுதி ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்)- 7-ம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) மோதினார்கள்.



    முதல் செட்டை ஒசாகா 6-2 என எளிதில் கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2-வது செட்டை பிளிஸ்கோவா 6-4 என  அதிரடியாக கைப்பற்றினார்.

    வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் ஒசாகா கை ஓங்கியது. அவர் 3-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றி பிளிஸ்கோவாவை 2-1 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இந்திய நேரப்படி நாளை மதியம் 2 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் நவோமி ஒசாகா - பெட்ரா கிவிட்டோவா பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடப்பு சாம்பியனான ரோஜர் பெடரரை வீழ்த்திய 20 வயது கிரீஸ் இளைஞரான சிட்ஜிபஸ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். #AUSOpen
    20 வயதான கிரீஸ் நாட்டின் இளம் வீரரான ஸ்டெபனோஸ் சிட்ஸிபஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடப்பும் சாம்பியனும், 2-வது நிலை வீரருமான நட்சத்திர வீரரான ரோஜர் பெடரரை கடும்போராட்டத்திற்குப்பின் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தினார்.

    இன்று நடைபெற்ற காலிறுதியில் 14-ம் நிலை வீரரான சிட்ஸிபஸ் 22-ம் நிலை வீரரான பாடிஸ்டா அகுட்டை எதிர்கொண்டார். முதல் செட்டை ஸ்டெபனோஸ் சிட்ஸிபஸ் 7-5 எனக்கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 6-4 என இழந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட சிட்ஸிபஸ் 3-வது செட்டை 6-4 என அசத்தலாக கைப்பற்றினார்.

    4-வது செட்டில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் சிட்ஸிபஸ் 7(7) - 6(2) எனக்கைப்பற்றினார். இதனால் 7-5, 4-6, 6-4, 7(7)-6(2) என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ் #AUSOpen
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 16-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப்பை எதிர்கொண்டார்.

    இந்த போட்டி செரீனாவிற்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் செட்டை செரீனா 1-6 என எளிதில் இழந்தார். பின்னர் சுதாரித்துக்கொண்ட செரீனா ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 2-வது செட்டை 6-4 எனவும், 3-வது செட்டை 6-4 எனவும் கைப்பற்றி வெற்றிபெற்றார்.



    நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியதால், சாம்பியன் பட்டத்தை வெல்லும் நம்பிக்கையில் செரீனா உள்ளார்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்த அலெக்சாண்டர் ஸ்வேரேவ் கோபத்தில் ராக்கெட்டை உடைத்தார். #AUSOpen
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த 4-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வேரேவ், கனடாவைச் சேர்ந்த 16-ம் நிலை வீரரான மிலோஸ் ரயோனிக்கை எதிர்கொண்டார்.



    இதில் ரயோனிக் ஸ்வேரேவிற்கு அதிர்ச்சி அளித்தார். கண்மூடி திறப்பதற்குள் முதல் இரண்டு செட்டுகளையும் ரயோனிக் 6-1, 6-1 எனக் கைப்பற்றினார். இதில் இருந்து ஸ்வேரேவால் மீள முடியவில்லை. இதனால் மிகவும் அப்செட் ஆனார். 3-வது செட்டில் கடுமையான போராடினார். இருந்தாலும் 6(5) - 7(7) தோல்வியடைந்து வெளியேறினார்.



    நேர்செட் கணக்கில் தோல்வியடைந்த அலெக்சாண்டர் ஸ்வேரேவ் தனது ராக்கெட்டை தரையில் அடித்து உடைத்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


    அடையாள அட்டை அணியாததால் பாதுகாவலர் நடப்பு சாம்பியனான ரோஜர் பெடரரை தடுத்து நிறுத்தினார். #AUSOpen #Federer
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடி வரும் பிரபல வீரரான ரோஜர் பெடரர் போட்டியில் பங்கேற்பதற்காக மைதானத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் தனது அடையாள அட்டையை அணியாமல் சென்றார்.

    இதைப் பார்த்த பாதுகாவலர் ரோஜர் பெடரரிடம் அடையாள அட்டையை காண்பிக்கும்படி கூறி அவரை தடுத்து நிறுத்தினார். உடனே பெடரர் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் தனது அணியினர் அடையாள அட்டையை கொண்டு வருவதாக கூறி சிறிது நேரம் அங்கு காத்திருந்தார். பின்னர் அடையாள அட்டையை காண்பிடித்துவிட்டு மைதானத்திற்குள் சென்றார்.

    பிரபல வீரரான பெடரர் பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட விதத்தை இணைய தளத்தில் பலர் பாராட்டியுள்ளனர்.
    ×