search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய ஓபன்: தோல்வியடைந்த கோபத்தில் ராக்கெட்டை உடைத்த அலெக்சாண்டர்  ஸ்வேரேவ்
    X

    ஆஸ்திரேலிய ஓபன்: தோல்வியடைந்த கோபத்தில் ராக்கெட்டை உடைத்த அலெக்சாண்டர் ஸ்வேரேவ்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்த அலெக்சாண்டர் ஸ்வேரேவ் கோபத்தில் ராக்கெட்டை உடைத்தார். #AUSOpen
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த 4-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வேரேவ், கனடாவைச் சேர்ந்த 16-ம் நிலை வீரரான மிலோஸ் ரயோனிக்கை எதிர்கொண்டார்.



    இதில் ரயோனிக் ஸ்வேரேவிற்கு அதிர்ச்சி அளித்தார். கண்மூடி திறப்பதற்குள் முதல் இரண்டு செட்டுகளையும் ரயோனிக் 6-1, 6-1 எனக் கைப்பற்றினார். இதில் இருந்து ஸ்வேரேவால் மீள முடியவில்லை. இதனால் மிகவும் அப்செட் ஆனார். 3-வது செட்டில் கடுமையான போராடினார். இருந்தாலும் 6(5) - 7(7) தோல்வியடைந்து வெளியேறினார்.



    நேர்செட் கணக்கில் தோல்வியடைந்த அலெக்சாண்டர் ஸ்வேரேவ் தனது ராக்கெட்டை தரையில் அடித்து உடைத்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


    Next Story
    ×