search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    விம்பிள்டன் டென்னிஸ்: அசரென்கா அதிர்ச்சி தோல்வி
    X

    விம்பிள்டன் டென்னிஸ்: அசரென்கா அதிர்ச்சி தோல்வி

    • போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் கடும் போராட்டத்திற்கு பின் 2-1 என வெற்றி பெற்றார்
    • 3-வது செட்டில் 9-11 என டைபிரேக்கரில் வெற்றி வாய்ப்பை இழந்தார்

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல்நிலை வீராங்கனையான ஸ்வியாடெக் (போலந்து) 4-வது சுற்றில் 14-வது வரிசையில் உள்ள பெலிண்டா பென்சிக்கை எதிர்கொண்டார். இதில் ஸ்வியாடெக் 6-7 (4-7), 7-6 (7-2), 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று கால்இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் 4-வது வரிசையில் இருக்கும் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 6-1, 6-3 என்ற நேர்செட் கணக்கில் உக்ரைனை சேர்ந்த லெசியா சுரென்கோவை வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் வான்ட்ரூ சோவா (செக் குடியரசு), சுவிட்டோலினா (உக்ரைன்) ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.

    முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 19-வது வரிசையில் உள்ளவருமான அசரென்கா (பெலாரஸ்) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். அவர் 2-6, 6-4, 6(9)-7(11) என்ற செட் கணக்கில் சுவிட்டோலினாவிடம் தோற்றார்.

    கால்இறுதி ஆட்டத்தில் ஸ்வியாடெக்- சுவிட்டோலினா, பெகுவா- வாண்ட்ரூ சோவா மோதுகிறார்கள்.

    23 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் போலந்தை சேர்ந்த 17-ம் நிலை வீரர் ஹூபர்ட் ஹூர்காசை எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 7-6(8-6), 7-6(8-6) என்ற செட் கணக்கில் முன்னணியில் இருந்தபோது ஆட்டம் நிறுத்தப்பட்டது. இரவு 11 மணி ஆனதால் போட்டி நிறுத்தப்பட்டது. இன்று அந்த ஆட்டம் தொடர்ந்து நடைபெறும்.

    8-வது வரிசையில் உள்ள சின்னர் (இத்தாலி) 7-6 (7-4), 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கொலம்பியாவை சேர்ந்த டேனியல் கேலனை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

    மற்ற ஆட்டத்தில் ரூப்லெவ், ரோமன் சபியுலின் (ரஷியா), வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.

    Next Story
    ×