என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடாசா"

    • கடந்தாண்டு நடாஷா தனக்கென ரூ.3.04 கோடி மதிப்பிலான ஆரஞ்சு நிற லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியிருந்தார்
    • மஹிகா சர்மாவை டேட் செய்துவருகிறார் ஹர்திக்.

    இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது முன்னாள் மனைவி நடாஷாவிற்கும், அவரது மகன் அகஸ்தியாவிற்கும் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார். மும்பையில் உள்ள ஷோரூமில் இந்த காரை நடாஷா மற்றும் அவரது மகன் அகஸ்தியா பெற்றுக் கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    காரின் பின்னால் "தந்தையிடமிருந்து அகஸ்தியாவிற்கு ஒரு பரிசு" என்ற வாசகம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்மூலமே இது ஹர்திக் வழங்கும் பரிசு என தெரியவந்தது. ஹர்திக் பாண்டியாவும், நடாசா ஸ்டான்கோவிச்சும் நீண்டநாட்களாக காதலித்து வந்தநிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து இந்த ஜோடி 2024-ல் பிரிந்தது. இருவரும் பிரிந்திருந்தாலும், மகனை மாறிமாறி கவனித்து வருகின்றனர்.

    விவாகரத்துக்குப் பின் மாடலிங் துறையில் உள்ள மஹிகா ஷர்மா என்பவரை ஹர்திக் காதலித்து வருகிறார். இந்தவாரம் கூட காதலியின் பிறந்தநாளை இருவரும் இணைந்து கொண்டாடிய புகைப்படங்கள் வைரலானது. கடந்தாண்டு நடாஷா தனக்கென ரூ.3.04 கோடி மதிப்பிலான ஆரஞ்சு நிற லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    • நடாசா அடுத்த மாதம் 23-ந் தேதி அதிபராக பொறுப்பேற்பார்
    • நடாசா டிரம்பின் மனைவி மெலனியாவுக்கு நெருக்கமானவர்.

    லியுப்லியானா

    மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முன்னாள் வெளியுறவு மந்திரி அன்ஷே லோகார் உள்பட 7 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் யாருக்கும் வெற்றிக்கு நிர்ணயிக்கப்பட்ட வாக்குகள் கிடைக்காத நிலையில் அன்ஷே லோகார் அதிக வாக்குகளுடன் முதல் இடத்தையும், அவருக்கு அடுத்தபடியாக சுயேட்சை வேட்பளராக களம் இறங்கிய பெண் வக்கீலும், முன்னாள் பத்திரிகையாளருமான நடாசா பிர்க் முசார் 2-வது இடத்தையும் பிடித்தனர்.

    இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் நேற்று முன்தினம் 2-வது சுற்று தேர்தல் நடந்தது. முதல் சுற்று தேர்தலில் நடாசா சுயேட்சையாக போட்டியிட்ட நிலையில் 2-வது சுற்று தேர்தலில் அவரை பிரதமர் ராபர்ட் கோலோப்பின் மத்திய இடதுசாரி கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரித்தன. இந்த நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகின.

    இதில் நடாசா 54 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். முன்னாள் வெளியுறவு மந்திரியான அன்ஷே லோகார் 46 சதவீத வாக்குகளுடன் தோல்வியை தழுவினார். இதன் மூலம் நடாசா ஸ்லோவேனியா நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்வாகியுள்ளார். அவர் அடுத்த மாதம் 23-ந் தேதி அதிபராக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    54 வயதான நடாசா அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலனியாவுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×