மத்திய அமைச்சர் அமித்ஷாவை நயினார் நாகேந்திரன் இன்று இரவு சந்திக்கிறார்

டெல்லியில் உள்ள இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நயினார் சந்திக்கிறார்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார்.
மத்திய அமைச்சர் அமித்ஷாவை நயினார் நாகேந்திரன் இன்று இரவு சந்திக்கிறார்
Published on

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார். டெல்லியில் உள்ள இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை குறித்து அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, யாத்திரையின்போது மக்களிடம் இருந்துபெறப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை நிர்மலா சீதாராமனிடம் நயினார் நாகேந்திரன் வழங்கினார்.

யாத்திரையின்போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதி அமைச்சகத்தைச் சார்ந்த மனுக்களை வழங்கியதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com