என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அமைச்சர் அமித் ஷா"

    • எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
    • முத்துராமலிக்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க கோரி மனு.

    டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

    அப்போது, "முத்துராமலிக்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மனு அளித்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து,

    தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் ஐயா உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கிட வேண்டும் என அதிமுக சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தினேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • ஹெலிகாப்டர் மூலம் நெல்லையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் சென்றார் அமித்ஷா.
    • மாநாட்டில் பாஜக மாநில, தேசிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

    நெல்லை தச்சநல்லூர் பகுதியில் நடைபெறும் மண்டல பூத் கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மேலும், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் சென்றார்.

    அங்கு, பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டு மேடைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தார்.

    இந்த மாநாட்டில் பாஜக மாநில, தேசிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிகளின் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

    • பாஜகவின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சென்ற அண்ணாமலையின் பணி முன் உதாரணமானது.
    • பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடமிருந்து மட்டுமே விருப்ப மனு பெறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்காக அண்ணாமலை ஆற்றிய பணி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் புகழ்ந்து பகிர்ந்துள்ளார்.

    அப்போது, பாஜகவின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலைக்கு பொறுப்பு வழங்கப்படும் என அவர் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், பாஜகவின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சென்ற அண்ணாமலையின் பணி முன் உதாரணமானது.

    பாஜகவின் தேசிய பணிகளுக்கு அண்ணாமலையின் திறமை பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

    இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில் அமித் ஷா கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடமிருந்து மட்டுமே விருப்ப மனு பெறப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு பாஜக பிரிவின் தலைவராக, அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, அண்ணாமலையின் பங்களிப்பு அளப்பரியது.

    பாஜக கட்சியின் தேசிய பணிகளுக்கு அண்ணாமலையின் திறமை பயன்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி ஓட்டலில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
    • மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பார் என்று கூறப்பட்டது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றிரவு சென்னை வந்தார். இதனை தொடர்ந்து இன்று மதியம் 12 மணிஅளவில் அமித்ஷா செய்தியாளர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    பின்னர், மயிலாப்பூரில் அமைந்துள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கு அமித்ஷா சென்றார். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக குருமூர்த்தி- அமித்ஷா இருவர் மட்டுமே ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது கூட்டணி தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதைதெடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி ஓட்டலில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பார் என்று கூறப்பட்டது.

    இதற்காக, செய்தியாளர் சந்திப்பு அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. பேனரில் நயினார் நாகேந்திரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. எல்.இ.டி. திரையில் ஜெ.பி.நட்டாவுக்கு அருகில் அண்ணாமலையின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

    அதனால், செய்தியாளர் சந்திப்பு அரங்கில் இதுவரை யாரும் வராததால் குழப்பம் நீடித்து வருகிறது.

    இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • முக்கிய தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வரும் 5ம் தேதி அமித்ஷா சென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தல், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நடைபெற உள்ளது.

    இதனால், தேர்தலில் வெற்றி கனியை சுவைக்க, கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தமிழகத்திற்கு மூன்று முறை வந்து பிரசாரம் நடத்தினார்.

    இந்நிலையில், மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக வரும் ஏப்ரல் 4ம் தேதி அன்று மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார்.

    இதைதொடர்ந்து, வரும் 5ம் தேதி அமித்ஷா சென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    சென்னையை அடுத்து, மதுரை, சிவகங்கை தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • அமித் ஷாவின் அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
    • பிற மாநில முதலமைச்சர்களும் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    அரசியலமைப்பு மீதான விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது.

    இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

    அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும், பிற மாநில முதலமைச்சர்களும் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், அம்பேத்கர் குறித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை கண்டித்து, திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, இன்று காலை 11.30 மணியளவில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

    • தமிழகம் முழுவதும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
    • அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    அம்பேத்கரை அவமதித்ததை கண்டித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிராக இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல், தமிழகம் முழுவதும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.

    அம்பேத்கரை அவமதித்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    இதில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளார். ராமநாதபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    போராட்டத்தின் ஒரு பகுதியாக, அமித்ஷாவின் உருவ பொம்மையை எரித்து தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

    இதேபோல், திண்டுக்கல் ரெயில் நிலையம் வழியே மாநகர மாவட்ட செயலாளர் மைதீன்பாவா தலைமையில் திரண்ட அக்கட்சியினர் ஏற்கனவே தாங்கள் மறைத்து கொண்டு வந்திருந்த அமித்ஷாவின் உருவ பொம்மையை தீவைத்து எரித்தனர். அப்போது அவரை உடனடியாக மத்திய மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோசமிட்டனர்.

    இதனையடுத்து போலீசார் உருவ பொம்மையை பறித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 30 வி.சி.க.வினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    • தொகுதி மறுவரையறை பற்றி மத்திய அரசுதான் தெளிவுபடுத்த முடியும் என அண்ணாமலை கூறியிருந்தார்.
    • தொகுதி மறுவரையரை நடக்கும் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

    தொகுதி மறுவரையறை தொடர்பான அமித்ஷாவின் கருத்தில் தெளிவு தேவை என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை பற்றி மத்திய அரசுதான் தெளிவுபடுத்த முடியும் என அண்ணாமலை கூறியிருந்தார்.

    தமிழ்நாடு பாஜக தலைவரும் மத்திய அரசால் மட்டுமே தெளிவுபடுத்த முடியும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கனிமொழி எம்.பி மேலும் கூறியிருப்பதாவது:-

    தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு எந்த நாடாளுமன்ற தொகுதிகளையும் இழக்காது என அமித்ஷா கூறுகிறார்.

    Pro rata அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடக்கும் எனக் கூறுகிறார். தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்களுக்கே அதற்கு அர்த்தம் தெரியவில்லை.

    எந்த அடிப்படையில் தொகுதி மறுவரையரை நடக்கும் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

    மக்கள்தொகை அடிப்படையில் இது நடந்தால், இத்தனை ஆண்டுகளாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் பிரிநிதித்துவம் குறையும்.

    அதேசமயம் மக்கள்தொகையை பொருட்படுத்தாத மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். பாஜகவின் சொந்த அரசியலுக்காக, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×