தொகுதி மறுவரையறை: அமித்ஷாவின் கருத்து தொடர்பாக தெளிவு தேவை- கனிமொழி எம்.பி

தொகுதி மறுவரையறை பற்றி மத்திய அரசுதான் தெளிவுபடுத்த முடியும் என அண்ணாமலை கூறியிருந்தார்.தொகுதி மறுவரையரை நடக்கும் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
தொகுதி மறுவரையறை: அமித்ஷாவின் கருத்து தொடர்பாக  தெளிவு தேவை- கனிமொழி எம்.பி
Published on

தொகுதி மறுவரையறை தொடர்பான அமித்ஷாவின் கருத்தில் தெளிவு தேவை என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை பற்றி மத்திய அரசுதான் தெளிவுபடுத்த முடியும் என அண்ணாமலை கூறியிருந்தார்.

தமிழ்நாடு பாஜக தலைவரும் மத்திய அரசால் மட்டுமே தெளிவுபடுத்த முடியும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கனிமொழி எம்.பி மேலும் கூறியிருப்பதாவது:-

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு எந்த நாடாளுமன்ற தொகுதிகளையும் இழக்காது என அமித்ஷா கூறுகிறார்.

Pro rata அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடக்கும் எனக் கூறுகிறார். தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்களுக்கே அதற்கு அர்த்தம் தெரியவில்லை.

எந்த அடிப்படையில் தொகுதி மறுவரையரை நடக்கும் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

மக்கள்தொகை அடிப்படையில் இது நடந்தால், இத்தனை ஆண்டுகளாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் பிரிநிதித்துவம் குறையும்.

அதேசமயம் மக்கள்தொகையை பொருட்படுத்தாத மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். பாஜகவின் சொந்த அரசியலுக்காக, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com