மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது ஏன்?- எடப்பாடி பழனிசாமி விளக்கம்

எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.முத்துராமலிக்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க கோரி மனு.
மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது ஏன்?- எடப்பாடி பழனிசாமி விளக்கம்
Published on

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது, "முத்துராமலிக்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மனு அளித்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து,

தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் ஐயா உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கிட வேண்டும் என அதிமுக சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தினேன்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com