என் மலர்
நீங்கள் தேடியது "indigo flight"
- மதுரை விமான நிலையம் அருகே விராதனூர், திருமங்கலம் பகுதிகளில் இண்டிகோ விமானம் வானில் வட்டமடித்தது.
- டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐதராபாத்தில் இருந்து மதுரை வந்த இண்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக வானில் வட்டமடித்தது. மதுரை விமான நிலையம் அருகே விராதனூர், திருமங்கலம் பகுதிகளில் இண்டிகோ விமானம் வானில் வட்டமடித்தது.
வானிலை சீராகாத நிலையில் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக,தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- வழக்கத்தைவிட கூடுதலாக 10 கிலோ எடையிலான உடைமைகளை எடுத்து செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள்.
- இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கம் மற்றும் செல்போன் செயலி மூலம் பதிவு செய்பவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.
இந்திய விமான நிறுவனமான 'இண்டிகோ', பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு புதிய கட்டண சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. மாணவர்களின் பயண தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த சலுகையின்படி 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி-கல்லூரி மாணவர்கள் இண்டிகோ விமானத்தில் 6 சதவீத கட்டண சலுகையுடன் அந்த நிறுவனத்தின் உள்நாட்டு விமானங்களில் பயணிக்கலாம். மேலும் வழக்கத்தைவிட கூடுதலாக 10 கிலோ எடையிலான உடைமைகளை எடுத்து செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள்.
இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கம் மற்றும் செல்போன் செயலி மூலம் பதிவு செய்பவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. கட்டண சலுகையை பெறும் மாணவர்கள் விமான புறப்பாட்டுக்கு முன்னதாக ஆவணங்கள் சோதனையின்போது பள்ளி-கல்லூரி அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
- நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
- விமானத்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
டெல்லி:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நகருக்கு இண்டிகோ விமானம் நேற்று இரவு புறப்பட்டது.
இந்நிலையில் டெல்லி அருகே நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து, விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசர அவரசமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதேவேளை, விமானத்தில் பயணித்த பயணிகள் எண்ணிக்கை குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.
- பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துவதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் திடீரென இண்டிகோ விமான சேவை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழில்நுட்ப கோளாறால் விமான நிலையங்களில் Check-in செய்ய தாமதமாவதால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இண்டிகோ இணையதளத்தில் விமான டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்தால், பாதிப்பு சரி செய்யப்பட்டு விரைவில் விமான சேவை இயக்கு நிலைக்கு திரும்பும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துவதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மும்பையில் இருந்து கத்தார் செல்லவிருந்த இண்டிகோ விமானம் ரத்து
- சுமார் 250 முதல் 300 பயணிகள் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது.
மும்பையில் இருந்து கத்தாரின் தோஹாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், 5 மணிநேரத்திற்கு மேலாக தாமதம் ஆனதால் பயணிகள் விரக்தி அடைந்தனர்.
அதிகாலை 3:55 மணிக்கு இந்த விமானம் புறப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் புறப்படவில்லை. விமானத்திற்குள் 5 மணிநேரம் பயணிகள் காத்திருந்தனர்.
பின்னர் ஒருகட்டத்தில் பொறுமையிழந்த பயணிகள் விமானத்தை விட்டு கீழே இறக்கி விடுமாறு வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் பயணிகள் விமான நிலையத்தில் உள்ள ஒரு ஹோல்டிங் ஏரியாவில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
சுமார் 250 முதல் 300 பயணிகள் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது. தங்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு எதுவும் வழங்கப்படவில்லை என்று விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
5 மணிநேர தாமதத்திற்கு பிறகு இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டது. விமானம் ரத்து செய்யப்பட்டதற்கு பயணிகளிடம் இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கோரியது.
வாடிக்கையாளர்களுக்கு ஹோட்டல் தங்குமிடங்கள் வழங்குவதாகவும் அவர்கள் செல்லும் இடங்களுக்கு மீண்டும் விமான டிக்கெட் முன்பதிவு செய்து தரப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- மும்பையில் தரையிறங்கியதும் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டன.
- விமானம் மீண்டும் பயன்பாட்டு பகுதிக்கு அனுப்பப்படும்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் வீண் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவல் தெரிவித்த இண்டிகோ, "சென்னையில் இருந்து மும்பைக்கு சென்ற இண்டிகோ விமானம் 6E 5149-க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமானம் மும்பையில் தரையிறங்கியதும், பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டன."
"முதற்கட்டமாக விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தினர். சோதனை முழுமை பெற்றதும், விமானம் மீண்டும் பயன்பாட்டு பகுதிக்கு அனுப்பப்படும்," என்று தெரிவித்தது.
கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக விமான நிலைய அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் பயணிகள் என பலரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
- விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்டது.
- இதனால் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுடெல்லி:
டெல்லியில் இருந்து வாரணாசி செல்வதற்காக இன்று காலை இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டனர்.
விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில், இண்டிகோ நிறுவனத்திற்கு விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மிரட்டல் வெளியானது.
தகவலறிந்து விமான நிலைய அதிகாரிகள், போலீசார் விமானத்தை தனி இடத்துக்கு கொண்டு சென்றனர். பயணிகள் அவசர வழியில் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து விமானம் முழுமையாக வெடிகுண்டு நிபுணர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- அவசரகால கதவை திறந்தது யார்?என்பது குறித்து விசாரித்தனர்.
- சென்னையில் ஒரு பணியில் சேர்வதற்கான நேர்முக தேர்வில் பங்கேற்க சரோஸ் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ளார்.
ஆலந்தூர்:
டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் 159 பயணிகள் இருந்தனர். விமானத்தை விமானி இயக்க ஆரம்பித்த போது திடீரென, விமானத்தின் அவசரகால கதவை திறக்கக்கூடிய அலாரம் ஒலித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள், உடனடியாக விமானத்தை இயக்காமல் நிறுத்தினர். மேலும் அவசரகால கதவை திறந்தது யார்?என்பது குறித்து விசாரித்தனர்.
அப்போது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சரோஸ்(27) என்பவர் அவசர கால கதவை திறந்து இருப்பது தெரிந்தது. விசாரணையில் அவசரகால கதவை திறக்க வேண்டும் என்று அதில் இருந்த பட்டனை அழுத்தவில்லை. அந்த பட்டன் வித்தியாசமாக இருந்ததால், அதை தெரியாமல் நான் அழுத்தி விட்டேன். முதல் முறையாக விமான பயணம் மேற்கொள்வதால், எனக்கு அது அவசரகால கதவை திறப்பதற்கான பட்டன் என்று தெரியாது என்றார்.
எனினும் விமானிகள் அவருடைய விளக்கத்தை ஏற்கவில்லை. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் சரோசின் விமான பயணத்தை ரத்து செய்து அவரிடம் மேலும் விசாரணை நடத்த அழைத்து சென்றனர்.
சென்னையில் ஒரு பணியில் சேர்வதற்கான நேர்முக தேர்வில் பங்கேற்க சரோஸ் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ளார். வரும்போது ரெயிலில் வந்த அவர் திரும்பி செல்லும் போது விமானத்தில் டெல்லிக்கு பயணம் செய்ய இருந்தார். முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்தபோது தெரியாமல் அவசர கால கதவு பட்டனை அழுத்தி தற்போது விசாரணையில் உள்ளார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் அந்த விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 8 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.
- டெல்லியில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது.
- விமானத்தில் திடீரென துர்நாற்றம் வீசியதால் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் இருந்து மும்பைக்கு இன்று காலை இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது. அப்போது விமானத்திற்குள் திடீரென துர்நாற்றம் வீசியது.
இதனால் பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் டெல்லியில் தரையிறக்க அனுமதிக்கும்படி விமானி கேட்டுக் கொண்டார். இதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டது.
இதுதொடர்பாக, விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானத்தில் சில நிமிடம் துர்நாற்றம் வீசியதால் முன் எச்சரிக்கையாக, விமானி மீண்டும் டெல்லியில் தரையிறக்கினார். அந்த விமானத்தில் இருந்த பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துர்நாற்றம் காரணமாக புறப்பட்ட இடத்துக்கே விமானம் திரும்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- இருக்கையின் கீழ் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்தார்.
- விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது.
மும்பையில் இருந்து லக்னோ நோக்கி புறப்பட வேண்டிய இன்டிகோ விமானம் பயணி ஒருவரால் தாமதமாக கிளம்பி சென்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பயணம் செய்வதற்காக இன்டிகோ விமானத்தில் ஏறிய பயணி ஒருவர், தனது இருக்கையின் கீழ் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி மாலை வேளையில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பயணி தெரிவித்ததை அடுத்து, அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. வெடிகுண்டு புகாரை அடுத்து விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது.
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்ததும், மும்பை காவல் துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டனர். விமானத்தில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், சந்தேகத்திற்குரிய வகையில் எந்த பொருளும் கிடைக்கப்பெறவில்லை.
இதைத் தொடர்ந்து வெடிகுண்டு இருப்பதாக குற்றம்சாட்டிய 27 வயதான பயணி மீது காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடந்தாண்டு அக்டோபர் தொடக்கத்தில் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் விலைகள் அதிகரித்ததால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான கட்டணங்களை ரூபாய் 300 முதல் 1000 வரை உயர்த்தியது.
- தற்போது விலை குறைப்பு காரணமாக எரிபொருள் கட்டணம் நீக்கப்பட்டுள்ளது.
ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (ஏடிஎஃப்) விலையில் சமீபத்திய குறைப்புக்கு பதிலளிக்கும் வகையில் இண்டிகோ நிறுவனம் கட்டணத்தில் இருந்து எரிபொருள் கட்டணத்தை நீக்கியுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் தொடக்கத்தில் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் விலைகள் அதிகரித்ததால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான கட்டணங்களை ரூபாய் 300 முதல் 1000 வரை உயர்த்தியது. தற்போது விலை குறைப்பு காரணமாக எரிபொருள் கட்டணம் நீக்கப்பட்டுள்ளது.
ஏடிஎஃப் விலைகளின் மாறும் தன்மையைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப கட்டணங்களைத் தொடர்ந்து மாற்றியமைக்கப்படும் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது. சர்வேச மற்றும் உள்நாட்டு சேவைகளில் இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் கட்டணத்தில் 300 முதல் 1000 ரூபாய் வரை குறையலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், பயணிகளின் இண்டிகோ விமான பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வீடியோவில் இண்டிகோ விமானத்தில் பயணிகளுக்கு விமானி ஒருவர், தமிழில் விதிமுறைகளை கூறும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்துள்ளது.
- வீடியோ வைரலாகி 3.45 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்வையிடப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் பகிரப்பட்டாலும் ஒரு சில வீடியோக்கள்தான் அதிகம் பேரால் ரசிக்கப்பட்டு வைரலாகி விடுகிறது. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் இண்டிகோ விமானத்தில் பயணிகளுக்கு விமானி ஒருவர், தமிழில் விதிமுறைகளை கூறும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்துள்ளது.
அந்த வீடியோவில் விமானி பேசுகையில், எல்லோருக்கும் வணக்கம் நான் உங்கள் கேப்டன் பிரதீப் கிருஷ்ணன். நாம் இன்று மலேசியாவில் இருந்து சென்னை வரை செல்ல உள்ளோம். பயணத்தின் மொத்த தூரம் 2,800 கிலோ மீட்டர். மொத்த நேரம் 3.30 மணி நேரம். எனவே நீங்கள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்து கொள்ளுங்கள். உங்கள் பயணம் இனியதாக அமைய வாழ்த்துக்கள் என கூறுகிறார்.
இந்த வீடியோ வைரலாகி 3.45 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்வையிடப்பட்டுள்ளது. விமானியின் தமிழ் பேச்சை பயனர்கள் பலரும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.