என் மலர்
இந்தியா

எம்.பி. டிம்பிள் யாதவ் உட்பட 150 பேர் பயணித்த இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு..
- ஓடுபாதையில் வேகமாகச் சென்ற விமானம் திடீரென நின்றதால் பயணிகள் சிறிது நேரம் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
- ஒரே வாரத்தில் இண்டிகோ விமானங்களில் இதுபோன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
அகிலேஷ் யாதவ் மனைவியும் சமாஜ்வாதி கட்சி எம்பியுமான டிம்பிள் யாதவ் உட்பட 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் டெல்லிக்கு சென்ற இண்டிகோ விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பியது.
இன்று விமானம் லக்னோவிலிருந்து டெல்லிக்கு திட்டமிட்டபடி புறப்படுவதற்காக ஓடுபாதையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை ஊழியர்கள் கண்டறிந்தனர்.
உடனடியாக விமானிகள், பயணத்தை ரத்து செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை மீண்டும் முனையத்திற்கு கொண்டு வந்தனர்.
ஓடுபாதையில் வேகமாகச் சென்ற விமானம் திடீரென நின்றதால் பயணிகள் சிறிது நேரம் குழப்பத்தில் ஆழ்ந்தனர். பின்னர், அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.
ஒரே வாரத்தில் இண்டிகோ விமானங்களில் இதுபோன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். செப்டம்பர் 6 ஆம் தேதி, கொச்சியிலிருந்து அபுதாபிக்குச் சென்ற இண்டிகோ விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறால் கொச்சிக்கு திரும்பியது.






