என் மலர்tooltip icon

    இந்தியா

    மும்பையில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
    X

    மும்பையில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    • விமான கட்டுப்பாட்டு அறைக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • டெல்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து தலைநகர் டெல்லிக்கு இன்று காலை இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் சுமார் 200 பேர் பயணித்தனர்.

    விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறைக்கு இ-மெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தினர்.

    சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×