என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    Bad Girl  பட டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க ஐகோர்ட் உத்தரவு
    X

    Bad Girl பட டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க ஐகோர்ட் உத்தரவு

    • Bad Girl திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.
    • ரோட்டர்டாமின் மதிப்பிற்குரிய விருதான NETPAC விருதை இப்படம் வென்றது.

    பிரபல இயக்குநர்களான வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

    இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார்.

    இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. U/A சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது

    இந்நிலையில், சிறார்களை தவறாக சித்தரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் 'பேட் கேர்ள்' படத்தின் டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Next Story
    ×