search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் கூறி வாக்கு சேகரியுங்கள்- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுரை
    X

    அ.தி.மு.க கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் கூறி வாக்கு சேகரியுங்கள்- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுரை

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
    • 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை அ.தி.முக.வில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    கோவை.

    கோவை இதய தெய்வம் மாளிகையில் கோவை மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக எதிர்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பிவேலுமணி, கோவை மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் எம்.பியுமான ஜெயவர்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதா வது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் 5 ஆண்டுகளில் கொண்டு வந்த 50 ஆண்டு கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

    தற்போது இருக்கின்ற தி.மு.க அரசு எந்த விதமான மக்கள் நல திட்டதங்களையும் கொண்டு வரவில்லை. நாம் ஏற்கனவே உருவாக்கிய திட்டங்களை தங்களுடைய திட்டங்களாக அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

    தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மிக துரிதமாக வேலை செய்து, 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை அ.தி.முக.வில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அ.தி.மு.க செய்த நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்து கூறி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    தேர்தல் பொறுப்பாளர் ஜெயவர்த்தனன் பேசும்போது, கோவை மாவ ட்டத்தில் இருக்கக்கூடிய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் எளிய மக்களின் துயர் துடைப்பவர்களாக செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க.வின் நலத்திட்ட ங்களை மக்களி டம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் அதிமுக பெருவாரியான வெற்றிகளை பெற வேண்டும் அதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

    இதில் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர் ஜெயராம், முன்னாள் அமைச்சர் செம.வேலுசாமி, பீளமேடு துரைசாமி, பிரபாகரன், புரட்சி தம்பி, லாலி ரோடு ராதா, செல்வகுமார், சிவகுமார், சாரமேடு சந்திரசேகரன், இலக்கடை ஜெயபால், காலணி கருப்பையா, ராஜ்குமார், மனோகரன், பப்பையா ராஜேஷ், கமலக்கண்ணன், மெட்டல் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×