என் மலர்
நீங்கள் தேடியது "அதிமுக ஆர்ப்பாட்டம்"
- மதுபானக் கடையின் இருபுறமும் குடியிருப்புகள் அமைந்துள்ளன.
- பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி பள்ளிப்பாளையம் நகராட்சி பைபாஸ் சாலையில் எப்.எல்.2 மதுபானக் கடை நடைபெற்று வருகிறது. இந்த மதுபானக் கடையின் இருபுறமும் குடியிருப்புகள் அமைந்துள்ளன.
அதே போல், மருத்துவமனைகள் மற்றும் வங்கிகளும் செயல்பட்டு வருவதன் காரணமாக, எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்து வரும் இந்த இடத்தில் மதுபானக் கடை இருப்பதால், பள்ளி மாணவர்கள், மகளிர், தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளிப்பாளையம் நகராட்சி, பை பாஸ் சாலையில், பொதுமக்களுக்கு பல்வேறு வகைகளில் இடையூறாக இருந்து வரும் எப்.எல்.2 மதுபானக்கடையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்கள் நலன் கருதி இந்த மதுபானக்கடையை உடனடியாக அகற்றிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணி அளவில், பள்ளிப்பாளையம் பஸ் நிலையம் அருகில், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி, தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றாமல் இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனம்.
- பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை :
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருப்போரூர் பேரூராட்சியில், அம்மா அவர்களின் நல்லாசியோடு செயல்பட்ட கழக ஆட்சியில், மக்கள் நலன் கருதி செயல்படுத்தப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம், தற்போதைய விடியா திமுக ஆட்சியில், படவட்டம்மன் கோயில் தெரு, எம்.ஜி.ஆர். நகர், குமரன் நகர், மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளில் நிறைவேற்றப்படவில்லை. இதனால், சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சியில் தொடங்கப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வந்த திருப்போரூர் அரசு மருத்துவமனையில், தற்போதைய கையாலாகாத விடியா திமுக ஆட்சியில், மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் எக்ஸ்ரே மெஷின் சரியாக செயல்படுவதில்லை. அதே போல், ஸ்கேன் வசதி, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
பழைய மாமல்லபுரம் சாலை-கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் திருப்போரூர்-நெம்மேலி சாலையை ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை ஒருவழி சாலையாக இருப்பதால், போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இங்கு நான்குவழிச் சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம் சுமார் 150 ஆண்டுகாலம் பழமையான அலுவலகம் என்பதாலும், போதுமான இடவசதி இல்லாத காரணத்தாலும், பத்திரப் பதிவுக்கு வருகைதரும் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றாமல் இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிலையில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், திருப்போரூர் தொகுதி வாழ் மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமலும்; மக்கள் நலன் கருதி கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டு வைத்தும்; ஏழை, எளிய மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையை வழங்காமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தின் சார்பில் வருகிற 9-ந்தேதி புதன் கிழமை காலை 10 மணியளவில், திருப்போரூர்
பேரூராட்சி மன்ற அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும்; செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள்; உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நகர, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
- மக்களை நாள்தோறும் பல்வேறு வகைகளில் துன்புறுத்தி வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனம்.
- பாலக்கரையில் இருந்து பீமநகரை இணைக்கும் பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கவும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான, கடந்த நான்கு ஆண்டுகால விடியா திமுக ஆட்சியில், மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றித் தரப்படவில்லை. இதன் காரணமாக மக்கள் சொல்லொண்ணா வேதனையை நாள்தோறும் சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் பல்வேறு சீர்கேடுகளால் மக்கள் கடும் அவதியுற்று வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
அதன் விபரம் வருமாறு :-
* திருச்சி To மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில், 40 ஏக்கர் பரப்பளவில் சுமார் 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3600-க்கும் மேற்பட்ட பேருந்துகளைக் கையாளும் வகையில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், விடியா திமுக அரசின் முதலமைச்சரால் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது. திருச்சியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த சிறிய மழைக்கே, புதிய பேருந்து நிலையக் கட்டடம் தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கூரைகளின் வழியே மழைநீர், பயணிகள் நிற்கும் நடை மேடையில் விழுவதை பொதுமக்கள் கிண்டலடித்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
பஞ்சப்பூரில் பேருந்து முனையம் திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், இதுவரை பேருந்துகள் இயக்கப்படவில்லை. நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு இம்முனையத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளைக்கூட செய்யாமல் அவசர கதியில் திறந்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம் இடிக்கப்பட்ட நிலையில், கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, திருச்சியில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளாக இருக்கட்டும், வெளியூர்களில் இருந்து திருச்சி மாநகருக்குள் வந்து செல்லும் பேருந்துகளாக இருக்கட்டும், அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலம் மற்றும் தலைமைத் தபால் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் ஆகியவற்றை மட்டுமே சார்ந்து செல்வதால், மாநகரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
* திருச்சி மாநகரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வரும் மாரிஸ் ரெயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதோடு, போக்குவரத்து நெரிசலால் திருச்சியே சில நேரங்களில் ஸ்தம்பித்துவிடுகிறது. இதன் காரணமாக திருச்சி மாநகர மக்கள் மிகுந்த அவதியுறுகின்றனர்.
* பாலக்கரையில் இருந்து பீமநகரை இணைக்கும் பகுதியில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும், தார் உருகியும் பள்ளங்கள் ஏற்பட்டு, பார்ப்பதற்கு வேகத்தடைபோல் காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்கள் பழுதடைந்துவிடுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
* திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய பிரதான சாலையான பாலக்கரை சாலையில், பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால் மக்கள் பல்வேறு வகைகளில் சிரமப்படுகின்றனர். இந்தச் சாலையை சீரமைத்துத் தரக்கோரி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல், மக்களை நாள்தோறும் பல்வேறு வகைகளில் துன்புறுத்தி வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில், மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; திருச்சி To மதுரை தேசிய நெடுஞ்சாலை, பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குக்கொண்டுவரவும்; திருச்சி மாநகரில் கட்டப்பட்டு வரும் மாரிஸ் ரெயில்வே மேம்பால காட்டுமானப் பணிகளை விரைந்துமுடிக்கவும்; பாலக்கரையில் இருந்து பீமநகரை இணைக்கும் பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கவும்; பாலக்கரை சாலையில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்டத்தின் சார்பில் 3.7.2025 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில், மரக்கடை எம்.ஜி.ஆர். திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையிலும்; திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி மாமன்ற முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசையும், திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
- நேற்றிரவு திடீரென அனுமதி மறுத்துள்ளதாக அ.தி.மு.க.வினர் புகார் கூறியுள்ளனர்.
ராணிப்பேட்டை:
அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறையைக் கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்த்து வரும் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்றுமுன்தினம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், அரக்கோணத்தில் இன்று நடைபெற இருந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு முறையாக அனுமதி வழங்க கோரி கடிதம் வழங்கப்பட்ட நிலையில் நேற்றிரவு திடீரென அனுமதி மறுத்துள்ளதாக அ.தி.மு.க.வினர் புகார் கூறியுள்ளனர். மேலும், ஆர்ப்பாட்டத்தை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- தஞ்சாவூர் புதிய தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணுக்கு உரிய நீதி கிடைத்திடவும்; பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைத்திடவும்; தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் திராணியற்று வேடிக்கை பார்த்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க. தஞ்சாவூர் மாநகரத்தின் சார்பில், 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில், தஞ்சாவூர் புதிய தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளர்களான காந்தி, துரை. செந்தில், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பாரதி மோகன், தஞ்சாவூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ரெத்தினசாமி, தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் சேகர், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சேகர், தஞ்சாவூர் மாநகரக் கழகச் செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நாளாந்தர பேச்சாளர்களுக்கு சற்றும் குறைவில்லாமல் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.
- தமிழ்நாட்டின் நாகரிகத்தை, அரசியல் பண்பாட்டை பொன்முடி அசிங்கப்படுத்தியுள்ளார்.
சென்னை:
அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு குரூர வக்கிரத்தின் உச்சம். நாளாந்தர பேச்சாளர்களுக்கு சற்றும் குறைவில்லாமல் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.
தமிழ்நாட்டின் நாகரிகத்தை, அரசியல் பண்பாட்டை பொன்முடி அசிங்கப்படுத்தியுள்ளார்.
அமைச்சர் பொன்முடியை கண்டித்து அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் வருகிற 16-ந்தேதி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
+2
- ஒரே நேரத்தில் சொத்து வரி, மின்கட்டணம் உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி உள்ளனர்.
- மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். அல்லது கைவிட வேண்டும்.
கோவை:
மின்கட்டணம், சொத்து வரி, பால் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவை மாவட்டத்தை தி.மு.க. அரசு புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டி கோவை சிவானந்தா காலனியில் இன்று அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் முதல்-அமைச்சரும், எதி்ர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பேசினார். அவர் கூறியதாவது:-
அ.தி.முக. கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் முடக்கும் பணியில் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. தி.மு.க. அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து எழவே இந்த உண்ணாவிரத போராட்டம். தி.மு.க. ஆட்சியில் மக்கள் துன்பப்படுகின்றனர். அல்லல்படுகின்றனர்.
எனவே மக்களின் கோபங்களை, கொந்தளிப்பை உணர்ந்து முதல்-அமைச்சர், செயல்பட வேண்டும்.
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்கள் ஆகிறது. 18 மாதங்களில் அவர்களால் கோவைக்கு என்ன நன்மை கிடைத்தது. கோவை மட்டுமின்றி தமிழக மக்களுக்கும் என்ன நன்மை கிடைத்தது. அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் என்ன? அதனால் மக்கள் பெற்ற பலன்கள் ஏதாவது உண்டா என்று கேட்டால் ஒன்றுமே கிடையாது.
2 தினங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அதில் ஒரு ஆட்சி எப்படி நடக்க கூடாது என்பதற்கும், ஒரு முதல்-அமைச்சர் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு முன்னாள் ஆட்சி என்றார்.
அதனை யார் சொல்கிறார் பார்த்தீர்களா தற்போதைய பொம்மை முதல்-அமைச்சர், திறமையற்ற முதல்-அமைச்சர். நாங்கள் சொல்கிறோம் ஒரு ஆட்சி எப்படி செயல்படக்கூடாது. ஒரு முதல்-அமைச்சர் எப்படி செயல்படக்கூடாது என்பதற்கு இந்த 18 மாத கால தி.மு.க. ஆட்சியே சான்று. இந்த ஆட்சியில் மக்கள் என்ன பலனை கண்டனர். எங்கள் மீது திட்டமிட்டே அவதூறு பிரசாரத்தை முதல்-அமைச்சர் பேசி வருகிறார். அ.தி.மு.க. மீதான அவதூறு பிரசாரத்தை ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது. ஒரு கார்ப்பரேட் கம்பெனி தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. 10 ஆண்டு ஆட்சியில் தமிழகத்தை பாதாளத்துக்கு கொண்டு சென்றுவிட்டதாக குற்றம் சாட்டி வருகிறார்.
நான் சொல்கிறேன். 10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சி பொற்கால ஆட்சி. அந்த ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
வரலாற்று சிறப்புமிக்க அ.தி.மு.க இயக்கத்தை பற்றி பேசுவதற்கும் தகுதி வேண்டும். தற்போதைய முதல்-அமைச்சருக்கு எங்கள் இயக்கத்தை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.
கோவையில் குடிமராமத்து திட்டம், உயர்மட்ட பாலங்கள் என பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கடந்த 10 ஆண்டுகளில் அள்ளி வழங்கியது அ.தி.மு.க ஆட்சிதான்.
அது எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா. எல்லாம் கொண்டு வந்தது நாங்கள். அதனை நீங்கள் திறந்து வைக்கிறீர்கள். அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்து வருகிறார் ஸ்டாலின்.
வெள்ளலூரில் பஸ் நிலையம் கொண்டு வந்து 50 சதவீத பணிகள் முடிந்தது. தற்போது அ.தி.மு.க கொண்டு வந்த திட்டம் என்பதால் அதனை முடக்கி வேறுபகுதிக்கு கொண்டு செல்ல பார்க்கிறார்கள். ஜி கொயர் என்ற நிறுவனம் 200 ஏக்கர் இங்கு வாங்கி வைத்துள்ளனர். அங்கு வெள்ளலூர் பஸ் நிலையத்தை மாற்ற முயற்சிக்கின்றனர். அதனை தி.மு.க அரசு கைவிட வேண்டும். திட்டத்தை நிறைவேற்றினால் கோவை மக்கள் கொந்தளித்து அதனை எதிர்கொள்வார்கள்.
அன்னூரில் விவசாய நிலத்தில் தொழில் பூங்கா அமைக்கும் திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும்.
18 மாத ஆட்சியில் கோவை மாவட்டம் முழுவதையும் தி.மு.க.வினர் புறக்கணித்து வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்துள்ளனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின் போது 520 வாக்குறுதிகளை அள்ளிவீசினார். அதில் எதையும் நிறைவேற்றவில்லை. மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை அறிவித்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை கொடுக்கவில்லை. கேட்டால் ஆய்வு செய்து வருவதாக கூறுகின்றனர். எல்லாம் ஏமாற்று வேலை.
முதியோர்களுக்கு மாதம் 1000 கொடுத்து வந்தோம். அதனை இப்போது நிறுத்தி உள்ளனர். சுமார் 7 லட்சம் பேருக்கு வழங்கப்படுவதில்லை என தகவல் வந்துள்ளது.
100 நாள் திட்ட பணிகளை முடக்கி மக்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கிறது தி.மு.க அரசு.
ஒரே நேரத்தில் சொத்து வரி, மின்கட்டணம் உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி உள்ளனர். மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். அல்லது கைவிட வேண்டும்.
மாதந்தோறும் சிலிண்டர், கட்டுமான பொருட்கள் அத்தியவாசிய பட்டியலில் சேர்க்கப்பட்டு மக்கள் வாங்குகிற அளவுக்கு குறைக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் எந்த வாக்குறுதியையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை.
அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வேண்டுமேன்றெ பொய் வழக்கு போடுகின்றனர். அப்படி வழக்கு போட்டால் அ.தி.மு.க முடங்கி விடுமா. அ.தி.மு.க.வை முடக்க ஓராயிரம் ஸ்டாலின் பிறந்து வந்தாலும் அ.தி.மு.க.வை முடக்க முடியாது.
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 425.40 சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். தமிழ்நாடு தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு வழங்குவதை அரசு கைவிட வேண்டும்.
ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை விவசாயிகள் நலன் கருதி நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க ஆட்சிக்கு வந்தததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து கையெழுத்துதான் என்றனர். அது என்னவானது? நாங்கள் செய்ததையே தான் அவர்களும் செய்துள்ளனர்.
2017-18 வெறும் 9 பேருக்கு தான் டாக்டர் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை எண்ணி பார்த்து தான் அரசு பள்ளி மாணவர்கள் கனவு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தான் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தோம். அதன் மூலம் இந்த ஆண்டு 565 பேர் டாக்டர் படித்து வருகிறார்கள்.
10 ஆண்டு கால ஆட்சி பாதாளத்தில் செல்லவில்லை. மிளிர்ந்து மீறுநடை போட்டது அ.தி.மு.க ஆட்சியிலே. தி.மு.க. ஆட்சி அமையும் போது எல்லாம் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும். அது இன்றும் தொடர்கிறது.
இதுகுறித்து கேட்டால் ஸ்டாலின், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் வேண்டும் என்றே பழி சுமத்துகின்றனர். வயிறு எறிகிறது என்கிறார். எங்களது வயிறு எரியவில்லை. மக்களின் வயிறு எரிகிறது ஸ்டாலின் அவர்களே.
மு.க.ஸ்டாலின் ஒரு நடைபயணம் சென்றார். அப்போது அவருடன் சுகாதாரத்துறை அமைச்சரும் செல்கிறார். அவரிடம் எனது மகன் நடித்த கலகத்தலைவன் படம் எப்படி போகிறது என்று கேட்கிறார்.
மருத்துவமனைகளில் மக்கள் மருந்து மாத்திரை இல்லாமல் அவதிப்படும் நிலையில் மகனின் படம் குறித்து சிந்திக்கிறார். கலகத்தலைவன் படம் தான் நாட்டிற்கு அவசியமான முக்கியமான விஷயமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அ.தி.மு.க ஆட்சியில் நல்ல திட்டங்கள் மற்றும் மக்கள் பெற்ற பலன் குறித்து நான் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளேன். நீங்கள் செய்த திட்டங்கள் மக்கள் பெற்ற பலன்கள் குறித்த என்னுடன் பேச நீங்கள் தயாரா?
இந்த போராட்டத்திற்கு வந்தவர்கள் வாகனத்தை இங்கு நிறுத்தினார்கள். அந்த வாகனத்தை திட்டமிட்டு எடுத்து சென்றுள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். விடுவிக்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம்.
மின் கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். வருகிற 9-ந்தேதி பேரூராட்சி பகுதிகளிலும், 12-ந்தேதி அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும்.
அதேபோன்று வருகிற 13-ந்தேதி நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பொங்கல் பரிசு தருவதற்கு முதல்-அமைச்சர் தடுமாறி வருகிறார். கடந்த பொங்கலுக்கு கொடுத்த வெல்லம் தரமற்றதாக இருந்ததது. இது மக்களுக்கு தெரியும். பொங்கல் தொகுப்பில் இருந்த அரிசியில் பூச்சி, பல்லி இருந்தது.
தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் முறைகேடு நடந்து உள்ளது. சுமார் ரூ.500 கோடிக்கு மேல் ஊழல் நடந்து உள்ளது. இவ்வாறு ஏழை-எளிய மக்களுக்கு வழங்க கூடிய பொருட்களில் கூட ஊழல் செய்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலை 5 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் முடித்து வைக்கிறார்.
உண்ணாவிரதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி. அருண்குமார், தனபால், செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.ஜெயராம், வி.பி.கந்தசாமி, டி.கே.அமுல்கந்தசாமி முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செ.ம.வேலுசாமி, உடுமலை ராதாகிருஷ்ணன், கே.வி.ராமலிங்கம், எம்.எஸ்.எம். ஆனந்தன், கே.சி. கருப்பணன், கூடலூர் தொகுதி எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
- 13.12.2022 அன்று நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், 14.12.2022 அன்று ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
- சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் இதற்கேற்ற வகையில், தங்கள் மாவட்டங்களுக்கு உட்பட்ட பேரூராட்சிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தி.மு.க. அரசின் 18 மாத கால ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைத்து வரும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில், கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் நாளை (9-ந் தேதி) அன்று பேரூராட்சிகளிலும், 13.12.2022 அன்று நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், 14.12.2022 அன்று ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயல் தமிழகத்தின் வடமாவட்டங்கள் வழியாக கரையை கடக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருப்பதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களிலும் 9.12.2022 அன்று பேரூராட்சி அளவில் கழகத்தின் சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, அதற்கு பதிலாக வருகின்ற 16.12.2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் இதற்கேற்ற வகையில், தங்கள் மாவட்டங்களுக்கு உட்பட்ட பேரூராட்சிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கழக இடைக்காலப் பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. சார்பில் நாளை நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
- நகராட்சி, மாநகராட்சிகளில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் வரும் 21-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
சென்னை:
தி.மு.க. அரசின் 18 மாத கால ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை போன்றவற்றை கண்டித்து அ.தி.மு.க. சார்பில், கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 9-ந் தேதி அன்று பேரூராட்சிகளிலும், 13-ம் தேதி நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், 14-ம் தேதி ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக தலைமை ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9-ம் தேதி நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வரும் 16-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் நாளை நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 21-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
- சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலையை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட , நகர, ஒன்றிய, வார்டு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பங்கேற்று தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
ஆத்தூர்:
தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர். இளங்கோவன் தலைமை தாங்கினார்.
ஜெயசங்கரன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். ஆத்தூர் நகர செயலாளர் மோகன் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலையை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட , நகர, ஒன்றிய, வார்டு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பங்கேற்று தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
- 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துக்கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
- பூண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பூண்டி ஒன்றிய செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் பஜார் வீதியில் இன்று மின் கட்டண உயர்வு, சொத்து வரி 150 சதவீதம் உயர்வு, குடிநீர் வரி உயர்வு, கழிவுநீர் வரி உயர்வு, பால் விலை, எண்ணெய் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும் பொய்யான வாக்குறுதிகளை அளித்த தி.மு.க. அரசை கண்டித்தும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் சுதாகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துக்கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல் பூண்டியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பூண்டி ஒன்றிய செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். இதில் திரளான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பெண்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் டி.கே.எம் சாலையில் திரண்டு, ஊர்வலமாக சென்று அங்கு கடைவீதியில் கூடியிருந்த மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
- மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உத்தரவின் பெயரில், இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், தலைமையில் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகில் இன்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மாமல்லபுரம் அ.தி.மு.க.வினர் சார்பில், தி.மு.க ஆட்சியில் சொத்துவரி, மின் கட்டணம், பால், விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என குற்றம் சாட்டி, அதை கண்டித்து நகர செயலாளர் கணேசன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. தனபால், முன்னாள் பேரூராட்சி தலைவர் எஸ்வந்த்ராவ், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், துணைத்தலைவர் ராகவன், திருக்கழுக்குன்றம் நகர செயலாளர் தினேஷ்குமார், வேலாயுதம், தணிகைவேல், ஜெயச்சந்திரன், செல்வம், விஜயரங்கன் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
பின்னர் பெண்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் டி.கே.எம் சாலையில் திரண்டு, ஊர்வலமாக சென்று அங்கு கடைவீதியில் கூடியிருந்த மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உத்தரவின் பெயரில், இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், தலைமையில் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டனர்.






