search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK protest"

    • சென்னையில் ஒருங்கிணைந்த 9 மாவட்டங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்தது.
    • தலைமை கழக நிர்வாகிகள் தம்பிதுரை, பா.வளர்மதி, பரமசிவம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாகவும் அதனை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது. இதில் தலைமை கழக நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    சென்னையில் ஒருங்கிணைந்த 9 மாவட்டங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்தது. தலைமை கழக நிர்வாகிகள் தம்பிதுரை, பா.வளர்மதி, பரமசிவம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.


    மாவட்ட செயாளர் டி.ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம், வெங்கடேஷ்பாபு, விருகை வி.என்.ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ், தி.நகர் சத்யா, அசோக், கே.பி.கந்தன் ஆகியார் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். போதைப் பொருள் விற்பனை அதிகரித்து வருவதால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களும் பாதிக்கப்படுவதால் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.

    சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கார், வேன், ஆட்டோக்களில் வந்த தொண்டர்கள் போதைப் பொருளை தடுக்க வேண்டும் என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை வைத்து கோஷமிட்டனர்.

    திருவள்ளூரில் மருத்துக் கல்லூரி அருகில் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் பா.பென்ஜமின், பி.வி.ரமணா, சிருணியம் பலராமன், மாதவரம் மூர்த்தி, அலெக்சாண்டர் மற்றும் முன்னாள் அமைச்சர் அப்துல் ரகீம், முன்னாள் எம்.பி.க்கள் வேணுகோபால், திருத்தணி அரி உள்ளிட்டவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் 5 மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரத்தில் கலெக்டர் அலுவலகம் அருகில் மாவட்ட செயலாளர் சோம சுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • முக்கோணம் பகுதிக்கு வந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பேனர்கள் அகற்றப்பட்டிருந்தன.
    • ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக ஆனைமலையில் இருந்து அ.தி.மு.க.வினர் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி தலைமையில் ஊர்வலமாக வந்தனர்.

    வால்பாறை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கோவை மாவட்டம் ஆனைமலையிலும் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு அ.தி.மு.க.வினர் தயாராகி வந்தனர்.

    இதற்காக ஆனைமலை முக்கோணம் பகுதியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

    இந்த நிலையில், முக்கோணம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசார் சட்டவிரோதமாக வைத்ததாக கூறி அகற்றி, போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

    இதற்கிடையே இன்று காலை ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக ஆனைமலையில் இருந்து அ.தி.மு.க.வினர் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி தலைமையில் ஊர்வலமாக வந்தனர்.

    அவர்கள் முக்கோணம் பகுதிக்கு வந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பேனர்கள் அகற்றப்பட்டிருந்தன. பேனர்களை போலீசார் அகற்றியது தெரியவந்ததும், அ.தி.மு.கவினர் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி தலைமையில் ஆனைமலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் ஆனைமலை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநிதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.கவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அகற்றப்பட்ட பேனர்களை உடனே இங்கு வைக்க வேண்டும் என அ.தி.மு.கவினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த பகுதியில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பேனர்கள் வைக்கப்பட்டன.

    இதையடுத்து அ.தி.மு.கவினர் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க.வினரின் போராட்டத்தால் இந்த பகுதியில் சிறது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தொழிற்சாலையில் கழிவு பொருட்கள் ஏற்றிய வாகனத்தால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
    • இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக நடத்தப்பட்ட நாடகமா? என விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் காலாப்பட்டு ரசாயன தொழிற்சாலை மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து சுற்றுப்புற சூழலையும், சுனாமி குடியிருப்பு மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களையும் காப்பாற்றிட வலியுறுத்தி புதுவை சட்டசபை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் வடசென்னை தெற்கு, (கிழக்கு) மாவட்ட செயலாளரும், தமிழக முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமை தாங்கினார். புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் புதுவை அ.தி.முக. மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    தொழிற்சாலையில் கழிவு பொருட்கள் ஏற்றிய வாகனத்தால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. விபத்துக்கு காரணமான அந்த வாகன காண்ட்ராக்டர் யார்? அவர் திட்டமிட்டு அந்த விபத்தை ஏற்படுத்தினாரா? என்பது குறித்தும், அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக விபத்தை ஏற்படுத்தி அதற்குரிய இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக நடத்தப்பட்ட நாடகமா? என விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்.

    ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போதே அவர்களின் உடல் நிலைமையை கருத்தில் கொள்ளாமல் இங்கிருந்து 4 மணி நேரம் மரண அவஸ்தையுடன் நோயாளிகளை சிகிச்சைக்கு அரசின் அனுமதியோடு கொண்டு சென்றனரா? அவ்வாறு கொண்டு செல்ல அதிகாரம் அளித்தது யார்? போகும் வழியிலேயே ஒரு நோயாளி மரணமடைந்திருந்தால் அதற்கு பொறுப்பு யார்?

    ஜிப்மர் டாக்டர்கள் மறுத்தும் சென்னைக்கு கொண்டு சென்றது சம்பந்தமாக மருத்துவ புலனாய்வு நிபுணர்களை கொண்டு உயர்மட்ட விசாரணைக்கு முதலமைச்சர், கவர்னர் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர பாஸ்கர், மாநில துணை தலைவர் ராஜாராமன், மாநில இணை செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் மகாதேவி, முன்னாள் கவுன்சிலர் கணேசன், ஆர்.வி.திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவிபாண்டு ரங்கன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • விளையாட்டு மைதானத்தில் இருந்த பள்ளத்தில் நீரில் மூழ்கி மரணமடைந்த மாணவிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டும்.
    • ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி, சிக்கனாங்குப்பத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாக விளையாட்டு மைதானத்தில் இருந்த பள்ளத்தில் நீரில் மூழ்கி மரணமடைந்த மாணவிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கவும்; பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும்; ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் இருந்த தேக்கு மரங்களை சட்ட விரோதமாக வெட்டிக் கடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் தி.மு.க. அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய அ.தி.மு.க. திருப்பத்தூர் மாவட்டத்தின் சார்பில், 16-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளர், கே.சி.வீரமணி தலைமையில் ஒன்றியக் செயலாளர்கள், ஜி.செந்தில்குமார், கோவி.சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இரவு நேரத்தில் தடாலடியாக சிலையை அகற்றுவதில் நோக்கம் அரசியல் கொண்டதாக உள்ளது என அன்பழகன் வாக்குவாதம் செய்தார்.
    • அகற்றப்பட்ட எம்.ஜி.ஆர். சிலை வில்லியனூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள வருவாய்த்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    சேதராப்பட்டு:

    புதுவை-விழுப்புரம் சாலை வில்லியனூரில் இருந்து பெரம்பை செல்லும் சாலையின் புறவழிச்சாலையின் மையப் பகுதியில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை இருந்தது.

    1998-ம் ஆண்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த நடராஜன் எம்.ஜி.ஆர். சிலையை நிறுவினார்.

    வில்லியனூர் பகுதியில் புதுவை-விழுப்புரம் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விபத்தை தடுக்க சாலை நடுவே பல கிலோ மீட்டர் தூரம் வரையில் சென்டர் மீடியன் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வில்லியனூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையை அகற்றாமல் சாலையை விரிவுப்படுத்த முடியாது என்ற நிலையில் எம்.ஜி.ஆர். சிலையை அகற்ற நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் சப்-கலெக்டர் முரளிதரன் தலைமையில் வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் எம்.ஜி.ஆர். சிலையை அகற்றினர்.

    இதனை கேள்விப்பட்டு அங்கு வந்த அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையிலான அ.தி.மு.க.வினர் யாரை கேட்டு சிலையை அகற்றி இருக்கிறீர்கள் என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சிலையை அகற்ற அரசு அனுமதி கொடுத்திருந்தாலும் சிலையை அகற்றுவது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கு ஏன் தகவல் தெரிவிக்கப்படவில்லை. சொல்லியிருந்தால் அ.தி.மு.க.வினரே சிலையை அகற்றி கொடுத்திருப்போம்.

    இரவு நேரத்தில் தடாலடியாக சிலையை அகற்றுவதில் நோக்கம் அரசியல் கொண்டதாக உள்ளது என அன்பழகன் வாக்குவாதம் செய்தார்.

    அகற்றப்பட்ட எம்.ஜி.ஆர். சிலை வில்லியனூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள வருவாய்த்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    ஏற்கனவே சிலை இருந்த இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தூரத்தில் சாலையின் ஓரத்தில் எம்.ஜி.ஆர். சிலை வைக்கப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினர். வருவாய்த்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சிலை அதிகாரிகள் வைக்கப் போவதாக சொன்ன இடத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    அப்போது பேசிய அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், அகற்றப்பட்ட சிமெண்டால் ஆன எம்.ஜி.ஆர். சிலை வெண்கல சிலையாக மாற்றி வைப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார். விரைவில் அரசு வெண்கல சிலையை அமைக்க வேண்டுமென கூறினார்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். இன்று சாலை விரிவாக்க நடந்து வரும் நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • ஆத்தூர் தலைமை மருத்துவமனைக்கு, நோயாளிகளின் வசதிக்காக சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
    • ஆத்தூர் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை; நோயாளிகளுக்கு போதிய மருந்துகளும் வழங்கப்படுவதில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளில் சுமார் 13 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் முழுமையாக வழங்கப்படுவதில்லை. இதுவே, அ.தி.மு.க. ஆட்சியில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டது.

    குறைவான தூய்மைப் பணியாளர்களால், தூய்மைப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. நகரம் முழுவதும் குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது.

    நரசிங்கபுரம் நகராட்சிக்கு தனியாக கட்டிடம் கட்டுவதற்கு அம்மா ஆட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், இந்த தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 28 மாதங்களுக்குப் பிறகும் இன்னும் நிதி ஒதுக்கி, நகராட்சிக்கு தனியாக அலுவலகக் கட்டிடம் கட்டப்படவில்லை.

    தெரு விளக்குகள் எப்போதும் எரிவதில்லை. புகார் செய்தாலும் நடவடிக்கை இல்லை. தற்போது, ஆத்தூர் நகராட்சிக்கு பொறுப்பு ஆணையராக, விழுப்புரம் நகராட்சி ஆணையரை தி.மு.க. அரசு நியமித்து உள்ளது.

    சேலம் மாவட்டத்தில் பல நகராட்சிகள் இருந்தும், 2 மாவட்டங்கள் கடந்து தொலைவில் உள்ள விழுப்புரம் நகராட்சி ஆணையரை நியமித்துள்ளது மிகவும் வேடிக்கையான ஒன்றாகும். இதனால், ஆத்தூர் நகராட்சி ஆணையரை பொதுமக்கள் பார்ப்பது என்பது எளிதான காரியமன்று.

    அம்மாவின் நல்லாசியோடு செயல்பட்ட எனது ஆட்சியில், சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வசிஷ்ட நதியை சுத்தப்படுத்தும் அற்புதமான திட்டத்தை, இந்த தி.மு.க. அரசு கடந்த 28 மாதங்களாகக் கிடப்பில் போட்டுள்ளது.

    அதேபோல், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராசிபுரம் மற்றும் பெரம்பலூர் சாலையை இணைக்கும் உள்வட்டச் சாலை அமைக்கும் திட்டத்தையும் தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ளது.

    ஆத்தூர் தலைமை மருத்துவமனைக்கு, நோயாளிகளின் வசதிக்காக சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது, ஆத்தூர் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை; நோயாளிகளுக்கு போதிய மருந்துகளும் வழங்கப்படுவதில்லை.

    ஆத்தூர் புதுப்பேட்டை-பெரம்பலூர் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு 10 கோடி ரூபாய் அம்மாவின் அரசில் ஒதுக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் 28 மாதங்கள் கடந்த பிறகும் இன்னும் ஒப்பந்தமே கோரப்படவில்லை.

    ஆத்தூர் நகராட்சிக்கு ஆணையர் இல்லை; பொறியாளர் இல்லை; பணி மேற்பார்வையாளர் இல்லை; நகர அமைப்பு அலுவலர் இல்லை; பணி ஆய்வாளர் இல்லை; வருவாய் ஆய்வாளர் இல்லை. இதன் காரணமாக, அனைத்து முக்கிய பணியிடங்களும் நீண்ட நாட்களாக காலியாகவே உள்ளது. இத்தனைக்கும் சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருப்பவர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு. ஆனால், தமிழ்நாட்டிலேயே முக்கிய அதிகாரிகள் இல்லாமல் தடுமாறும் நகராட்சி ஆத்தூர் நகராட்சி. ஆத்தூர் நகர மக்கள் தங்கள் குறைகளை எங்கே சென்று சொல்லுவது என்பதுகூட புரியாமல் உள்ளனர்.

    இதே போன்று, தமிழகத்தில் உள்ள மற்ற நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தரமற்ற பழுதான சாலைகள், பழுதடைந்த மின் விளக்குகள், குடிநீர் பற்றாக்குறை, போதுமான எண்ணிக்கையில் துப்புரவு மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இல்லாத நிலை ஆகியவற்றை இந்த தி.மு.க. அரசு விரைவில் நிவர்த்தி செய்யாதபட்சத்தில், அந்தந்த நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனவே, ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளின் அவல நிலைமைக்குக் காரணமான தி.மு.க. அரசையும்; அமைச்சர் கே.என். நேருவையும் கண்டித்தும்; நகராட்சிகளில் வசிக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. சேலம் புறநகர் மாவட்டத்தின் சார்பில் 7.9.2023 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில், ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், தலைமையிலும்; சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் இளங்கோவன், ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடலூரில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • புதுநகர் போலீசார், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் உட்பட 1500 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, அனைத்து துறைகளிலும் ஊழல் தலையீட்டை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து கடலூரில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் சொரத்தூர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் அருண்மொழி தேவன், பாண்டியன், அமைப்பு செயலாளர் முருகுமாறன் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினார்கள். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் உட்பட 1500 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    • தக்காளி விலை ஏற்றத்தை குறிக்கும் வகையில் பதாகைகளை ஏந்திய படி, தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
    • போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கழுத்தில் காய்கறிகளை மாலையாக அணிந்தபடி கோஷமிட்டனர்.

    சென்னை:

    காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடந்தது.

    சென்னை மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடந்த கண்டன போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

    போராட்டத்தின் போது விலைவாசி உயர்வுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கழுத்தில் காய்கறிகளை மாலையாக அணிந்தபடி கோஷமிட்டனர்.

    தக்காளி விலை ஏற்றத்தை குறிக்கும் வகையில் பதாகைகளை ஏந்திய படி, தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் தக்காளி விலை ஏற்றத்தின் போது அரசே கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு அரசு குறைந்த விலையில் வழங்கியதை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பேசினர்.

    போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், கமலக்கண்ணன், முன்னாள் எம்.பி.க்கள் ஜெயவர்த்தன் எஸ்.ஆர்.விஜயகுமார், சங்கரதாஸ், சசிரேகா, செய்தி தொடர்பாளர் சத்யன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, ஆதி ராஜாராம், வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், வேளச்சேரி அசோக், தி.நகர் சத்யா, கே.பி.கந்தன், முன்னாள் கவுன்சிலர் பி.சின்னையன் (எ) ஆறுமுகம், வடபழனி சத்திய நாராயண மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, மற்றும் பேரவை மாநில துணைச் செயலாளர் வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி, இணைச் செயலாளர் டாக்டர் சுனில், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், வக்கீல் பழனி, தென் சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சாமிநாதன், கடும்பாடி எ.எம்.காமராஜ், சி.கே.முருகன், சுகுமார், ஷேக் அலி, எஸ்.எம். சரவணன், இனியன், கதிர் முருகன், எம்.ஜி.ஆர்.நகர் குட்டி, மார்க்கெட் சுரேஷ், வசந்த குமார், வைகுண்டராஜன், மற்றும் வக்கீல் சதாசிவம், வில்லிவாக்கம் பகுதிச் செயலாளர் திருமங்கலம் மோகன், கொளத்தூர் முன்னாள் பகுதிச் செயலாளர் கொளத்தூர் கணேசன், அபிராமி பாலாஜி, சேத்பேட் சம்பத்குமார், கன்னியப்பன், மாரிமுத்து, பாலாஜி, தசரதன், நித்யா, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தினால் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் சாலை அ.தி.மு.க. தொண்டர்களால் நிரம்பியது.

    ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் சார்பில் மதுரவாயல் மின்சார அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பு செயலாளரும், மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர்கள் பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, சிறுனியம் பலராமன், முன்னாள் எம்.எல்.ஏ. அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் முன்னாள் அமைச்சர் அப்துல்ரகீம், இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் இ.சி.சேகர், முன்னாள் எம்.பி. திருத்தணி அரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மணிமாறன், குப்பன், இளைஞர் அணி மாநில இணைச் செயலாளர்கள் இன்பராஜ், துண்டல் பாபு, ஜாவித் அகமது, எஸ்.பி.ஆர். கிஷோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • காய்கறி விலைவாசி உயர்வை கண்டித்தும், ஊழலை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

    ஈரோடு:

    காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்பட அத்தி யாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், ஊழலை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி ஈரோடு ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் இன்று வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ஆர்ப்பா ட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ். தென்னரசு, சிவசுப்பிரமணி, ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் எம்.எல்.ஏ., கருப்பணன் எம்..எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காய்கறி விலைவாசி உயர்வை கண்டித்தும், ஊழலை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

    இதில் முன்னாள் எம்.பி. செல்வகுமார சின்னையன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி. பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், கோவிந்தராஜன், மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் தங்கமுத்து, மாணவர் அணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி, மாணவர் அணி தலைவர் சிவக்குமார்,

    தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோபால் கிருஷ்ணன், பெரியார் நகர் பகுதி அவை தலைவர் மீன்ராஜா, மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் துரை சக்திவேல், சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் பொன் சேர்மன், பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே.செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், முருகானந்தம், மாதையன், பிரதிநிதி கஸ்தூரி, சூரிய சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நாளை காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • போராட்டத்தில் ஒருங்கிணைந்த சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    காய்கறி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை தி.மு.க. அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது.

    சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    போராட்டத்தில் ஒருங்கிணைந்த சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம், விருகை ரவி, வெங்கடேஷ்பாபு, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், எம்.கே.அசோக், கே.பி.கந்தன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • வருவாய் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • பெரம்பலூர், கன்னியாகுமரி, சேலம், தேனி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்போர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் 20-ந்தேதி காலை 10 மணிக்கு வருவாய் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பெரம்பலூர், கன்னியாகுமரி, சேலம், தேனி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்போர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர்-செம்மலை, கன்னியாகுமரி-தளவாய்சுந்தரம், சேலம்-பா.வளர்மதி, தேனி-கோகுல இந்திரா, தஞ்சாவூர்-மோகன், திருச்சி-கல்யாண சுந்தரம் ஆகியோரை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.

    • அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
    • ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்தும் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஊட்டி ஏ.டி.சி திடலில், மாவட்ட கழக செயலாளர் கப்பசி வினோத் தலைமையில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது கனமழை பெய்தது. ஆனாலும் அ.தி.மு.க.வினர் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    இதில் அமைப்புச் செயலாளர் கே.ஆர்.அர்ச்சுனன், முன்னாள் எம்.எல்.ஏ சாந்திராமு, கூடலூர் எம்.எல்.ஏ பொன்.ஜெய்சீலன், மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஊட்டி நகர்மன்ற உறுப்பினர் அக்கீம்பாபு, நகர செயலாளர் சண்முகம், குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார், ஒன்றிய செயலாளர்கள் கடநாடு குமார், தப்பகம்பை கிருஷ்ணன், கோத்தகிரி வடிவேல், ஓ.சி.எஸ் தலைவர் ஜெயராமன், நொண்டிமேடு கிளை செயலாளர் கார்த்திக் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×