search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamilaruvi manian"

    சிஸ்டத்தை கெடுத்தவர்களோடு எந்த நிலையிலும் ரஜினிகாந்த் ஒன்று சேர்ந்து நிற்க மாட்டார் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

    தூத்துக்குடி:

    காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது நிச்சயம். தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டு இருக்கக்கூடிய அ.தி.மு.க. ஆட்சி என்று முடிவுக்கு வருகிறதோ, அதற்கு அடுத்த நாள் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை தொடங்குவார். சட்டமன்ற தேர்தல் வரும்போது, தமிழகம் முழுவதும் அவர் மக்களை சந்தித்து வாக்குகளை கேட்டு, மக்கள் ஆதரவோடு ஆட்சி நாற்காலியில் அமருவார் என்று நம்புகிறோம்.

    என்னை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க.வுடன் ரஜினிகாந்த் எந்த நிலையிலும் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு கிடையாது. தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துதான் அரசியல் நடத்த வேண்டும் என்ற அவசியம் இருந்தால், ரஜினிகாந்த் அரசியலுக்கு உள்ளேயே அடியெடுத்து வைக்கமாட்டார்.


    அவர் தமிழக அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கு மிக முக்கியமான காரணமே கடந்த 50 ஆண்டுகளாக 2 திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் சமூகம் பாழ்பட்டு விட்டது. அதைத்தான் அவர் சிஸ்டம் கெட்டு விட்டது என்று கூறி உள்ளார். சிஸ்டத்தை கெடுத்தவர்களோடு எந்த நிலையிலும் ரஜினிகாந்த் ஒன்று சேர்ந்து நிற்க மாட்டார். இது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகர் கமல்ஹாசன் அவசர, அவசரமாக கட்சி தொடங்கி, அடிப்படை அமைப்பை கட்டமைக்க முடியாமல் திணறுகிறார் என்று தமிழருவிமணியன் குற்றம் சாட்டியுள்ளார். #kamal #rajinikanth #tamilaruvimanian

    கோவை:

    காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கோவையில் நடந்தது. இதில் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    தமிழகத்தில் பூரண மது விலக்கு என்பது கனவாகவே உள்ளது. டாஸ்மாக் வருவாயை கூட்டுவதில் தான் அரசு கவனம் செலுத்தி வருகிறது. பீகாரில் பூரண மது விலக்கை அமல்படுத்தியதை போல, தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் நினைத்தால் ஒரே நாளில் மதுவிலக்கை கொண்டு வர முடியும்.

    ஊழலை பாதுகாக்கும் வகையில் தான் லோக் ஆயுக்தாவை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த லோக் ஆயுக்தாவை கிழித்து குப்பையில் எறிய வேண்டும். எடப்பாடி அரசு இன்னும் 60 நாட்களுக்கு மேல் நீடிக்க வாய்ப்பே இல்லை.

    8 வழிச்சாலை மூலம் தமிழகம் பொருளாதார வளர்ச்சி பெறும் என்றால் எப்படி என்பதை விளக்க வேண்டும்.

    ரஜினிகாந்த் உரிய நேரத்தில் அரசியல் கட்சியை தொடங்குவார். அதில் ரஜினி தெளிவாக உள்ளார். கமல் ஹாசன் அவசர, அவசரமாக கட்சி தொடங்கி, அடிப்படை அமைப்பை கட்டமைக்க முடியாமல் திணறுகிறார். மக்கள் ஆதரவு இருந்தால் தான் எந்த மகத்தான மனிதரும் முதல்-அமைச்சராக முடியும்.

    ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்காக 80 சதவீதம் அடிப்படை கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மீதம் உள்ள 20 சதவீதம் பணிகள் முடிவடைந்ததும் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார். ரஜினிகாந்த் எளிமையான மனிதர். தலைக்கணம் சிறிதும் அவரிடம் இல்லை. கட்சி தொடங்குவது, எப்படி மக்களை சந்திப்பது? தேர்தலை சந்திப்பது உள்ளிட்டவை குறித்து எல்லாம் ரஜினி தான் சொல்வார். 3 மாத இடைவெளி கூட தேர்தலை சந்திக்க ரஜினிக்கு போதுமானது.

    இதுவரை பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ரஜினிகாந்த் ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லை. ரஜினி முதல்வராக நாங்கள் ஆதரவு தருகிறோம். ஊழலற்ற நிர்வாகத்தை ரஜினி தருவார் என நம்புகிறோம். அவருக்கு துணையாக இருப்போம். ரஜினியின் மக்கள் மன்றத்தில் இணைவது குறித்து சிந்திக்கவில்லை.

    ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதை முதலில் சொன்னது ரஜினி தான். முள்ளை முள்ளால் எடுப்பது போல, கலைத்துறையில் இருந்து வந்தவர்களால் மலிந்த ஊழலை ரஜினிகாந்த் அகற்றுவார். ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார். கமல்ஹாசன் சூப்பர் ஆக்டர். மக்கள் ஆதரவு இருப்பதால் தான் 40 ஆண்டுகளாக ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டாராக உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    கர்நாடகத்தில் சித்தராமைய்யாவின் ஆட்சிக்கு முன்பு நடைமுறையில் இருந்த லோக் ஆயுக்தாவின் அம்சங்கள் அனைத்தும் உள்ளடங்கிய சக்தி வாய்ந்த லோக் ஆயுக்தாவாக தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டும்.

    தமிழகமக்கள் வறுமையிலிருந்து விடுபடவும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கும் மதுக்கடைகள் முழுவதுமாக மூடப்படவேண்டும். ஒரே நாளில் அனைத்து மதுக்கடைகளையும் மூடமுடியாது என்றாலும் இந்த ஆட்சி கவிழ்ந்து வேறு ஆட்சி மலர்ந்தாலும் ஓராண்டுக்குள் பூரண மது விலக்கு தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப் படவேண்டும்

    எட்டு வழிச்சாலை அமைப்பதன் மூலம் உண்மையில் தமிழகத்தின் பொருளாதாரம் வலுப்பெறும், மக்களின் வாழ்வாதாரம் உயரும் என்றால் பாதிக்கப்படும் மக்களிடம் முறையாக விளக்கம் அளித்து எந்த நிலையிலும் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாத நிலையில் மிக உயர்ந்த இழப்பீட்டுத் தொகையைத் தருவதற்கு இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இயன்றவரை இந்தத் திட்டத்தையே கைவிடுவது நல்லது.

    அ.திமு.க., திமு.க. ஆகிய கட்சிகளின் பிடியிலிருந்தும் தமிழகத்தை முற்றாக விடுவிப்பதற்கு மக்கள் முன் வர வேண்டும். குட்கா ஊழலிலிருந்து சமீபத்திய முட்டை ஊழல் வரை அ.தி.மு.க. ஆட்சியில் அன்றாடம் ஊழலுக்கு உற்சவம் நடக்கும் நிலையில் இந்த ஆட்சிக்கு விரைவாக முற்றுப்புள்ளி வைத்து மொத்தமாக மூட்டை கட்டி கோட்டையிலிருந்து வெளியேற்றுவதுதான் தமிழகத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி . உண்மையும் நேர்மையும் எளிமையும் நிறைந்த ஒரு நல்ல தலைமைக்குரிய பண்புகளைப் பெற்றிருக்கும் ரஜினிகாந்த் விரைவில் தொடங்க இருக்கும் அரசியல் கட்சிக்கு மக்கள் பேராதரவை நல்கிஅவரை முதல்வராக்க உறுதியேற்க வேண்டும். 

    ரஜினிகாந்த் மூலம் ஊழலின் நிழல்படாத ஓர் உயர்ந்த ஆட்சியும், வெளிப்படைத்தன்மை கொண்ட சிறந்த நிர்வாக மும் தமிழகத்திற்கு வந்து வாய்க்கும் என்று காந்திய மக்கள் இயக்கம் அழுத்தமாக நம்புகின்றது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #kamal #rajinikanth #tamilaruvimanian

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் ஆயுட்காலம் இன்னும் 60 நாட்கள் தான் என்று கோவையில் தமிழருவி மணியன் பேசியுள்ளார். #tamilaruvimanian #edappadipalanisamy #rajinikanth

    கோவை:

    தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். லோக் ஆயுக்தா சட்டத்தை கூர்மைபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காந்திய மக்கள் இயக்க மாநில இளைஞரணி சார்பில் கோவை காந்தி பார்க் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் காந்திய மக்கள் இயக்க நிறுவன தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது-

    மதுவற்ற தமிழகம், ஊழலற்ற நிர்வாகம் ஆகிய இரண்டையும் லட்சியமாக கொண்டு காந்திய மக்கள் இயக்கம் கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி தொடங்கப்பட்டது. இன்று வரை அந்த லட்சியத்தை நோக்கி பயணித்து வருகிறது. பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கடந்த ஒரு வருடத்திற்கு முன் அம் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி உள்ளது.

    அதன் பின்னர் அங்கு பெருமளவு குற்றங்கள் குறைந்து இருப்பதாகவும் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து இருப்பதாகவும் அம் மாநில அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

    தமிழகத்தில் டாஸ்மாக் கடையால் ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. அதனை இழக்க அரசு தயாராக இல்லை என்பதாக உள்ளது.

    ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது மதுக்கடையை மூடினால் ஏற்படும் இழப்புக்கு மாற்று திட்டம் தயார் செய்து கொடுத்ததோடு 16 லட்சத்து 800 மாணவர்களிடம் கையெழுத்து வாங்கி கொடுத்தோம்.

    ஆனால் மாற்று ஏற்பாடு எதுவும் அரசு எடுக்கவில்லை. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு போராட்டம் நடந்து வருகிறது. இது ஒட்டு மொத்த தமிழகத்தை பாதிக்கும் பிரச்சினை அல்ல.

    ஆனால் டாஸ்மாக்கிற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வில்லை. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி இருந்தால் டாஸ்மாக் கடையை மூட வழி பிறந்து இருக்கும்.

    சட்ட பேரவையில் தி.மு.க.வுக்கு 98 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 106 எம்எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் 8 வழி சாலை பிரச்சினையில் ஒன்றிணைந்து தங்கள் பணியை தீவிரப்படுத்தி இருந்தால் இந்த ஆட்சிக்கு தலை வலி ஏற்பட்டு இருக்கும்.

    ஆளும் கட்சியுடன் எதிர்கட்சி ரகசிய ஒப்பந்தம் செய்து உள்ளது. ஊழல் படிந்த கட்சிகள் கூட்டு பேரம் நடத்தி உள்ளது.

    குட்கா முதல் முட்டை வரை ஊழல் நடைபெற்று உள்ளது. இந்த ஆட்சியின் ஆயுட்காலம் இன்னும் 60 நாட்கள் தான்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    பின்னர் நிருபர்களிடம் தமிழருவி மணியன் கூறியதாவது-

    ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான ஆட்சி என்பது தான் எங்கள் இலக்கு. தமிழகத்தில் மாற்று அரசியல் என்பதற்கு காலம் எங்கள் கண் முன் காட்டுவது ரஜினிகாந்த் தான். தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான, பொருளாதார வளர்ச்சி அமைய வேண்டும் என்றால் ரஜினியை ஆதரிக்க வேண்டும்.


    காந்திய மக்கள் இயக்கத்திற்கு ரஜினிகாந்த் அழைப்பு விடுத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக காந்திய மக்கள் இயக்கத்தை கலைத்து விட்டு ரஜினியுடன் இணையும் என்பது வதந்திதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் டாக்டர் டென்னிஸ் மற்றும் இளைஞர் அணித்தலைவர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் ஆ.கணேசன், எம்.கந்தசாமி, கே.கந்தசாமி, வாசு, குருவம்மாள், சுரேஷ்பாபு, ராஜீவ், கிருஷ்ணமூர்த்தி, கோவை மாவட்ட நிர்வாகிகள் துரை சந்திரன், திருமலை, ராஜன், சற்குணன்,உள்பட திராளானோர் கலந்து கொண்டனர். #tamilaruvimanian #edappadipalanisamy #rajinikanth

    சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று காலை நடிகர் ரஜினியுடன் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். #Rajinikanth #TamilaruviManian
    சென்னை:

    அரசியல் பிரவேசம் செய்துள்ள ரஜினிகாந்த் புதிய படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு மேற்கு வங்காளத்தில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பினார்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி ரஜினிகாந்த் அதிரடி அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிட உள்ளார்.

    புதிய கட்சியின் பெயரையும் ரஜினிகாந்த் அறிவிக்கிறார். இது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் ரஜினி காந்தை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். சுமார் 1 மணி நேரம் ரஜினியுடன் அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனை நடத்தினார்.


    ‘ஒரு மாதம் கழித்து ரஜினி சென்னை வந்துள்ளதால் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பேசினேன்.

    விரைவில் மக்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அறிவிப்புகளை ரஜினி வெளியிடுவார். எந்தவித சோர்வும் இல்லாமல் அவர் உற்சாகமாக இருக்கிறார்’.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Rajinikanth #TamilaruviManian
    வரலாறு வேறு, இலக்கியம் வேறு. இலக்கியங்களை வரலாற்றோடு பொருத்தி பார்க்ககூடாது என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
    தர்மபுரி:

    ராமாயண ரகசியம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு தர்மபுரி டி.என்.சி. விஜய் மகாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் டி.என்.சி.மணிவண்ணன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜெ.பி.நாகராஜன், தொழில் அதிபர் டி.என்.சி.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சஞ்சீவராயன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இதிகாசங்கள் நமது வாழ்க்கையை செழுமைப்படுத்துகின்றன. இந்திய மண் பெருமைப்படும் வகையில் நமக்கு ராமாயணமும், மகாபாரதமும் கிடைத்து உள்ளன. ராமாயணம் இதயம் போன்றது. மகாபாராதம் மூளையை போன்றது. உலகத்தில் உள்ள அனைத்து இலக்கியங்களையும் படித்த பின்னர் கம்பராமாயணத்தை படித்தால் கம்பனின் படைப்பாற்றல் குறித்து தெரியவரும். கம்ப ராமாயணத்தில் திருக்குறள் சார்ந்த 700 கருத்துக்களை காணமுடிகிறது. வரலாறு வேறு, இலக்கியம் வேறு. இலக்கியங்களை வரலாற்றோடு பொருத்தி பார்க்ககூடாது.

    இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆன்மிகத்தில் ஆனந்தம் அமைப்பினர் செய்திருந்தனர். 
    ரஜினிகாந்துக்கு எதிராக வன்மத்துடன் உருவாக்கப்படும் எதிரலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி குழம்பிய குட்டையில் கமல்ஹாசன் மீன் பிடிக்க பார்க்கிறார் என்று தமிழருவி மணியன் குற்றம்சாட்டி உள்ளார்.
    சென்னை:

    காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ரஜினிகாந்த் மக்கள் போராட்டத்துக்கு எதிரானவர் என்பதை போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குவதில் கமல்ஹாசன் ஈடுபட்டிருப்பதை அவருடைய கருத்து தெளிவாகவே வெளிப்படுத்துகிறது. மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்து வரும் ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் தங்களுடைய முதல்-அமைச்சர் கனவு கலைந்துவிடக்கூடும் என்று அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் தலைவர்களும், சில அமைப்புகளும் அவருடைய பிம்பத்தை திட்டமிட்டு சிதைக்க முற்படும் நேரத்தில் கமல்ஹாசனும் மறைமுகமாக அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதன் அந்தரங்க நோக்கத்தை மக்கள் எளிதாக இனம் காணக்கூடும்.

    ரஜினிகாந்த் மக்கள் நலன் சார்ந்த எந்த போராட்டத்துக்கும் எதிரி அல்ல. மக்களால் வளர்த்தெடுக்கப்படும் வாழ்வாதார போராட்டங்களில் வன்முறையாளர்கள் இடம் பெற்றிடலாகாது என்பதுதான் ரஜினியின் கவலையாக இருக்கிறது. ரஜினிகாந்த் சொந்த கருத்தை சொல்லி இருப்பதாகவும், மக்கள் கருத்தையே தான் எப்போதும் முன்வைப்பதாகவும் கமல்ஹாசன் கூறியிருப்பதில் அவருடைய அந்தரங்க நோக்கம் தெளிவாகவே முகம் காட்டுகிறது. சொந்த கருத்தை வெளிப்படுத்தும் துணிவுதான் ஓர் உயர்ந்த தலைமைக்குரிய நல்ல அடையாளம்.

    ஆனால் எந்த ஆதாயத்திற்காகவும் ரஜினிகாந்த் தன் சொந்த கருத்தை மறைத்து மக்கள் கருத்து என்ற போர்வையில் பதுங்குபவர் இல்லை. ரஜினிகாந்துக்கு எதிராக வன்மத்துடன் உருவாக்கப்படும் எதிரலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி குழம்பிய குட்டையில் கமல்ஹாசன் மீன் பிடிக்க பார்ப்பது வருந்தத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    தமிழக மக்கள் ரஜினியை முதல்வர் பதவியில் அமர்த்துவதற்கு தயாராகி விட்டனர் என்று ஓசூரில் நிருபர்களுக்கு தமிழருவி மணியன் பேட்டி அளித்துள்ளார். #tamilaruvimanian #rajinikanth #tncm

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடந்த ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    10 நாட்களுக்கு ஒரு முறை ரஜினியை நான் நேரில் சந்தித்து பேசி வருகிறேன். மற்ற நேரங்களில் போன் மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறோம். ரஜினி எனது சகோதரர். அவரை நான் கைவிட்டாலும், தமிழ்நாடு கை விடாது, தமிழக மக்கள், கோட்டையில் முதல்வர் பதவியில் ரஜினியை அமர்த்துவதற்கு தயாராகி விட்டனர்.


    எல்லோர் மனதிலும் அவர் மட்டும் தான் இடம் பிடித்துள்ளார். ரஜினி ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு முதல் நியூட்ரினோ வரை அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

    கர்நாடகாவில் எலியும், பூனையுமாக இருந்த சித்தராமையாவும், குமாரசாமியும் இன்று ஒருவருக்கொருவர் நட்பு கொண்டு நடிப்பது, பதவிக்காகத்தான். இவர்கள் நடத்துவது பதவிக்கான அரசியல், இதில் மக்கள் நலன் ஒன்றுமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilaruvimanian #rajinikanth #tncm

    ×