என் மலர்

    நீங்கள் தேடியது "corrupt"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிஸ்டத்தை கெடுத்தவர்களோடு எந்த நிலையிலும் ரஜினிகாந்த் ஒன்று சேர்ந்து நிற்க மாட்டார் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

    தூத்துக்குடி:

    காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது நிச்சயம். தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டு இருக்கக்கூடிய அ.தி.மு.க. ஆட்சி என்று முடிவுக்கு வருகிறதோ, அதற்கு அடுத்த நாள் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை தொடங்குவார். சட்டமன்ற தேர்தல் வரும்போது, தமிழகம் முழுவதும் அவர் மக்களை சந்தித்து வாக்குகளை கேட்டு, மக்கள் ஆதரவோடு ஆட்சி நாற்காலியில் அமருவார் என்று நம்புகிறோம்.

    என்னை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க.வுடன் ரஜினிகாந்த் எந்த நிலையிலும் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு கிடையாது. தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துதான் அரசியல் நடத்த வேண்டும் என்ற அவசியம் இருந்தால், ரஜினிகாந்த் அரசியலுக்கு உள்ளேயே அடியெடுத்து வைக்கமாட்டார்.


    அவர் தமிழக அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கு மிக முக்கியமான காரணமே கடந்த 50 ஆண்டுகளாக 2 திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் சமூகம் பாழ்பட்டு விட்டது. அதைத்தான் அவர் சிஸ்டம் கெட்டு விட்டது என்று கூறி உள்ளார். சிஸ்டத்தை கெடுத்தவர்களோடு எந்த நிலையிலும் ரஜினிகாந்த் ஒன்று சேர்ந்து நிற்க மாட்டார். இது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இன்னும் 5 ஆண்டுகள் எங்களிடம் ஆட்சியை கொடுத்தால் காங்கிரஸ் தலைவர்களை ஜெயிலுக்குள் தள்ளுவேன் என்று குஜராத் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார். #pmmodi #bjp #congress

    அகமதாபாத்:

    பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஜுனாகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    காங்கிரசார் ஏழைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான பணத்தையும் கொள்ளையடித்து இருக்கிறார்கள்.

    ஒரு காலத்தில் கர்நாடக மாநிலம் காங்கிரசாருக்கு பணம் கொட்டும் ஏ.டி.எம். எந்திரமாக இருந்தது. இப்போது மத்திய பிரதேச மாநிலம் காங்கிரசின் ஏ.டி.எம். ஆக மாறி இருக்கிறது.

    ஊழல், முறைகேட்டில் ஈடுபட்ட காங்கிரசார் இன்று ஜெயில் கதவை தட்டும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.


    இன்னும் 5 ஆண்டுகள் எங்களிடம் ஆட்சியை கொடுத்தால் அவர்கள் ஜெயிலுக்குள் இருப்பார்கள்.

    நாம் பாகிஸ்தானில் விமான தாக்குதல் நடத்தினோம். ஆனால் அது இந்தியாவில் உள்ள காங்கிரசை பாதிக்கிறது.

    உங்களின் மைந்தனாகவும், காவலனாகவும் உள்ள என்னை டிக்‌ஷனரியில் உள்ள அனைத்து மோசமான வார்த்தைகளையும் பயன்படுத்தி திட்டுகிறார்கள்.

    நாட்டில் இருந்து காஷ்மீரை பிரிக்க வேண்டும், அங்கு தனி பிரதமர் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு காங்கிரஸ் ஆதரவாக இருக்கிறது.

    நாட்டில் உள்ள அனைத்து மன்னர் பிரதேசங்களையும் சர்தார் வல்லபாய் பட்டேல் வெற்றிகரமாக இந்தியாவோடு இணைத்தார். ஆனால் நேரு தலையீடு காரணமாக காஷ்மீரில் மட்டும் அது நடக்கவில்லை. இதனால்தான் இன்று நமது வீரர்கள் தங்கள் உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இவ்வாறு மோடி பேசினார்.

    ×