search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People of India"

    • உலக முட்டாள்கள் தினம் ஏப்ரல் 1-ம் தேதி கொண்டாட்டப்பட்டு வருகிறது
    • கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மனிதர் தந்திரமாகச் சொன்ன #AprilFool பொய்களை இன்னும் நம்பி கொண்டிருக்கிறது நமது இந்தியா!

    உலக முட்டாள்கள் தினம் ஏப்ரல் 1-ம் தேதி கொண்டாட்டப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பலரும் பல ஒலிகளை சொல்லி மற்றவரை ஏமாற்றுவர். அவ்வகையில் இன்று உலக முட்டாள் தினம் கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "ஒரு நினைவூட்டல்: இன்று #AprilFool என்கின்றனர் பலர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மனிதர் தந்திரமாகச் சொன்ன #AprilFool பொய்களை இன்னும் நம்பி கொண்டிருக்கிறது நமது இந்தியா!

    ஆண்டுக்கு 2 கோடி வேலை என்றார்! நம்பினோம்..

    அனைவருக்கும் 15 லட்சம் என்றார்! நம்பினோம்..

    ஸ்விஸ் வங்கியில் உள்ள கறுப்புப்பணம் இதோ வந்துவிட்டது என்றார்! நம்பினோம்..

    50 நாட்களில் தீக்குளிப்பேன் என்று கண்ணீர் வீட்டார்! நம்பினோம்..

    சமையல் பாத்திரங்களை தட்டினால் கொரோனா ஓடிவிடும் என்றார்! நம்பினோம்..

    இதோ இந்தியா வல்லரசாகி விட்டது என்றார்! நம்பினோம்..

    விநாயகருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது என்றார்! நம்பினோம்...

    2022-ற்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்றார்! நம்பினோம்..

    ஊழலை ஒழித்து கட்டிவிடுவேன் என்றார்! நம்பினோம்...

    இவற்றை எல்லாம் சொன்னது யார்? ஒன்றாவது நிறைவேறியதா? எதுவும் இல்லை.

    ஓட்டுமொத்த இந்தியர்களையும் தனது வார்த்தை ஜாலத்தால் முட்டாளாக்கியது யார்? April 19-ல் பதிலடி கொடுப்போம். இந்தியாவை காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரெய்லர்தான் என்று மீரட்டில் நடந்த தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேசினார்
    • போட்டோ ஷூட், ட்ரைலர், டீசர், ஆடியோ லாஞ்ச் எல்லாம் பண்ணுவதற்கு, இந்திய மக்களின் வாழ்க்கை என்ன சினிமா படமாக தெரிகிறதா பிரதமர் மோடிக்கு?

    பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரெய்லர்தான்; கடந்த 10 ஆண்டுகளில் சாத்தியமற்றதாக கருதப்பட்ட விஷயங்களை சாத்தியமாக்கி இருக்கிறோம். ஊழல்வாதிகள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று மீரட்டில் நடந்த தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேசினார்.

    இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில்,

    "10 ஆண்டு ஆட்சி ட்ரெயிலர் என்கிறார். போட்டோ ஷூட், ட்ரைலர், டீசர், ஆடியோ லாஞ்ச் எல்லாம் பண்ணுவதற்கு, இந்திய மக்களின் வாழ்க்கை என்ன சினிமா படமாக தெரிகிறதா பிரதமர் மோடிக்கு?

    வெற்று கதைகளை பேசுவதற்கு பதிலாக கறுப்புப் பணத்தை ஒழித்துவிட்டேன் என்று சொல்வாரா மோடி?

    20 கோடி வேலை வாய்ப்பை உருவாக்கினேன் என்று சொல்வாரா மோடி?

    நாட்டிலேயே அமித்ஷாவின் உள் துறை தான் ஊழல் மிக்க துறை, இதை வைத்துக்கொண்டு ஊழலை ஒழித்து விட்டேன் என்று சொல்வாரா மோடி?

    இந்திய மக்கள் ட்ரெயிலரையும், ப்ரிவ்யூ ஷோவையும் எதிர்பார்க்கவில்லை. வளர்ச்சிக்கான ஆட்சியை தான் எதிர்பார்த்தனர். ஆனால் அதை உங்களால் தரமுடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளீர்கள். கடந்த 10 ஆண்டுகளில், அனைத்து தளங்களிலும் இந்தியா தோல்வியடைந்தது மட்டுமல்லாமல் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. ஊழல் தலைவிரித்தாடும் இந்த பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் அதல பாதாளத்திற்கு சென்றுவிடும்" என்று பதிவிட்டுள்ளார்.

    ×