என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

எடப்பாடி அரசின் ஆயுட்காலம் இன்னும் 60 நாட்கள் தான்: தமிழருவி மணியன் பேச்சு

கோவை:
தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். லோக் ஆயுக்தா சட்டத்தை கூர்மைபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காந்திய மக்கள் இயக்க மாநில இளைஞரணி சார்பில் கோவை காந்தி பார்க் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் காந்திய மக்கள் இயக்க நிறுவன தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது-
மதுவற்ற தமிழகம், ஊழலற்ற நிர்வாகம் ஆகிய இரண்டையும் லட்சியமாக கொண்டு காந்திய மக்கள் இயக்கம் கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி தொடங்கப்பட்டது. இன்று வரை அந்த லட்சியத்தை நோக்கி பயணித்து வருகிறது. பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கடந்த ஒரு வருடத்திற்கு முன் அம் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி உள்ளது.
அதன் பின்னர் அங்கு பெருமளவு குற்றங்கள் குறைந்து இருப்பதாகவும் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து இருப்பதாகவும் அம் மாநில அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடையால் ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. அதனை இழக்க அரசு தயாராக இல்லை என்பதாக உள்ளது.
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது மதுக்கடையை மூடினால் ஏற்படும் இழப்புக்கு மாற்று திட்டம் தயார் செய்து கொடுத்ததோடு 16 லட்சத்து 800 மாணவர்களிடம் கையெழுத்து வாங்கி கொடுத்தோம்.
ஆனால் மாற்று ஏற்பாடு எதுவும் அரசு எடுக்கவில்லை. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு போராட்டம் நடந்து வருகிறது. இது ஒட்டு மொத்த தமிழகத்தை பாதிக்கும் பிரச்சினை அல்ல.
ஆனால் டாஸ்மாக்கிற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வில்லை. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி இருந்தால் டாஸ்மாக் கடையை மூட வழி பிறந்து இருக்கும்.
சட்ட பேரவையில் தி.மு.க.வுக்கு 98 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 106 எம்எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் 8 வழி சாலை பிரச்சினையில் ஒன்றிணைந்து தங்கள் பணியை தீவிரப்படுத்தி இருந்தால் இந்த ஆட்சிக்கு தலை வலி ஏற்பட்டு இருக்கும்.
ஆளும் கட்சியுடன் எதிர்கட்சி ரகசிய ஒப்பந்தம் செய்து உள்ளது. ஊழல் படிந்த கட்சிகள் கூட்டு பேரம் நடத்தி உள்ளது.
குட்கா முதல் முட்டை வரை ஊழல் நடைபெற்று உள்ளது. இந்த ஆட்சியின் ஆயுட்காலம் இன்னும் 60 நாட்கள் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் தமிழருவி மணியன் கூறியதாவது-
ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான ஆட்சி என்பது தான் எங்கள் இலக்கு. தமிழகத்தில் மாற்று அரசியல் என்பதற்கு காலம் எங்கள் கண் முன் காட்டுவது ரஜினிகாந்த் தான். தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான, பொருளாதார வளர்ச்சி அமைய வேண்டும் என்றால் ரஜினியை ஆதரிக்க வேண்டும்.
காந்திய மக்கள் இயக்கத்திற்கு ரஜினிகாந்த் அழைப்பு விடுத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக காந்திய மக்கள் இயக்கத்தை கலைத்து விட்டு ரஜினியுடன் இணையும் என்பது வதந்திதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் டாக்டர் டென்னிஸ் மற்றும் இளைஞர் அணித்தலைவர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் ஆ.கணேசன், எம்.கந்தசாமி, கே.கந்தசாமி, வாசு, குருவம்மாள், சுரேஷ்பாபு, ராஜீவ், கிருஷ்ணமூர்த்தி, கோவை மாவட்ட நிர்வாகிகள் துரை சந்திரன், திருமலை, ராஜன், சற்குணன்,உள்பட திராளானோர் கலந்து கொண்டனர். #tamilaruvimanian #edappadipalanisamy #rajinikanth
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
