என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ops eps"

    • தொலைபேசியில் பேசிய நிலையிலும் வெளியேறும் முடிவை பன்னீர்செல்வம் எடுத்துள்ளார்.
    • முதல்வரை பன்னீர்செல்வம் சந்தித்தது தொகுதி அல்லது சொந்த பிரச்னைக்காக இருக்கலாம்.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

    இதுதொடர்பாக கேள்வி கேட்ட செய்தியாளர்களுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தே.ஜ.கூட்டணியில் இருந்து வெளியேறிய பன்னீர்செல்வத்துடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். அந்த நிலையிலும் வெளியேறும் முடிவை பன்னீர்செல்வம் எடுத்துள்ளார்.

    பன்னீர் செல்வம் வெளியேறியது சொந்தப் பிரச்னையா அல்லது வேறு காரணமா எனத் தெரியவில்லை. பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டால் வரும் 26ம் தேதி பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன்.

    முதல்வரை பன்னீர்செல்வம் சந்தித்தது தொகுதி அல்லது சொந்த பிரச்னைக்காக இருக்கலாம். இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை. அது தவறான கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெருப்பு இல்லாமல் புகையாது. அதுபோல் தான் டாஸ்மாக்கில் புகார்கள் இருப்பதால் தான் சோதனை நடைபெறுகிறது.
    • ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர்.

    மதுரை:

    மதுரை தனியார் மருத்து வக்கல்லூரி விடுதியில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்தபின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டின் பாதுகாப்புக்காக போராடிய ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாகவும் பிரதமரை பாராட்டும் விதமாகவும் மூவர்ணக்கொடி யாத்திரை தமிழக முழுவதும் நடை பெற்று வருகிறது.

    தமிழகத்தில் தொடர்ந்து டாஸ்மாக் அலுவலர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. அது ஒரு தனிப்பட்ட அமைப்பு.

    அமலாக்கத்துறை சோதனைக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. அது ஒரு சுதந்திரமாக செயல்படும் அமைப்பு. நெருப்பு இல்லாமல் புகையாது. அதுபோல் தான் டாஸ்மாக்கில் புகார்கள் இருப்பதால் தான் சோதனை நடைபெறுகிறது. தமிழக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை குறித்து எனக்கு முழுமையாக தெரியாது.

    த.வெ.க. தலைவர் விஜய் பா.ஜ.க. கூட்டணியில் பங்கு பெற விருப்பமில்லை எனக்கூறியது அவருடைய சொந்த விருப்பம். தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் அனைவரும் ஓரணியாக இணைந்தால் எளிதாக இருக்கும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. அப்போது பா.ஜ.க. கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

    2026-ல் தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் கூறி உள்ளார். அவர் கருத்து சொல்வதற்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் அதை தீர்மானிக்கக்கூடிய சக்தி மக்களிடம் தான் உள்ளது.

    நம் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களை பற்றி யாரும் குறை சொல்லி பேசக்கூடாது. ஓ.பன்னீர் செல்வம் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறார். அதில் எதுவும் சந்தேகமில்லை. அவர் கூட்டணியில் இருப்பதால் அமித்ஷா சென்னைக்கு வந்தபோது சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கலாம்.

    ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர். அதில் எதுவும் சந்தேகம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தஞ்சாவூர் மற்றும் குடவாசல் அ.தி.மு.க. நிர்வாகிகள் மரணம் அடைந்ததற்கு ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இரங்கல் தெரிவித்துள்ளனர். #opseps #admk

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கே.எம்.அப்துல் முத்தலிப் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்து விட்டார். என்ற செய்தி கேட்டும், குடவாசல் தெற்கு ஒன்றியம், பருத்தியூர் ஊராட்சியைச் சேர்ந்த கழக உடன்பிறப்பு குமார், தேர்தல் தகராறு முன்விரோதம் காரணமாக உள்ளூரைச் சேர்ந்த எதிரிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டும் ஆற்றொணாத் துயரம் அடைந்தோம்.

    அன்பு சகோதரர்கள் அப்துல் முத்தலிப், குமார் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணம் அடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #opseps #admk

    ×