என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Nirmala sitharaman"

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்றார்.
    • அங்கு அவர் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்றார். கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சென்ற அவர் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.

    வரும் சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைப்பது தொடர்பாக இருதரப்பினரும் பேசியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்தார்.

    அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி உறுதி. அதற்கு வசதியாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவார் என தகவல்கள் தொடர்ந்து வெளியாகின.

    இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான தம்பிதுரை இன்று சந்தித்துப் பேசினார். பாராளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

    கடந்த சில நாட்களாக பா.ஜ.க-அ.தி.மு.க. தலைவர்கள் இடையேயான சந்திப்பு தொடர்ந்து வருகிறது. இதன்மூலம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது.

    • நிதி குழு பரிந்துரைப்பதை தான் நான் பின்பற்றுகிறேன்.
    • நிதிக்குழுவின் பரிந்துரையை தான் ஒவ்வொரு நிதியமைச்சரும் பின்பற்றுவார்கள்.

    பாஜக அல்லாத மாநிலங்களுக்கு நிதி பகிர்வில் ஓரவஞ்சனை காட்டப்படுவதாக காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டினார்.

    இதற்கு மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது," ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்பானிப்பது நான் அல்ல, நிதி குழு தான்.

    நிதி குழுவும் தாங்களாகவே, பகிர்ந்து அளிக்கப்பட வேண்டிய நிதி குறித்து முடிவு செய்வதில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் நிதிக்குழு நேரில் சென்று கலந்து ஆலோசனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.

    நிதி குழு பரிந்துரைப்பதை தான் நான் பின்பற்றுகிறேன். நிதிக்குழுவின் பரிந்துரையை தான் ஒவ்வொரு நிதியமைச்சரும் பின்பற்றுவார்கள்.

    பிடித்த மாநிலம், பிடிக்க மாநிலத்திற்கு ஏற்றார் போல நிதியை மாற்றுவதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பெங்களூரு நகரில் முன்னாள் ராணுவ வீரர்களுடன் அமர்ந்து 'உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ திரைப்படத்தை பார்த்து ரசித்தார். #NirmalaSitharaman #Uri
    பெங்களூரு:

    ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையை ஒட்டிய உரி பகுதியில் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு அதிரடி படையினர் கடந்த 2016-ம் ஆண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 17 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அதிரடியாக ’துல்லியமான தாக்குதல்’ (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்திவிட்டு, வெற்றிகரமாக திரும்பி வந்தனர். இந்திய வீரர்களின் இந்த சாகசத்தை மையமாக வைத்து  ‘உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்’  என்ற பெயரில் இந்தி திரைப்படம் தயாரானது.

    பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பெங்களூரு நகரில் முன்னாள் ராணுவ உயரதிகாரிகள், முன்னாள் வீரர்களுடன் அமர்ந்து  பார்த்து ரசித்தார்.

    முன்னதாக, பெலன்டுர் பகுதியில் உள்ள சென்ட்ரல் ஸ்பிரிட் மாலுக்கு படம் பார்க்கவந்த நிர்மலா சீதாராமனுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. #NirmalaSitharaman  #Uri  
    ×