என் மலர்
நீங்கள் தேடியது "உரி"
ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பெங்களூரு நகரில் முன்னாள் ராணுவ வீரர்களுடன் அமர்ந்து 'உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ திரைப்படத்தை பார்த்து ரசித்தார். #NirmalaSitharaman #Uri
பெங்களூரு:
ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையை ஒட்டிய உரி பகுதியில் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு அதிரடி படையினர் கடந்த 2016-ம் ஆண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 17 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அதிரடியாக ’துல்லியமான தாக்குதல்’ (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்திவிட்டு, வெற்றிகரமாக திரும்பி வந்தனர். இந்திய வீரர்களின் இந்த சாகசத்தை மையமாக வைத்து ‘உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்ற பெயரில் இந்தி திரைப்படம் தயாரானது.
பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பெங்களூரு நகரில் முன்னாள் ராணுவ உயரதிகாரிகள், முன்னாள் வீரர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார்.
முன்னதாக, பெலன்டுர் பகுதியில் உள்ள சென்ட்ரல் ஸ்பிரிட் மாலுக்கு படம் பார்க்கவந்த நிர்மலா சீதாராமனுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. #NirmalaSitharaman #Uri
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். #PakistanArmy #Violate
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ள உரி பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று அதிகாலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அவர்கள் கமால் கூட் பகுதியில் உள்ள வீடுகள் மீது கையெறி குண்டுகளை வீசினர். தாக்குதலின் சேத விவரங்கள் வெளியாகவில்லை.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி காஷ்மீரின் சம்பா மற்றும் கதுவா மாவட்டங்களில் பாகிஸ்தான் படையினர் நடத்திய அத்துமீறி தாக்குதலுக்கு நேற்று அப்பாவி பொதுமக்கள் 5 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanArmy #Violate






