search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    68 தொகுதிகளை கொண்ட இமாச்சலபிரதேசத்தில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
    X

    68 தொகுதிகளை கொண்ட இமாச்சலபிரதேசத்தில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது

    • 68 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஒரே நேரத்தில் பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளது.
    • சிர்மோர் தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரியங்கா பேசுகிறார்.

    68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு வருகிற 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் பாஜக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் வேட்கையில் உள்ளது. ஆம் ஆத்மியும் களத்தில் குதித்துள்ளது. இதனால் 3 முனை போட்டி நிலவுகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரம் செய்து பாஜகவுக்கு வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் பிரியங்கா தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.

    நிறைவு நாளில் காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. 68 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஒரே நேரத்தில் பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளது. சிர்மோர் தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரியங்கா பேசுகிறார். அதே நேரத்தில் அவர் ஷிம்லாவில் வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரிக்கிறார்.

    Next Story
    ×