சென்னை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டது தோழர் நல்லக்கண்ணு உடல்!

அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.சென்னை மருத்துவக் கல்லூரியில் உடல் ஒப்படைக்கப்பட்டது
சென்னை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டது தோழர் நல்லக்கண்ணு உடல்!
Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான நல்லகண்ணு வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக் குறைவுகளுக்கு சிகிச்சை பெற்றுவந்தநிலையில் நேற்று உயிரிழந்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பிற்பகல் 1:55 மணிக்கு உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அவரது உடல் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், நடிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இன்றுகாலை வரை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. 

இந்நிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் குடும்பத்தினர் அவரது உடலை முறைப்படி சென்னை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம், மருத்துவ மாணவர்களின் கல்விக்காக ஒப்படைத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com