என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kolathur"

    • கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம் ரூ.53 கோடி செலவில், 184 கடைகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது.
    • உணவகங்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் அமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை, வில்லிவாக்கம், சிவசக்தி நகரில் வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம் கட்டப்பட்டு உள்ளது. இதனை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம் ரூ.53 கோடி செலவில், 184 கடைகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. உணவகங்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் அமைக்கப்பட்டு உள்ளது.

    11-ந்தேதி (நாளை) மாலை 6 மணிக்கு கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, வெற்றி அழகன் எம்.எல்.ஏ., சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர்-முதன்மைச் செயலாளர் பிரகாஷ், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் சுப்பையன், முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கமிஷனர் க.வீ.முரளிதரன், மாநகராட்சி மத்திய வட்டார துணை கமிஷனர் கவுசிக் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • மகளிர் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
    • அரசின் திட்டங்களால் தமிழகம், பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

    கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார்.

    நலத்திட்ட உதவிகள் வழங்கு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற 127 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

    அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி கொளத்தூர் தொகுதியை எடுத்துக்காட்டு தொகுதியாக மாற்றியுள்ளோம்.

    யார் என்ன சொன்னாலும் முன்னேற்றத்தை இலக்காக கொண்டு பயணிக்க வேண்டும்.

    பெண்கள் சமூதாயத்தில் முன்னேற்றம் அடைய ஊக்கம் அளிக்கும் நாள் மார்ச் 8.

    மகளிர் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

    அரசின் திட்டங்களால் தமிழகம், பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

    தமிழ்நாட்டை வஞ்சிக்காத மதிக்கின்ற மத்திய அரசு அமைய வேண்டும்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெரம்பூர் தொகுதியில் தான் அதிகபட்சமாக விண்ணப்பித்துள்ளனர்.
    • மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் மனுக்கள் பெறப்படுகிறது.

    சென்னை:

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் 4 நாட்கள் நடைபெற்றன.

    சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 947 வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 16, 17 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    சிறப்பு முகாம்கள் மூலம் மொத்தம் 89,256 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 18 வயது நிரம்பிய இளம் வயதினர் மட்டும் 58,374 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம்-6ஐ பூர்த்தி செய்து கொடுத்து உள்ளனர். இவர்கள் 18 வயது நிரம்பியதற்கான வயது சான்றுடன் விண்ணப்பித்தனர்.

    பெரம்பூர் தொகுதியில் தான் அதிகபட்சமாக 6,097 பேர் விண்ணப்பித்துள்ளனர். அடுத்ததாக ஆர்.கே.நகர் தொகுதியில் 5,227 பேரும், திரு.வி.க. நகர் தொகுதியில் 5,306 பேரும் மனு கொடுத்துள்ளனர்.

    வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தவர்கள், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்வதற்கு 29,501 பேர் மனு கொடுத்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து 1,371 பெயரை நீக்கம் செய்யவும் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.

    ஒட்டு மொத்தமாக அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட தொகுதியாக பெரம்பூர் தொகுதி உள்ளது. அங்கு 9,013 படிவங்கள் பெறப்பட்டன. அடுத்ததாக கொளத்தூரில் 8,422 படிவங்களும் மூன்றாவதாக ஆர்.கே.நகர் தொகுதியில் 7,737 படிவங்களும் பெறப்பட்டன.

    சிறப்பு முகாம்கள் முடிந்தாலும் கூட இன்று முதல் 28-ந்தேதி வரை மேலும் 4 நாட்கள் பெயர் சேர்க்க, திருத்தங்கள் செய்ய மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் மனுக்கள் பெறப்படுகிறது.

    • கொளத்தூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
    • அதிகளவு மழை பெய்த விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு மூத்த அதிகாரிகள், உயரதிகாரிகள் விரைந்துள்ளனர்.

    ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர்.

    செல்விநகர் நீர் உந்து நிலையத்தில் ஆய்வு நடத்திய முதலமைச்சர், அப்பகுதி மக்களிடம் மழைநீர் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகளின் இருப்பு குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    கொளத்தூர் சீனிவாச நகர் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களின் வருகைப்பதிவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

    இதையடுத்து கொளத்தூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்து அவர் கேட்டறிந்தார்.

    இந்நிலையில் கொளத்தூரில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டை நாங்கள் மதிப்பதுமில்லை; கவலைப்படுவதும் இல்லை.

    * அதிகளவு மழை பெய்த விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு மூத்த அதிகாரிகள், உயரதிகாரிகள் விரைந்துள்ளனர்.

    * மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதியை அனுப்பி உள்ளேன்.

    * தலைநகரம் நிம்மதியாக இருக்கிறது.

    * வானிலையை ஓரளவுக்குத்தான் கணிக்க முடியும். புயலின் வேகம் குறைந்து ஒரே இடத்தில் நிற்பதை எப்படி கணிப்பது? திடீரென மாறி விடுகிறது.

    * வானிலை மையம் கொடுக்கும் தகவல் அடிப்படையில்தான் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.

    • பல அரசு அலுவலகங்களில் 40 ஆண்டுகளாக 200 குடும்பங்கள் பட்டா கேட்டு விண்ணப்பித்தோம்.
    • ஏரி உள்வாய் அரசு புறம்போக்கு நிலம் என்று புறக்கணிக்கிறார்கள்.

    வில்லிவாக்கம்:

    கொளத்தூர் பாரத் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த மாஸ்டர் வசந்தகுமார்ஜி தலைமையில் பொதுமக்கள் சென்னை மாவட்ட கலெக்டரிடம் பட்டா கேட்டு மனு கொடுத்தார்கள். அந்த மனுவில், "நாங்கள் 200 குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளாக கொளத்தூர் பாரத் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் வசித்து வருகிறோம்.

    எங்கள் வீடுகளுக்கு பட்டா கேட்டு நாங்கள் மனு அளித்த போது இந்த பகுதி ஏரி உள்வாயில் அரசு புறம்போக்கு நிலம் என்று தவிர்த்தார்கள். இதனால் நாங்கள் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டதில் அரசாங்க ஏரி உள்வாயில் புறம்போக்கு என்று எங்களுக்கு எழுத்து மூலமாக தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

    இங்கிருக்கும் நாங்கள் அனைவரும் தளம் போட்டு வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இதே முகவரியில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் 1994 -ம் ஆண்டு சென்னை கொளத்தூர் சர்வே எண் 13,14, பாரத் ராஜீவ் காந்தி நகரில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி சிறப்பு தாசில்தார் விஜயகுமார் என்பவரின் தலைமையில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அந்த நகலை வைத்து நாங்கள் பல அரசு அலுவலகங்களில் 40 ஆண்டுகளாக 200 குடும்பங்கள் பட்டா கேட்டு விண்ணப்பித்தோம். ஆனால் ஏரி உள்வாய் அரசு புறம்போக்கு நிலம் என்று புறக்கணிக்கிறார்கள். எனவே தாங்கள் எங்களுக்கு பட்டா வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

    • 13 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • இந்த ஆய்வின் போது மேயர் பிரியா, சென்னை மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் கொளத்தூர் ஏரியின் முன்னேற்ற பணிகள் குறித்து இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும முதன்மைச் செயல் அலுவலர் சிவஞானம், கண்காணிப்பு அலுவலர் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் கணேசன், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சி.எம்.டி.ஏ. சார்பில் 13 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகளை முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். கொளத்தூர் ஏரியில் ரூ. 6.26 கோடி செலவில் முக்கிய அம்சங்களாக நடைபாதை, குழந்தைகள் விளையாடும் இடம், ஒளிரும் மீன் சிற்பங்கள், இசை பூங்கா, தனித்துவமிக்க இருக்கைகள், படகு சவாரி, சூரிய விளக்கு கம்பங்கள், கரையில் செயற்கை நீர்வீழ்ச்சி, கடைகள், குடிநீர், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளன.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 45 மாதங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பெருநகர சென்னைக்கான சிந்தனையில் உதிர்த்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.

    ரூ.250 கோடி செலவில் 13 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் 9 ஏரிகளின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முடிந்த அளவிற்கு டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகளை நிறைவு செய்வதற்கு முடிவு செய்து இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை கொளத்தூரில், தேர்தல் அதிகாரி வீட்டில் 110 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
    சென்னை:

    சென்னை கொளத்தூர் வெற்றிவேல் நகர், முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி அல்லிதாமரை(வயது 56). இவர், வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட்டில் நில எடுப்பு சப்-கலெக்டராக இருந்து வருகிறார்.

    தற்போது சோளிங்கர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தனது வீட்டின் மாடியில் இவர் தனியாக வசித்து வருகிறார். தரை தளத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டு உள்ளார். கடந்த 2-ந் தேதி அல்லிதாமரை, வீட்டை பூட்டிக்கொண்டு தேர்தல் பணிக்காக சோளிங்கர் சென்றுவிட்டார்.

    இந்தநிலையில் நேற்று காலை மாடியில் உள்ள அல்லிதாமரையின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்கள், இதுபற்றி அவருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 110 பவுன் நகை, ரூ.3 லட்சம் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து கொளத்தூர் போலீசில் அல்லிதாமரை புகார் செய்தார். அதன்பேரில் அண்ணாநகர் துணை கமிஷனர் சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

    வீட்டில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை, கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொளத்தூரில் மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாதரவம்:

    கொளத்தூர் அஞ்சுகம் நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர் ஜம்புலிங்கம். இவரது மனைவி வசந்தா (வயது 65) இவர் இன்று அதிகாலை வீட்டின் கதவைத் திறந்து வெளியேவந்த போது மர்ம ஆசாமிகள் வசந்தா கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து கொளத்தூர் போலீசில் புகார் தெரிவித்தனர் புகாரின்பேரில் கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர் அதிகாலையில் இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதியில் நடை பெறுவதால் பெண்கள் வெளியில் வருவதற்கு அச்சப்படுவதாக தெரிவித்தனர்.

    வாழப்பாடி- கொளத்தூர் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொளத்தூர், பெரியதண்டா, நீதிபுரம், காவேரிபுரம், சின்னதண்டா, கண்ணா மூச்சி, கோவிந்தபாடி, தின்னப்பட்டி, பாலமலை, ஐயம்புதூர், ஆலமரத்துப் பட்டி, சுப்பிரமணியபுரம், பண்ண வாடி, குரும்பனூர், சவுரியார் பாளையம், மூலக்காடு, மாசிலா பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இந்த தகவலை மேட்டூர் அணை மின் வாரிய செயற்பொறியாளர் சேகரன் தெரிவித்துள்ளார்.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி கோட்டம், தும்பல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

    ஆகவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தும்பல், பனைமடல், எடப்பட்டி, மாமாஞ்சி, சேலூர், பாப்பநாயக்கன் பட்டி, வெள்ளாளப் பட்டி, செக்கடிப்பட்டி, தாண்டானூர், ஈச்சங்காடு, மண்ணூர், கருமந்துறை, யு.குமாரபாளையம், கலக்காம்பாடி, பகடுப்பட்டு, குண்ணூர், மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இந்த தகவலை வாழப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    சென்னை மாவட்ட அதிமுக சார்பில் ஈழ தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவத்துக்கு உதவிபுரிந்த தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நாளை பெரவள்ளூரில் நடக்கிறது. #ADMK
    சென்னை:

    சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈழ தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவத்துக்கு உதவி புரிந்த தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நாளை (செவ்வாய்) மாலை கொளத்தூர் பெரவள்ளூர் சதுக்கம் அருகில் நடக்கிறது.

    கூட்டத்துக்கு வடசென்னை வடக்கு (மே) மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு எம்.பி. தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர்கள் ஆர்.எஸ்.ராஜேஷ், நா.பாலகங்கா, வி.என்.ரவி, தி.நகர் சத்யா, எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., ஜெயவர்தன் எம்.பி., நட்ராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் பேசுகிறார்கள். செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜா, நடிகர் அஜய் ரத்தினம், முன்னாள் கவுன் சிலர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். #ADMK
     
    ×