search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "RK nagar"

  சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஆர்.கே.நகர்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார் #RKNagar #Vaibhav
  பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் வெங்கட் மற்றும் ஷ்ரத்தா என்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `ஆர்.கே.நகர்'. சரவண ராஜன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைபவ் நாயகனாகவும், சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

  இனிகோ பிரபாகரன், சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், டி.சிவா, ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

  இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளதாக வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

  சில தவிர்க்க முடியாத காரணங்கள், செய்யாத தவறுக்காக, நாங்கள் நிறைய பிரச்சனையை சந்திக்கிறோம். தேர்தலுக்கு பிறகு தான் படம் ரிலீசாகும் என்று என்று சொல்கிறார்கள். சம்பந்தப்பட்ட யாரையும் குறிப்பிட விரும்பவில்லை, படம் ரிலீசாகும் போது உங்களது ஆதரவை கொடுக்க வேண்டும். பிரச்சனை விரைவில் சரியாகும்.. இந்த படத்தில் கண்டிப்பாக அரசியல் இல்லை. யாரையும் குறிப்பிட்டு இந்த படத்தை உருவாக்கவில்லை. இது ஒரு ஜனரஞ்சகமான படம், எனவே தல பாணியில் சொல்ல வேண்டும் என்றால், வாழு, வாழவிடு. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

  பிரேம்ஜி அமரன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு வெங்கடேஷ்.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன்.கே.எல். படத்தொகுப்பையும், விதேஷ் கலை பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். #RKNagar #Vaibhav

  ஆர்.கே. நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு டோக்கன் முறையில் பணம் வினியோகம் செய்யப்பட்டதை போன்று நாகர்கோவிலிலும் பா.ஜனதாவினர் செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. #Congress
  அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

  தற்போது கன்னியாகுமரி மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் பணப்பட்டுவாடா செய்து வருகிறது. இச்செயல்களை தேர்தல் ஆணையமும் கண்டு கொள்வதில்லை. மோடிக்கு எதிரானவர்கள், இந்தியாவிற்கும் எதிரானவர்கள் என்று உத்தரபிரதேசத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்தியநாத் கூறியிருப்பது மக்கள் மனதை காயப்படுத்தி உள்ளது.

  நாகர்கோவிலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பா.ஜனதா பிரசார காரில் பணம் மற்றும் பணம் வினியோகம் செய்வதற்கான டோக்கன்களை கொண்டு சென்றனர். இதனை நாகர்கோவில் நேசமணிநகர் போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் காரில் டோக்கன்கள் மட்டும் இருந்ததாக அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். இது முற்றிலும் பொய்யானது.

  பல லட்ச ரூபாய் காரில் இருந்ததாகவும், பணப்பட்டுவாடா செய்ததற்கான துண்டு சீட்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம் மேலிட தலைவர்கள் அழுத்தம் காரணமாக காரில் பணம் இருந்த வி‌ஷயம் மூடி மறைக்கப்பட்டுள்ளது. சென்னை ஆர்.கே. நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு டோக்கன் முறையில் பணம் வினியோகம் செய்யப்பட்டதை போன்று நாகர்கோவிலிலும் பா.ஜனதாவினர் செய்துள்ளனர்.

  அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. பா.ஜனதா ஆட்சியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கியாஸ் விலையும் பலமுறை உயர்ந்துள்ளது. இது பற்றியெல்லாம் பேசாத மோடி, நாட்டிற்கு தேவையில்லா கருத்துக்களை பதிவிடுகிறார்.

  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு எந்த ஒரு உள்கட்டமைப்பும் பொன். ராதாகிருஷ்ணன் கொண்டு வரவில்லை. இந்த 5 வருடத்தில், பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் ஊழல் அதிகரித்துள்ளது.

  பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு வாக்களித்தால் இன்னும் பல நிரவ் மோடி, விஜய் மல்லையா போன்றவர்களுக்கு வாக்களிப்பதற்கு சமம். இதனால் நமது நாட்டின் முன்னேற்றம் கேள்விக்குறியாகி விடும்.

  இவ்வாறு சஞ்சய்தத் கூறினார். #Congress
  இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆர்.கே.நகர்’ படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். #RKNagar
  இயக்குனர் வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் சார்பில் நடிகர் வைபவை வைத்து ‘ஆர்.கே.நகர்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை ‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்கியுள்ளார். 

  இதில் வைபவுக்கு ஜோடியாக ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் நடித்த சானா அல்தாப் நடித்திருக்கிறார். மேலும் சம்பத், இனிகோ பிரபாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடந்து வந்தது.  தற்போது இப்படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரபு அறிவித்திருக்கிறார். மேலும் தேர்தல் தேதி (படம் ரிலீஸ் தேதி)-யை விரைவில் அறிவிக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். 
  ஆர்கே நகரில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்எஸ் ராஜேஷ் ஏற்பாட்டில் ரூ.18 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியமைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
  ராயபுரம்:

  வட சென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் ஏற்பாட்டில் ஆர்.கே.நகரில் 18 மீனவ கிராமங்களில் ரூ.18 லட்சம் செலவில் குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகிறது.

  முதல் கட்டமாக ஆர்.கே. நகர் புதுமனைகுப்பம் மீனவ கிராமத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது. இந்த கேமரா இன்னும் முறைப்படி திறக்கப்படவில்லை.

  இந்த நிலையில் நேற்று புதுமனை குப்பத்திற்கு ஆட்டோவில் வந்த பெண் ஒருவர் தனது கைப்பை மற்றும் விலை உயர்ந்த பொருட்கள், ஆதார் கார்டு, ஏடிஎம் கார்டு போன்றவற்றையும் தவற விட்டுவிட்டார். அந்த பகுதியில் புதிதாக அமைக் கப்பட்ட கண்காணிப்பு கேமராவில் அந்த ஆட்டோ குறித்த தகவல்கள் இடம் பெற்றிருந்தது.

  இதையொட்டி அ.தி.மு.க. பிரமுகர்கள் அந்த கண்காணிப்பு காட்சிகளை காவல் துறையிடம் அளித்தனர். போலீசார் சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவரை கண்டுபிடித்து தொலைந்த பொருட்களை மீட்டு அந்த பெண்ணிடம் ஒப்படைத்தனர்.

  இதை தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்கள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷை சந்தித்து கண்காணிப்பு கேமரா பொருத்தியமைக்கு நன்றி தெரிவித்தனர். #tamilnews
  18 எம்.எல்.ஏ.க்களின் அரசியல் வாழ்வை வீணடித்த டிடிவி தினகரன் ஆர்கேநகர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியுள்ளார். #ministerkamaraj #dinakaran #mkstalin #rknagar

  திருவாரூர்:

  திருவாரூரில் அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் தினகரன் அணியின் வலங்கைமான் ஒன்றிய அவைத்தலைவர் கண்ணையன், அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்

  பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-

  ஜெயலலிதா இறந்த பிறகு அ.தி.மு.க. ஆட்சி போய்விடும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பெரிய கனவு கண்டார். அதனால் நேரடியாக ஆட்சிக்கு வந்து விடலாம் என எண்ணினார். அதற்காக அவர் எடுத்த முயற்சிகள் பிறர் கேலி செய்யும் அளவிற்கு போய் விட்டது.

  ஸ்டாலின் கண்ட கனவு ஒருபோதும் பலிக்காது. ஸ்டாலினின் கனவுக்கு துணை போனவர் டி.டி.வி.தினகரன். ஸ்டாலினும் தினகரனும் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்த்து விடலாம் என கூட்டாக சேர்ந்து சதி செய்தனர். அவர்கள் இருவர் கண்ட கனவும் பலிக்கவில்லை. இனியும் ஒரு போதும் பலிக்காது.


  18 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு அ.தி.மு.க. ஆட்சி கவிழ்ந்து விடும் என கூறிக் கொண்டிருந்த தினகரனுக்கு ஐகோர்ட்டில் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. இனி யார் நினைத்தாலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது. மேலும் தன்னுடைய சுயலாபத்திற்காக 18 பேரின் அரசியல் வாழ்க்கையை வீணடித்தவர் தினகரன். அரசியலில் ஏற்பட்ட தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும்.

  தற்போது திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தால் அந்த பகுதி மக்களின் ஆதரவை பெற்று அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். இந்த 2 தொகுதி மட்டுமல்ல, 20 தொகுதிக்கும் உடனடியாக இடைத் தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.

  இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார். #ministerkamaraj #dinakaran #mkstalin #rknagar

  ஆர்.கே.நகரில் போலி பீடி தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ராயபுரம்:

  செனாய் நகரை சேர்ந்தவர் ஜோஷிதரன். பிரபல பீடி கம்பெனியில் மானேஜராக உள்ளார். இவர் தங்களது பீடி கம்பெனி பெயரில் போலியாக பீடி தயாரித்து விற்கப்படுவதாக ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்தார்.

  இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ராயபுரம், கொருக்குப்பேட்டை பகுதியில் போலி பீடி தயாரித்து விற்ற சண்முகவேல், ராம்குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான போலி பீடிகள்,, லேபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

  தொகுதிக்கு வர விடாமல் தன்னை அ.தி.மு.க.வினர் தடுப்பதாக ஆர்.கே. நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #TTVDinakaran #RKNagar
  சென்னை:

  சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் எம்எல்ஏ டிடிவி தினகரன் இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்காக அவர் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தினர். வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதையடுத்து டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும் அ.தி.மு.க.வினருக்குமிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. பின்னர் போலீசார் வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர்.

  இந்த சம்பவம் குறித்து டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

  தொகுதிக்கு வந்த என்னை அதிமுகவினர் தடுக்கிறார்கள். இப்படி செய்தால் தொகுதிக்கு வரமாட்டேன் என நினைத்து போராட்டம் நடத்துகிறார்கள். 

  எங்களுக்கு எதிராக 20 ரூபாய் நோட்டைக்காட்டி போராட்டம் நடத்தியவர்கள் பொதுமக்கள் இல்லை. என் பெயரைச் சொல்லி டோக்கன் வழங்கியவர்கள் அ.தி.மு.க.வினர்தான். அவர்கள்தான் இப்போது போராட்டம் நடத்தி வன்முறையில் ஈடுபடுகிறார்கள். கல்வீசி தாக்கியவர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமன்றத்தை அணுகப்போகிறோம்.

  இவ்வாறு அவர் கூறினார். #TTVDinakaran #RKNagar
  ஆர்கே நகரில் எம்எல்ஏ டிடிவி தினகரன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்களின் வாகனங்கள் மீது கற்களை வீசி சிலர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. #RKNagar #TTVDhinakaran
  சென்னை:

  சென்னை ஆர்கே நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தோற்கடித்தார். ஆனால் தினகரன் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்தபோது, வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதற்காக 20 ரூபாய் டோக்கன் போல கொடுத்து, தேர்தலுக்கு பின்னர் அதனைக் காட்டி 10 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியதாக புகார் எழுந்தது. 20 ரூபாய் நோட்டை பலர் பத்திரமாக வைத்திருந்து டிடிவி தினகரன் தரப்பில் இருந்து பணம் வரும் என்று பலர் காத்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

  டிடிவி தினகரன் தொகுதிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வரும்போது இந்த விவகாரம் வெடித்தது. ஏப்ரல் மாதம் ஆர்.கே நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக டிடிவி தினகரன் அங்கு வந்துள்ளார். அவரது வருகையின் போது பொதுமக்கள் பலர் 20 ரூபாய் நோட்டை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

  இந்நிலையில், டிடிவி தினகரன் எம்எல்ஏ இன்று ஆர் கே நகர் தொகுதியில் உள்ள தண்டையார்பேட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக தண்டையார்பேட்டையில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். பயனாளிகளும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

  ஆனால், டிடிவி தினகரன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 ரூபாய் நோட்டுக்களை காட்டி முழக்கமிட்டனர். டிடிவி ஆதரவாளர்களின் வாகனங்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சிலர் வீடுகளுக்குள் இருந்து கற்களை வீசி தாக்கினர். இதனை அடுத்து இரு தரப்பினரும் அங்கு திரண்டதால், திடீர் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து துணை ஆணையர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கல்வீசி தாக்கியதில் ஒரு பெண் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட சிலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

  இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி எதிர்ப்பாளர்களை கலைத்தனர். எம்எல்ஏ அலுவலகம் அமைந்துள்ள சாலை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. பயனாளிகள் தவிர மற்ற யாரும் அந்த வழியாக அனுமதிக்கப்படவில்லை. அதன்பின்னர் எம்எல்ஏ தினகரன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். #RKNagar #TTVDhinakaran
  ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் என்று இசையமைப்பாளர் அனிருத், ஆர்.கே.நகர் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். #RKNagar #Anirudh
  ‘சென்னை 600028’ படத்தின் இரண்டாம் பாகத்தை தன்னுடைய பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் சார்பில் தயாரித்த வெங்கட் பிரபு, இரண்டாவது படமாக வைபவை வைத்து ஆர்.கே.நகர் என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை ‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்கியுள்ளார். 

  வைபவுக்கு ஜோடியாக ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் நடித்த சானா அல்தாப் நடிக்கிறார். சம்பத் வில்லனாக நடிக்கிறார். பிரேம்ஜி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

  இதில் அனிருத் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு டிரைலரை வெளியிட்டார். பின்னர் அவர் பேசும்போது, ‘நான் இந்த படத்திற்கு விருந்தினராக வரவில்லை. ஒரு விசிறியாக வந்திருக்கிறேன். இந்த படத்தின் நாயகன் வைபவ் நடித்த ‘மேயாதமான்’ படத்தை இதுவரைக்கும் 10 தடவைக்கும் மேல் பார்த்திருப்பேன். அந்த படத்தில் வைபவ்வின் காமெடி, டைமிங் ஆகியவற்றை நானும் என் நண்பர்களும் ரசித்திருக்கிறோம். 

  ஆர்.கே.நகர் படத்தின் இயக்குனர் சரவண ராஜன் இயக்கத்தில் முந்தைய படமான ‘வடகறி’ படத்தில் நான் ஒரு பாட்டு பாடியிருக்கிறேன். நண்பர் விவேக்தான் இசையமைத்திருந்தார். இசை சுனாமி பிரேம்ஜிக்கும் எனக்கும் நல்ல நட்பு இருக்கிறது. இசை சுனாமி டைட்டில் பிரேம்ஜிக்கு பொருத்தமாக இருக்கிறது. இதை அவர் வைத்துக் கொள்ள நான் வேண்டிக்கிறேன்.   சிவாவிற்கும் நான் மிகப்பெரிய விசிறி. நான் தியேட்டரில் படம் பார்ப்பது குறைவு. ரஜினி, அஜித் படங்களை முதல் நாளில் போய் பார்ப்பேன். அதுக்குப் பிறகு சிவாவுடைய படத்தைதான் முதல் நாள் போய் பார்ப்பேன். மேடைக்காக சொல்லவில்லை. உண்மையாக சொல்லுகிறேன். அவருடைய காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரவுக்கும் நான் விசிறிதான். சினிமாவில் நண்பர்கள் கிடைப்பது அரிது. ஆனால், வெங்கட் பிரபு பெரிய நண்பர்கள் பட்டாளமே வைத்துள்ளார். அதை தொடர்ந்து மெயிண்டெயின் பண்ணிட்டு வருகிறார். என்னுடைய நண்பர்கள் குழுவும் இதை கடைப்பிடிக்க வலியுறுத்தி வருகிறேன். 

  இவர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘ஆர்.கே.நகர்’ படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்’ என்றார்.
  வெங்கட் பிரபு தயாரிப்பில் பிரேம்ஜி இசையில் உருவாகி இருக்கும் ‘ஆர்.கே.நகர்’ படத்தின் சென்சார் ரிசல்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. #RKNagar #RKNagarMovie
  தமிழகத்தில் ச