search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fake beedi"

    • ஆலங்குளத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • அந்த வழியாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தினர். உடனே வேனில் இருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓடினார்.

    நெல்லை:

    ஆலங்குளத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    போலி பீடி

    அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தினர். உடனே வேனில் இருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓடினார். இதனால் போலீசார் டிரைவரை பிடித்து வைத்துக்கொண்டு வேனை சோதனை செய்தனர்.

    அப்போது அதில் ஏராளமான பண்டல்களில் பீடி கட்டுகள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது அவை போலியான லேபிள் ஒட்டி கேரளாவிற்கு கடத்தி செல்ல கொண்டுவரப்பட்டது என்பது தெரியவந்தது.

    கைது

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிவேன் டிரைவரான செங்கோட்டை அருகே உள்ள கோட்டை வாசலை சேர்ந்த சந்தோஷ்(வயது 34) என்பவரை கைது செய்தனர்.

    வேனில் இருந்த 2,800 பீடி பண்டல்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய குருவன்கோட்டையை சேர்ந்த முருகன் என்பவரை தேடி வருகின்றனர்.

    சிங்கையில் உள்ள குடோன்களில் அதிரடி சோதனையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள போலி பீடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடையை சேர்ந்தவர் பக்கீர் முகமது (வயது57). இவர் நெல்லையில் உள்ள ஒரு பிரபல பீடி கம்பெனியில் விற்பனை மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது கம்பெனி பீடிகள் சமீபத்தில் சிங்கை பகுதியில் விற்பனை குறைந்துள்ளது. இதனால் கடைகளுக்கு சென்று விசாரித்தார். அப்போது புதிய ஏஜெண்டுகள் ‘பீடி’ பார்சல் சப்ளை செய்வதாக கூறினார்கள்.

    அந்த பீடிகளை வாங்கி பார்த்த போது அவைகள் போலி பீடிகள் என்று தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பக்கீர் முகமது சிங்கை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிங்கையில் உள்ள குடோன்களில் அதிரடி சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு பிரபலமான 4 பீடிக்கம்பெனிகளின் பெயரில் போலி பீடிகள் பண்டல், பண்டலாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. சுமார் 250-க்கும் மேற்பட்ட போலி பீடி பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி போலி பீடிகளை தயாரித்து சப்ளை செய்த ஆலங்குளத்தை சேர்ந்த சொரிமுத்து (32), சொக்க லிங்கம் (39) ஆகிய 2 பேர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆர்.கே.நகரில் போலி பீடி தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    செனாய் நகரை சேர்ந்தவர் ஜோஷிதரன். பிரபல பீடி கம்பெனியில் மானேஜராக உள்ளார். இவர் தங்களது பீடி கம்பெனி பெயரில் போலியாக பீடி தயாரித்து விற்கப்படுவதாக ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்தார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ராயபுரம், கொருக்குப்பேட்டை பகுதியில் போலி பீடி தயாரித்து விற்ற சண்முகவேல், ராம்குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான போலி பீடிகள்,, லேபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பொள்ளாச்சியில் போலி பீடி விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி பிரபல தனியார் நிறுவன பீடிகள் தென் மாவட்டங்களில் இருந்து போலியாக தயாரிக்கப்பட்டு அதிக அளவில் விற்பனை செய்து வருவதாக தனியார் பீடி கம்பெனி ஏஜண்ட் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில், பொள்ளாச்சி ராஜாமில் சாலையில் செயல்பட்டு வரும் மளிகை கடை உரிமையாளர் மந்திர மூர்த்திக்கு(52) தொடர்பு இருப்பது தெரிந்தது.

    மந்திரமூர்த்தியிடன் விசாரணை நடத்தியதில், தென்காசி, தூத்துக்குடி பகுதிகளில் இருந்து தனியார் பேருந்து மூலமாக போலி பீடிகளை கொண்டு வந்து பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் சிவக்குமார்(42), ரமேஷ்(25), சிவா(24), ஹரிகிருஷ்ணன்(76) ஆகியோர் விற்பனை செய்துள்ளனர்.இதையடுத்து மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து நீதிமன்றம் 2ல் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    நெல்லையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலி பீடி பண்டல்களுடன் நின்ற சுரண்டை வாலிபரை கைது செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பிரபல பீடி நிறுவனத்தின் பெயரில் போலி பீடிகள் உற்பத்தி செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். 

    பீடி நிறுவனத்தினரும் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் மேலப்பாளையம் ஆசுரா தெருவில் ஒரு இடத்தில் போலி பீடிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 80 பண்டல்களில் போலி பீடிகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தார்கள். 

    இது தொடர்பாக சுரண்டை அம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த நாகராஜன்(41) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
    ×