என் மலர்

  செய்திகள்

  சிங்கை அருகே போலி பீடிகள் பறிமுதல் - 2 பேர் கைது
  X

  சிங்கை அருகே போலி பீடிகள் பறிமுதல் - 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிங்கையில் உள்ள குடோன்களில் அதிரடி சோதனையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள போலி பீடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  நெல்லை:

  சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடையை சேர்ந்தவர் பக்கீர் முகமது (வயது57). இவர் நெல்லையில் உள்ள ஒரு பிரபல பீடி கம்பெனியில் விற்பனை மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.

  இவரது கம்பெனி பீடிகள் சமீபத்தில் சிங்கை பகுதியில் விற்பனை குறைந்துள்ளது. இதனால் கடைகளுக்கு சென்று விசாரித்தார். அப்போது புதிய ஏஜெண்டுகள் ‘பீடி’ பார்சல் சப்ளை செய்வதாக கூறினார்கள்.

  அந்த பீடிகளை வாங்கி பார்த்த போது அவைகள் போலி பீடிகள் என்று தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பக்கீர் முகமது சிங்கை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிங்கையில் உள்ள குடோன்களில் அதிரடி சோதனை செய்தனர்.

  அப்போது அங்கு பிரபலமான 4 பீடிக்கம்பெனிகளின் பெயரில் போலி பீடிகள் பண்டல், பண்டலாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. சுமார் 250-க்கும் மேற்பட்ட போலி பீடி பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

  இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி போலி பீடிகளை தயாரித்து சப்ளை செய்த ஆலங்குளத்தை சேர்ந்த சொரிமுத்து (32), சொக்க லிங்கம் (39) ஆகிய 2 பேர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×