என் மலர்
செய்திகள்

ஆர்.கே.நகருக்கு வரவிடாமல் என்னை தடுப்பது அ.தி.மு.க.வினர் தான்- டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
தொகுதிக்கு வர விடாமல் தன்னை அ.தி.மு.க.வினர் தடுப்பதாக ஆர்.கே. நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #TTVDinakaran #RKNagar
சென்னை:
சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் எம்எல்ஏ டிடிவி தினகரன் இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்காக அவர் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தினர். வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதையடுத்து டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும் அ.தி.மு.க.வினருக்குமிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. பின்னர் போலீசார் வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தொகுதிக்கு வந்த என்னை அதிமுகவினர் தடுக்கிறார்கள். இப்படி செய்தால் தொகுதிக்கு வரமாட்டேன் என நினைத்து போராட்டம் நடத்துகிறார்கள்.
எங்களுக்கு எதிராக 20 ரூபாய் நோட்டைக்காட்டி போராட்டம் நடத்தியவர்கள் பொதுமக்கள் இல்லை. என் பெயரைச் சொல்லி டோக்கன் வழங்கியவர்கள் அ.தி.மு.க.வினர்தான். அவர்கள்தான் இப்போது போராட்டம் நடத்தி வன்முறையில் ஈடுபடுகிறார்கள். கல்வீசி தாக்கியவர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமன்றத்தை அணுகப்போகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDinakaran #RKNagar
Next Story






