search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "18 MLAs"

  புதிய உறுப்பினர் சேர்க்கை முடிந்ததும் அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் தேர்வு முறையாக நடைபெறும் என்று கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். #ADMK #KPMunusamy #Sarkar #Vijay #ARMurugadoss #TTVDhinakaran #18MLAs
  தஞ்சாவூர்:

  அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி தஞ்சையில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த பல்வேறு நலத் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்தினரும் பயன் அடைந்துள்ளனர். அவரது வழியிலேயே தற்போது முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அறிவிக்கும் திட்டங்களும் மக்கள் பயன் பெறும் வகையில் சென்றடைகிறது.

  மேலும் இந்த அரசு புதிய புதிய திட்டங்களை மக்களுக்கு கொண்டு வருவதால் சட்டமன்ற இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

  கடந்த ஓராண்டாக தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் எத்தனை தங்கும் விடுதிகளில் தங்கியிருந்தார்கள். கடைசியில் குற்றாலத்தில் தங்கியிருந்து சொகுசு வாழ்க்கையை அனுபவித்தார்கள். அப்போதெல்லாம் அவர்கள் மக்களை நினைத்து பார்க்காமல் தற்போது தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் நோக்கில் தினகரன் உண்ணாவிரத போராட்டம் அறிவித்து நாடகம் நடத்துகிறார்.

  அ.ம.மு.க. என்பது ஒரு கட்சியே இல்லை. தினகரன் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டவர் . அவருக்கும் எங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

  கட்சியில் புதியதாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறது. மீண்டும் இதில் புதுப்பித்து கொண்டால் மட்டுமே அவர்கள் கட்சியில் உறுப்பினராக இருக்க முடியும். இந்த புதிய உறுப்பினர் சேர்ப்பில் சசிகலா உறுப்பினராகவில்லை. எனவே அவர் கட்சியில் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே கட்சியிலேயே இல்லாத ஒருவர் எப்படி பொதுச் செயலாளர் பதவி வகிக்க முடியும்.?

  ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் டோக்கன் கொடுத்து வாக்குகள் வாங்கினார் என்றால், அப்போது மக்கள் ஏமாந்தார்கள். தங்களை தினகரன் ஏமாற்றி விட்டார் என்று விரட்டி அடித்தார்களே அது நாடு முழுக்க தெரிந்தது. ஆகவே இந்த தேர்தலில் அ.ம.மு.க. 20 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும்.

  தற்போது அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடக்கிறது. இந்த பணி தொண்டர்களிடம் முழுமையாக சென்றடைந்த பிறகு தலைமை முடிவு செய்து பொதுச்செயலாளர் தேர்வு முறையாக நடைபெறும்.

  சந்திரபாபு நாயுடுவை மு.க.ஸ்டாலின் சந்திப்பது அவர்கள் மாநிலத்திற்கு தேவை என்பதாலும், மு.க.ஸ்டாலினுக்கும் வேறு வழியில்லை என்பதாலும் அவர் சந்தித்தார். ஆனால் அ.தி.மு.க. தமிழக மக்களிடையே வலுவான கட்சி என்பதால் நாங்கள் யாரையும் சந்திக்க அவசியம் இல்லை.

  சர்கார் படத்தில் இலவசங்களை விமர்சித்து காட்சிகள் வந்தது. அந்த படத்தை இயக்கிய முருகதாஸ் அரசு எந்த அடிப்படையில் இலவசங்கள் வழங்கியது என்று தெரியாமல் எடுத்துள்ளார்.

  இந்த படத்தை கொண்டு வந்தது மாறன் சகோதரர்கள். அரசியலில் ஆதாயம் தேடுவதற்காகவும், மு.க.ஸ்டாலினை திருப்தி படுத்துவதற்காகவும் இது போன்று படத்தை கொண்டு வந்துள்ளார்கள். இதில் முருகதாசும், நடிகர் விஜய்யும் பலிகடா ஆகி விட்டனர்.

  இவ்வாறு அவர் கூறினார். #ADMK #KPMunusamy #Sarkar #Vijay #ARMurugadoss #TTVDhinakaran #18MLAs
  பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் உள்ள சசிகலாவுடன் டி.டி.வி. தினகரன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினர். #Sasikala #TTVDhinakaran #18MLAs
  பெங்களூரு:

  சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

  அவரை இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்துப் பேசினார்.

  அப்போது டி.டி.வி. தினகரனுடன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, ரத்தினசபாபதி, வெற்றிவேல், ரங்கசாமி, முத்தையா ஆகியோர் உடன் இருந்தனர்.  #Sasikala #TTVDhinakaran #18MLAs 
  பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் உள்ள சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நாளை சந்தித்து பேசுகின்றனர். #Sasikala #TTVDhinakaran #18MLAs
  பெங்களூரு:

  சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

  அவரை நாளை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்திக்க உள்ளனர்.

  இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:-

  பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நாளை கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் சந்திக்க இருக்கிறோம். அவரை சந்திக்க 6 பேர் மட்டுமே அனுமதிக்க சிறை விதி உள்ளதால் 4 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் அவரை சந்திக்க முடியும்.

  தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நாளை பெங்களூரு செல்கிறோம். நானும் அங்கு செல்கிறேன். அவரை சந்தித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எங்கள் துணை பொதுச்செயலாளர் அறிவிப்பார்.

  இவ்வாறு அவர் கூறினார். #Sasikala #TTVDhinakaran #18MLAs
  18 எம்.எல்.ஏ.க்களின் அரசியல் வாழ்வை வீணடித்த டிடிவி தினகரன் ஆர்கேநகர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியுள்ளார். #ministerkamaraj #dinakaran #mkstalin #rknagar

  திருவாரூர்:

  திருவாரூரில் அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் தினகரன் அணியின் வலங்கைமான் ஒன்றிய அவைத்தலைவர் கண்ணையன், அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்

  பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-

  ஜெயலலிதா இறந்த பிறகு அ.தி.மு.க. ஆட்சி போய்விடும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பெரிய கனவு கண்டார். அதனால் நேரடியாக ஆட்சிக்கு வந்து விடலாம் என எண்ணினார். அதற்காக அவர் எடுத்த முயற்சிகள் பிறர் கேலி செய்யும் அளவிற்கு போய் விட்டது.

  ஸ்டாலின் கண்ட கனவு ஒருபோதும் பலிக்காது. ஸ்டாலினின் கனவுக்கு துணை போனவர் டி.டி.வி.தினகரன். ஸ்டாலினும் தினகரனும் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்த்து விடலாம் என கூட்டாக சேர்ந்து சதி செய்தனர். அவர்கள் இருவர் கண்ட கனவும் பலிக்கவில்லை. இனியும் ஒரு போதும் பலிக்காது.


  18 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு அ.தி.மு.க. ஆட்சி கவிழ்ந்து விடும் என கூறிக் கொண்டிருந்த தினகரனுக்கு ஐகோர்ட்டில் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. இனி யார் நினைத்தாலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது. மேலும் தன்னுடைய சுயலாபத்திற்காக 18 பேரின் அரசியல் வாழ்க்கையை வீணடித்தவர் தினகரன். அரசியலில் ஏற்பட்ட தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும்.

  தற்போது திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தால் அந்த பகுதி மக்களின் ஆதரவை பெற்று அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். இந்த 2 தொகுதி மட்டுமல்ல, 20 தொகுதிக்கும் உடனடியாக இடைத் தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.

  இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார். #ministerkamaraj #dinakaran #mkstalin #rknagar

  18 எம்.எல்.ஏக்களின் பதவியை பறித்துவிட்டு அழைப்பு விடுப்பதன் மூலம் அ.தி.மு.க. பலவீனமாக இருப்பதையே காட்டுகிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார். #dinakaran #admk #edappadipalanisamy #opanneerselvam

  கரூர்:

  கரூரில் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

  டெண்டர் முறைகேடு விவகாரத்தில் எனக்கு மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது சி.பி.ஐ. விசாரிக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்திற்கு ஏன் சென்றிருக்கிறார். இதன் மூலம் முறைகேடு நடந்திருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது.

  தன்னுடைய வி‌ஷயத்திற்காக உச்சநீதிமன்ற சென்ற முதல்வர், குட்கா விவகாரத்தில் ஏன் மேல் முறையீடுக்கு போகவில்லை. காரணம் மாட்டிக்கொண்டால் அமைச்சர் விஜயபாஸ்கர் தானே, தான் இல்லை என்ற நல்ல எண்ணம்தான். நான் மகான் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். நான் மகான் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஒன்றும் புனிதர் இல்லை.

  யாரால் முதல்வர் பதவி கிடைத்ததோ அவருக்கு துரோகம் செய்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி டெபாசிட் வாங்கினால் அரசியலை விட்டே விலகத்தயார் என அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் கூறியுள்ளார்.

  அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் செந்தில்பாலாஜி மீண்டும் மாபெரும் வெற்றி பெறுவார். அ.தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்வோம். நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறையை லாபகரமாக உயர்த்தி உலக நாடுகளின் விருதுகளை பெற்றவர் போல், ஒரு லட்சம் பேரை கூட்டி திருமணம், பூப்புனித நீராட்டு விழாவை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடத்தியுள்ளார். அவர் யார் காலில் விழுந்து பதவிக்கு வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

  பதவி பறிப்பு தொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு நோட்டீஸ் எதுவும் வர வில்லை. கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு அவர்கள் கட்டுப்படுவதாகவும், சட்டப்படி எதையும் எதிர் கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

  18 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு திரும்பவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்கள். அதற்கு நீர் அடித்து நீர் விலகாது என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கூறியுள்ளனர். அ.தி.மு.க. பலவீனமாக இருப்பதையே இது காட்டுகிறது. இது காலம் கடந்த ஞானோதயம். அ.தி.மு.க.வின் 90 சதவீதம் தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர்.

  பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பா.ஜ.க.வை தாக்கி பேசுகிறார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்காக டெல்லி போய் நிற்கிறார். ஆனால் யாரும் அவருக்கு பதில் கூட சொல்லவில்லை.


  தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றத்தை தந்ததைவிட மக்களுக்கு அதிக ஏமாற்றம் தந்துள்ளது. அவர்கள் நல்ல தீர்ப்பு வரும், ஆட்சி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் முடிவு செய்யப்படும்.

  மிடாஸ் ஆலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மிடாஸ் ஆலை எங்கு இருக்கிறது என்பது கூட தெரியாது. எனது குடும்பம் என்றால், எனது மனைவி, மகள், அதற்கு அடுத்த படி யாகத்தான் அண்ணன், தம்பி. கட்சிக்குள் தலையிட விடாததால் தான் திவாகரன், பாஸ்கரன் தனியாக கட்சி ஆரம்பித்துள்ளனர். கட்சி வேறு, உறவு வேறு. அ.தி. மு.க. ஆட்சி வீழ்வது உறுதி. துரோகங்கள் ஜெயித்ததாக வரலாறு இல்லை.

  மக்கள் மன்றத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். என்னைக்கண்டு முதல்வர் மற்றும் ஆட்சியாளர்கள் பயப்படுகிறார்கள். என்னைப் பற்றி பேசவில்லை என்றால் அவர்களுக்கு தூக்கம் வராது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடைபெற்ற மருது பாண்டியர்கள் குருபூஜையில் கலந்து கொண்ட தினகரன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

  தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 18 பேரும் இடைத் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளனர். தொகுதி மக்களை நேரில் சந்தித்து 18 பேரும் கருத்து கேட்டு வருகின்றனர்.

  தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பமாக உள்ளது. தமிழக மக்களின் எண்ணம் எங்களுக்கு தெரியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வாய்ப்பளிப்பதற்கு தமிழக மக்கள் தயாராக உள்ளனர்.

  ஆர்.கே.நகரில் சுயேட்சையாக நின்று எதிர்கட்சியை டெபாசிட் இழக்க வைத்து வெற்றி பெற்றுள்ளோம்.

  பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு திரும்ப வேண்டும் என்று முதல் வரும், துணை முதல் வரும் அழைப்பு விடுத்துள்ளனர். இது ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்டது போல் உள்ளது.

  நாங்கள் துரோகத்தின் பக்கம் செல்ல மாட்டோம் என ஆதரவு எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் வந்தாலும் ஒரு தொகுதியில் கூட ஆளும் கட்சி டெபாசிட் பெறாது.

  அ.தி.மு.க.வில் கூடு மட்டுமே உள்ளது.தொண்டர்கள் என்ற உயிரோட்டம் எங்களிடம் மட்டுமே உள்ளது. துரோகம் வீழ்ந்து தர்மம் வெல்லப்போகிறது.

  குக்கர் சின்னம் தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆர்.கே.நகரில் ரூ.200 கோடி செலவு செய்தும் தோல்வி அடைந்தவர்கள் எடப்பாடி அணியினர். நிதானமாக யோசித்து பேசுபவன் நான்.

  இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #admk #edappadipalanisamy #opanneerselvam

  தகுதி நீக்கம் வழக்கு குறித்து 18 எம் எல் ஏக்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என அமமுக துணை பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase
  சென்னை:

  தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. முதலில் இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியதால், இவ்வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் இவ்வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.

  அப்போது, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும். தகுதிநீக்கம் தொடர்பாக சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இல்லை என்று நீதிபதி அறிவித்தார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.  இதுபற்றி டிடிவி தினகரன் கூறுகையில், தகுதி நீக்கம் வழக்கு குறித்து 18 எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் கூறுகையில், தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வதா அல்லது தேர்தலை சந்திப்பதா என 18 பேரிடமும் நாளை கருத்து கேட்க உள்ளேன்.

  நீதிமன்ற தீர்ப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தாது. தமிழகத்தில் இடைத்தேர்தல் வருமா என்பது சந்தேகமாக உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நேரத்தில் ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் என தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase
  தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #MLAsDisqualificationCase
  சென்னை:

  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்,  மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை சுப்ரீம் கோர்ட்டு மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது.

  இதையடுத்து புதிய நீதிபதி சத்யநாராயணன் கடந்த மாதம் இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி விசாரணையை தொடங்கினார்.   அரசுத் தரப்பு வாதம், டிடிவி தினகரன் தரப்பு வாதம், தேர்தல் ஆணையம் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை ஆகஸ்டு 31-ம் தேதி நிறைவு செய்தார். இத்துடன், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி. 

  இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறார். இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. #MLAsDisqualificationCase
  தனது சுய லாபத்துக்காக 18 எம்.எல்.ஏ.க்களை தினகரன் பலிகடா ஆக்கிவிட்டார் என்று அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். #TTVDhinakaran #ADMK #Udhayakumar
  மதுரை:

  அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த 18 பேரும் தங்கள் பதவியை தகுதி இழப்பு செய்த பின்னர் படாதபாடு பட்டுவிட்டார்கள்.

  அம்மாவின் அரசை காப்பாற்றுவதற்காக ஒரு நல்ல முடிவை எடுத்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை குற்றாலத்தில் கட்டாயப்படுத்தி அடைத்து வைத்துள்ளனர்.

  பதவி ஆசையை காட்டி பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அம்மாவின் அரசை காப்பாற்ற குற்றாலத்தில் அடைத்து வைத்தாலும், துன்பத்தில் அடைத்தாலும் வெளியே வருவார்கள்.

  முதலமைச்சரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று நாங்கள் தெளிவாக கூறி வருகிறோம். எனவே தனது உயிரை தந்து அம்மா இந்த ஆட்சியை ஏற்படுத்தினார்.

  அது போல உயிரை கொடுத்தாவது இந்த ஆட்சிக்கு துணை நிற்க வேண்டும் என்பது தான் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆசை. அது நிச்சயம் நிறைவேறும்.


  தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் அனைத்து திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த தொகுதிகளில் மக்கள் எவரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. 18 எம்.எல்.ஏ.க்கள் தான் மக்களை மறந்து விட்டார்கள்.

  தினகரன் தனது சொந்த சுய லாபத்துக்காக இதுவரை அரசியலில் சீரழிவு கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறார். தான் சட்டமன்ற உறுப்பினராக வரவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அம்மாவின் அலங்கோலமான வீடியோவை வெளியிட்டார். அது போலத்தான் ஒருவரை சந்தித்து பேசுவதை கொச்சைப்படுத்தினார்.

  இன்று ஆடியோ சி.டி. வெளியிட்டு அமைச்சருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர் எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் அ.தி.மு.க. அரசை அசைத்துக்கூட பார்க்க முடியாது.

  இவர்களின் பொய் பிரசாரத்தை முறியடிப்பதற்காகவே திருப்பரங்குன்றத்தில் நாளை (24-ந் தேதி) 3 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

  இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ADMK #Udhayakumar
  18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் 234 தொகுதிகளிலும் மக்கள் எதிர்பார்க்கிற நல்ல தீர்ப்பு வரும். மக்கள் விரும்பாத துரோக ஆட்சிக்கு முடிவு வரும் என்று ஆர்ப்பாட்டத்தில் தினகரன் பேசினார். #dinakaran #18mlas #edappadipalanisamy

  மன்னார்குடி:

  திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் காவிரி வெள்ளம் சென்றாலும் கடைமடை பாசன பகுதி பாலைவனமாக உள்ளதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

  திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார்.மாநில பொருளாளர் எம்.ரெங்கசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.கு.சீனிவாசன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவா.ராஜ மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

  அரசியல் ஆதாயத்திற்காக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லை. நதிகள் உள்ள பகுதிகளில் தான் நாகரீகம் தோன்றியது.உலக வரலாற்றில் இடம் பெற்ற கரிகாலன் கட்டிய கல்லணையும், ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலும் இன்றும் புகழ்பெற்று நிற்கிறது. கர்நாடகத்தில் மழை கொட்டி தீர்த்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பிய நிலையில் கர்நாடகம் காவிரிநீரை தந்தது. மேட்டூர் அணை இரண்டு முறை நிரம்பியது. ஆனால் அந்த நீர் கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது.

  ஜெயலலிதா ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்கள் தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ வேண்டும் என்பதற்காக தமிழகத்தையே சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். குடி மராமத்து பணி, தூர் வாரும் பணி என்றெல்லாம் நிதி ஒதுக்கி கொள்ளையடித்து வருகிறார்கள். பல ஆண்டு போராட்டத்திற்குப் பின் உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை பா.ஜனதா இழுத்தடித்தது.

  18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு வந்தவுடன் தமிழகத்தில் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்டாயம் வரும். 234 தொகுதிகளிலும் மக்கள் எதிர்பார்க்கிற நல்ல தீர்ப்பு வரும். மக்கள் விரும்பாத துரோக ஆட்சிக்கு முடிவு வரும்.

  கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பூமிக்கடியில் நிலக்கரி கிடைப்பதால் நிலக்கரி எடுக்க நிலங்களை தேர்வு செய்துள்ளார்கள். பூமிக்கடியில் வைரமே கிடைத்தாலும் தேவையில்லை.டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்களை காப்பாற்றுவோம். டெல்டா மாவட்டங்களில் விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழிலுமே நடக்க வேண்டும். எட்டு வழிச்சாலை தொலை நோக்குத் திட்டம் என ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் ஆற்றுநீரை தேக்கி வைக்க முடியவில்லை.

  ஊழலை திசை திருப்ப ஆட்சியாளர்கள் ஊர், ஊராக சுற்றி வருகிறார்கள். மன்னார்குடியில் கூட்டம் போட்டு ஓ.பன்னீர்செல்வம் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார்.

  ஆடிட்டர் குருமூர்த்தியின் தயவால் பா.ஜனதாவின் உத்தரவுப்படி தமிழகத்தில் ஆட்சி செய்கிறார்கள். ஓ. பன்னீர்செல்வத்திற்கு என்னைக் கண்டால் பயம் ஏற்படுகிறது.


  அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரி குடை பிடிப்பது போல் தமிழக அமைச்சர்களின் நிலை உள்ளது.

  இவ்வாறு அவர் பேசினார்.

  ஆர்ப்பாட்டத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, நடிகை சி.ஆர்.சரஸ்வதி, அறந்தாங்கி ரத்தினசபாபதி எம்.எல்.ஏ., முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் குடவாசல் ராஜேந்திரன், திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  முன்னதாக நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.சங்கர் வரவேற்றார். முடிவில் நகர செயலாளர் எஸ்.சங்கர் நன்றி கூறினார். #dinakaran #18mlas #edappadipalanisamy