search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "judgement"

    • கொலை முயற்சி வழக்கில் ரவுடிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது
    • அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது

    அரியலூர்,

    அரியலூர் அருகே தாமரைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து மகன் ரமேஷ் (வயது 24) என்பவருக்கும், ரவுடி வெங்கடேசனுக்கும் இடையே இடப் பிரச்னை தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி அன்று தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், ரமேஷை அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டார்.இதுகுறித்து அரியலூர் நகர காவல் துறையினர் வழக்கு ப திவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், அனைத்து சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் குற்றவாளி சரவணனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து வெங்கடேசன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    அரியலூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த பூவாணிபட்டு கிராமம், கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ்(வயது42). இவரை கடந்த 2020-ம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், குற்றவாளி அந்தோணிராஜ்க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் ஆபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.7 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து அந்தோணிராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜராகினார்.

    • சங்கிலி பறிப்பு வழக்கில் வாலிபருக்கு பெரம்பலூர் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது
    • மேலும் ரூ.1,000 அபராதமும் விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2 நீதிபதி சங்கீதாசேகர் உத்தரவு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இலுப்பைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராணி. இவர் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சியை சோ்ந்த செந்தில்வேலின் மகன் புரட்சிதமிழன் (வயது 25) என்பவர் ராணியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புரட்சி தமிழனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2-ல் நடந்து கொண்டிருந்தது. நீதிமன்ற விசாரணையில் இருந்த மேற்படி வழக்கானது விசாரணை முடிக்கப்பட்டு நேற்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால் புரட்சி தமிழனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2 நீதிபதி சங்கீதாசேகர் உத்தரவிட்டார். மேற்படி சங்கிலி பறிப்பு வழக்கில் சிறப்பாக செயல்பட்ட பாடாலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் கோர்ட்டு போலீஸ் முத்தையன் ஆகியோருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டு தெரிவித்தார்.

    • வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் நகை-பணத்தை கொள்ளையடித்த 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
    • தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, அபராத தொகையை வசூலித்து பாதிக்கப்பட்ட சகாயமேரிக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    திருச்சி,

    திருச்சி ஏர்போர்ட் வளன்நகர் பகுதியை சேர்ந்தவர் சகாயமேரி (வயது 47). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவரை பிரிந்து குழந்தைகளுடன் சகாயமேரி தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த 14-6-2016 அன்று மாலை 3.45 மணிக்கு 4 பேர்் அவருடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர்.பின்னர் சகாயமேரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, நகை, பணம், செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி தென்னூர் காயிதே மில்லத் நகரை சேர்ந்த சேக் அப்துல்காதர் (34), நேருநகரை சேர்ந்த சபீர் முகமது (43), குத்பிஷாநகரை சேர்ந்த சாதிக்பாட்சா (43), சங்கிலியாண்டபுரம் உசேன் தெருவை சேர்ந்த முனீர்அகமது (37) ஆகியோரை கைது செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி மீனாசந்திரா முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் எஸ்.ஹேமந்த் ஆஜரானார். இந்தவழக்கில் சாட்சி விசாரணைகள் முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட சேக் அப்துல்காதர், சபீர் முகமது, சாதிக்பாட்சா, முனீர்அகமது ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் அபராத தொகையை வசூலித்து பாதிக்கப்பட்ட சகாயமேரிக்கு வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.

    • சொத்து தகராறில் விவசாயியை அடித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது
    • பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே சொத்து தகராறில் விவசா யியை அடித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்ட னை விதித்து கோர்ட் உத்த ரவிட்டுள்ளது.பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் ஊராட்சி க்குட்பட்ட நாவலூரைச் சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது67). விவசாயி. இவரது உறவினர் பரமசிவம் மகன் பாக்கியராஜ் (33). இரு குடு ம்பத்தி னருக்கும் பொதுவாக இருந்த நிலத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக ப்பிரிவினை செய்யப்ப ட்டது.அதில் தனக்கு முறையாக பங்கு பிரித்து வழங்கவில்லை எனக்கூறிய பாக்கியராஜ் அடிக்கடி தகராறில் ஈடுப ட்டு வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந் இரவு வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த சிங்காரவேலுவிடம் பாக்கிய ராஜ் வாக்குவாதத்தில் ஈடுப ட்டார். இதில் ஆத்தரமடைந்த பாக்கியராஜ் கட்டையால் சிங்காரவேலுவை தாக்கி னார். இதனால் படுகாய மடைந்த சிங்காரவேலு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதிக்கப்ப ட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் இன்ஸ் பெக்டர் (பொ) சுகந்தி வழ க்குப்பதிந்து பாக்கியராஜை கைது செய்து சிறையில் அடைத்தார். பின்னர் பாக்கி யராஜ் ஜாமீ னில் வெளியே வந்தார்.இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்தது வந்தது. அரசு தரப்பில் வக்கீல் செந்தில்நாதன் ஆஜரானார். நேற்று இந்த வழக்கை இறுதி விசாரணை செய்த நீதிபதி பல்கீஸ் சொத்து தகராறில் விவசாயியை அடித்து கொலை செய்த பாக்கிய ராஜிக்கு ஆயுள்தண்டனை யும், 500 ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தர விட்டார். இதையடுத்து பாக்கியராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்ப ட்டார்.

    • 8 பேரை கொலை செய்த சைக்கோ கொலையாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது
    • திருச்சி நீதிமன்றத்தில் அதிரடி தீர்ப்பு

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வேங்கூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் தங்கதுரை (34). கடந்த, 2016ம் செப்டம்பர் மாதம், 7ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்னர்ஒரு வாரம் கழித்து, கிருஷ்ண சமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு வாய்க்காலின் கரையில் தங்கதுரையின் உடல் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் மதன் போலீஸார், தங்கதுரை உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, தங்கதுரையின் மொபைல்போனை கிருஷ்ண சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த, அவரது பள்ளிப்பருவ காலத்து நண்பரான சப்பாணி (35) என்பவர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.அவரைப் பிடித்து விசாரித்தபோது, நகைக்கு ஆசைப்பட்டு தங்கதுரையைக் கொலை செய்ததாக சப்பாணி ஒப்புக்கொண்டார்.இதுபோலவே, நகைக்காக தன் தந்தை தேக்கன் (75), திருவெறும்பூர் மேல குமரேசபுரத்தைச் சேர்ந்த கோகிலா (70), பாப்பாக்குறிச்சியைச் சேர்ந்த அற்புதசாமி (70), கீழ குமரேசபுரத்தைச் சேர்ந்த விஜய் விக்டர் (27), கூத்தப்பாரைச் சேர்ந்த சத்தியநாதன் (45), பெரியசாமி (75), வடகாடு விஸ்வம்பாள் சமுத்திரத்தைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர் குமரேசன் (50) ஆகிய, 7 பேரையும் கொலை செய்ததாக சப்பாணி வாக்குமூலம் அளித்தார். பின்னர் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இவ்வழக்கு விசாரணை, திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தங்கதுரை, சத்யநாதன் ஆகியோர் கொலைக்கான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சப்பானி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் நீதிபதி பாபு குற்றம் சாட்டப்பட்ட சப்பாணி குற்றவாளி என தீர்ப்பளித்தார். மேலும் அதற்கான தண்டனை விவரங்களை பிற்பகல் அறிவிப்பதாக கூறினார். பிற்பகலில் நீதிபதி பாபு தனது தீர்ப்பில், சப்பாணிக்கு அதிகபட்ச தண்டனையாக வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    • திருமானூர் அருகே தம்பியை வெட்டி கொலை செய்த அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது
    • அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தீர்ப்பு

    அரியலூர்,

    திருமானூர் அடுத்த கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்விவசாயி ரவி(48). இவரது அண்ணன் ராஜேந்திரன்(50). இருவருக்கும் சொத்துதகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ரவிவீட்டு தென்னை மரத்திலிருந்து தேங்காய் ஒன்று ராஜேந்திரன் வீட்டின்கூரையில் விழுந்துள்ளது. இதனால், இரு குடும்பத்தாருக்கும் தகராறுஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ராஜேந்திரன், தம்பி ரவியைஅரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரவி, தஞ்சைமருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து,ரவியின் மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில் திருமானூர்காவல்துறையினர் வழக்குப் பதிந்து ராஜேந்திரனை கைது செய்து சிறையில்அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மைநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  வழக்கை விசாரித்து வந்த மாவட்டமுதன்மை நீதிபதி கிறிஸ்டோபர், குற்றவாளி ராஜேந்திரனுக்கு 7 ஆண்டுகள்சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தார். இதையடுத்து ராஜேந்திரன் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

    • ஆசிரியரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய கருவூல ஊழியருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது
    • திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

    திருச்சி,

    திருச்சி மண்ணச்சநல்லூர் சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர் சே. நல்லையன். இவர் தனது பணி முதுர்வின்போது அவரது கணக்கில் இருக்கும் விடுப்பை பணமாக்க திருச்சி லால்குடி சார்ந்த கருவூ லத்தில் விண்ண ப்பித்தார். அப்போது கண க்காளர் கிருஷ்ணமூர்த்தி ரூ. 500 லஞ்சம் கேட்டார்.லஞ்சம் கொடுக்க மனமில்லாத நல்லையன் திருச்சி ஊழல் தடுப்பு காவல் பிரிவில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி மீது கடந்த 2008 மார்ச் 15ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.பின்னர் இரு தினங்கள் கழித்து கையூட்டு பணம் ரூ. 500 கிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்ட போது லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி கார்த்திகேயன் லஞ்சம் வாங்கிய லால்குடி சார் கருவூல முன்னாள் கணக்கர் கிருஷ்ணமூர்த்திக்கு லஞ்சப்பனம் கேட்டு பெற்ற குற்றத்திற்காக ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அதனை கட்ட தவறினால் 6 மாத சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப் பெற்ற குற்றத்தி ற்காக மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாத சிறை தண்டனை விதித்ததோடு மேற்கண்ட தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

    • 14 நாட்களுக்குள் கோர்ட்டு விசாரணை முடிந்து 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு கூறினார்.
    • நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு துரிதமாக தண்டனை பெற்று போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஏ.பி.டி. ரோட்டில் கடந்த 9-ந் தேதி இரவு 8¼ மணிக்கு செல்போனில் பேசியபடி நடந்து சென்ற நபரிடம் இருந்து செல்போனை தட்டிப்பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தேனி மாவட்டம் அல்லிநகரம் பொம்மியகவுண்டம்பட்டியை சேர்ந்த திருப்பூர் வெள்ளியங்காட்டில் வசித்து வரும் கோகுல் (வயது 20) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா கைது செய்தார்.

    பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் 2 நாட்களில் புலன் விசாரணையை முடித்து, குற்ற இறுதி அறிக்கை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.3-ல் தாக்கல் செய்தனர். அதன்பின்னர் அந்த வழக்கில் முறையாக சாட்சிகளையும், சாட்சியங்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். 14 நாட்களுக்குள் கோர்ட்டு விசாரணை முடிந்து வழக்கில் சம்பந்தப்பட்ட கோகுலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மாஜிஸ்திரேட்டு பழனிக்குமார் தீர்ப்பு கூறினார்.

    திருப்பூர் மாநகரத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சம்பந்தப்பட்ட வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு துரிதமாக தண்டனை பெற்று சம்பந்தப்பட்டவர்களை சிறையில் இருந்து வெளியே வராமல் செய்ய வேண்டும் என்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு அறிவுறுத்தியிருந்தார்.

    அதன்படி சிறப்பாக பணியாற்றிய மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா மற்றும் புலன் விசாரணைக்கு உதவியாக இருந்த போலீசார் ராஜசேகர்,ஜெகதீஷ், சூரியகலா, ஏட்டு அகஸ்டின் ஆகியோருக்கு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு வெகுமதி அளித்து பாராட்டினார். அப்போது துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • சமரச வழக்கில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கு
    • 17ஆண்டுகளாக நடந்து வழக்கில் தீர்ப்பு

    திருச்சி , 

    திருச்சி அடுத்த சிறுகனூர் காவல் நிலையத்தில் 2006ம் ஆண்டு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் செல்வராஜ். அப்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் அந்த பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.அப்போது அந்த வழக்கில் சமரசம் செய்து வைக்க ஒருதரப்பினரிடம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். பின்னர் ரூ.6 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டனர். அதன்படி 2.11.2006 அன்று பணத்தை கொடுத்தபோது, அப்போதைய திருச்சி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி அம்பிகாபதி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் போலீஸ் நிலையம் சென்று, லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் செல்வராஜியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சுமார் 17 வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு அளித்தார். அதன்படி , லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் செல்வராஜிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

    • அரியலூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
    • ரூ.4 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உடையார்பாளையம் அடுத்த மேலணிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் மகன் சுப்பிரமணியன் (வயது 40). கடந்த 2021 ஆம் ஆண்டு இவர், 15 மற்றும் 16 வயதுடைய 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமிகளின் தாய் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர், சுப்பிரமணியனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளித்தது. இதில் குற்றவாளி சுப்பிரமணியனுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளி சுப்பிரமணியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜராகினார்.

    குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எம். ஆர். காந்தி தாக்கப்பட்ட வழக்கில் வருகிற 16-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்று நார்கோவில் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எம். ஆர். காந்தி.

    எம். ஆர். காந்தி பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவராகவும் உள்ளார். இவரது வீடு நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ளது.

    எம். ஆர். காந்தி தினமும் வீட்டில் இருந்து ஆசாரிபள்ளம் சாலையில் நடை பயிற்சிக்கு செல்வது வழக்கம். கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந் தேதியும் அவர் வீட்டில் இருந்து தனியாக நடை பயிற்சிக்கு சென்றார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து தாக்கினர். அரிவாளாலும் வெட்டினர்.

    எம்.ஆர். காந்தி தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், இடலாக்குடியை சேர்ந்த செய்யது அலி நவாஸ், பிரபு என்ற அப்துல் அஜிஸ், மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது காலின் மற்றும் ஷாஜி ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நாகர்கோவில் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கடந்த 2-ந் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு கூறப்படும் என அறிவிக்கப்பட்டது. அன்று கோர்ட்டில் இந்த வழக்கின் 5 குற்றவாளிகளில் 4 பேர் மட்டுமே ஆஜர் ஆனார்கள். இதையடுத்து 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இதையடுத்து இன்று இந்த வழக்கின் குற்றவாளிகள் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள்.

    இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்கிடையே நாகர்கோவில் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாண்டிய ராஜ், இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 16-ந் தேதி வழங்கப்படும் என அறிவித்தார். எனவே இந்த வழக்கின் தீர்ப்பு வருகிற 16-ந் தேதி வெளியாகும் என தெரிகிறது.
    ×