என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
அரியலூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த பூவாணிபட்டு கிராமம், கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ்(வயது42). இவரை கடந்த 2020-ம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், குற்றவாளி அந்தோணிராஜ்க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் ஆபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.7 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து அந்தோணிராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜராகினார்.
Next Story






