search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெகுமதி"

    • 63-வது மாநில அளவிலான காவல்துறை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • திருப்பூர் மாநகர ஆயுதப்படை முதல்நிலை பெண் காவலர் விஜயபாண்டி பங்கேற்றார்.

    திருப்பூர்

    சென்னை புதுப்பேட்டை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் 63-வது மாநில அளவிலான காவல்துறை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகர ஆயுதப்படை முதல்நிலை பெண் காவலர் விஜயபாண்டி பங்கேற்றார். இவர் மல்யுத்த போட்டியில் தங்கப்பதக்கம், பளுதூக்கும்போட்டியில் வெள்ளிப்பதக்கம், கைமல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார்.

    இதுபோல் திருப்பூர் மாநகர ஆயுதப்படை காவலர் அமித்குமார், பளுதூக்கும் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார்.இதைத்தொடர்ந்து பதக்கம் வென்ற ஆயுதப்படை காவலர்கள் விஜயபாண்டி, அமித்குமார் ஆகியோரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

    • 14 நாட்களுக்குள் கோர்ட்டு விசாரணை முடிந்து 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு கூறினார்.
    • நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு துரிதமாக தண்டனை பெற்று போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஏ.பி.டி. ரோட்டில் கடந்த 9-ந் தேதி இரவு 8¼ மணிக்கு செல்போனில் பேசியபடி நடந்து சென்ற நபரிடம் இருந்து செல்போனை தட்டிப்பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தேனி மாவட்டம் அல்லிநகரம் பொம்மியகவுண்டம்பட்டியை சேர்ந்த திருப்பூர் வெள்ளியங்காட்டில் வசித்து வரும் கோகுல் (வயது 20) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா கைது செய்தார்.

    பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் 2 நாட்களில் புலன் விசாரணையை முடித்து, குற்ற இறுதி அறிக்கை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.3-ல் தாக்கல் செய்தனர். அதன்பின்னர் அந்த வழக்கில் முறையாக சாட்சிகளையும், சாட்சியங்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். 14 நாட்களுக்குள் கோர்ட்டு விசாரணை முடிந்து வழக்கில் சம்பந்தப்பட்ட கோகுலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மாஜிஸ்திரேட்டு பழனிக்குமார் தீர்ப்பு கூறினார்.

    திருப்பூர் மாநகரத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சம்பந்தப்பட்ட வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு துரிதமாக தண்டனை பெற்று சம்பந்தப்பட்டவர்களை சிறையில் இருந்து வெளியே வராமல் செய்ய வேண்டும் என்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு அறிவுறுத்தியிருந்தார்.

    அதன்படி சிறப்பாக பணியாற்றிய மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா மற்றும் புலன் விசாரணைக்கு உதவியாக இருந்த போலீசார் ராஜசேகர்,ஜெகதீஷ், சூரியகலா, ஏட்டு அகஸ்டின் ஆகியோருக்கு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு வெகுமதி அளித்து பாராட்டினார். அப்போது துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×