மாநில அளவிலான போட்டியில் பதக்கம் வென்ற ஆயுதப்படை போலீசாருக்கு வெகுமதி - மாநகர போலீஸ் கமிஷனர் வழங்கினார்

63-வது மாநில அளவிலான காவல்துறை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.திருப்பூர் மாநகர ஆயுதப்படை முதல்நிலை பெண் காவலர் விஜயபாண்டி பங்கேற்றார்.
ஆயுதப்படை போலீசாருக்கு வெகுமதி வழங்கிய காட்சி.
ஆயுதப்படை போலீசாருக்கு வெகுமதி வழங்கிய காட்சி.
Published on

திருப்பூர்

சென்னை புதுப்பேட்டை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் 63-வது மாநில அளவிலான காவல்துறை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகர ஆயுதப்படை முதல்நிலை பெண் காவலர் விஜயபாண்டி பங்கேற்றார். இவர் மல்யுத்த போட்டியில் தங்கப்பதக்கம், பளுதூக்கும்போட்டியில் வெள்ளிப்பதக்கம், கைமல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார்.

இதுபோல் திருப்பூர் மாநகர ஆயுதப்படை காவலர் அமித்குமார், பளுதூக்கும் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார்.இதைத்தொடர்ந்து பதக்கம் வென்ற ஆயுதப்படை காவலர்கள் விஜயபாண்டி, அமித்குமார் ஆகியோரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com