search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சைக்கோ கொலையாளிக்கு  வாழ்நாள் சிறை தண்டனை
    X

    சைக்கோ கொலையாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை

    • 8 பேரை கொலை செய்த சைக்கோ கொலையாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது
    • திருச்சி நீதிமன்றத்தில் அதிரடி தீர்ப்பு

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வேங்கூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் தங்கதுரை (34). கடந்த, 2016ம் செப்டம்பர் மாதம், 7ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்னர்ஒரு வாரம் கழித்து, கிருஷ்ண சமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு வாய்க்காலின் கரையில் தங்கதுரையின் உடல் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் மதன் போலீஸார், தங்கதுரை உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, தங்கதுரையின் மொபைல்போனை கிருஷ்ண சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த, அவரது பள்ளிப்பருவ காலத்து நண்பரான சப்பாணி (35) என்பவர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.அவரைப் பிடித்து விசாரித்தபோது, நகைக்கு ஆசைப்பட்டு தங்கதுரையைக் கொலை செய்ததாக சப்பாணி ஒப்புக்கொண்டார்.இதுபோலவே, நகைக்காக தன் தந்தை தேக்கன் (75), திருவெறும்பூர் மேல குமரேசபுரத்தைச் சேர்ந்த கோகிலா (70), பாப்பாக்குறிச்சியைச் சேர்ந்த அற்புதசாமி (70), கீழ குமரேசபுரத்தைச் சேர்ந்த விஜய் விக்டர் (27), கூத்தப்பாரைச் சேர்ந்த சத்தியநாதன் (45), பெரியசாமி (75), வடகாடு விஸ்வம்பாள் சமுத்திரத்தைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர் குமரேசன் (50) ஆகிய, 7 பேரையும் கொலை செய்ததாக சப்பாணி வாக்குமூலம் அளித்தார். பின்னர் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இவ்வழக்கு விசாரணை, திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தங்கதுரை, சத்யநாதன் ஆகியோர் கொலைக்கான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சப்பானி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் நீதிபதி பாபு குற்றம் சாட்டப்பட்ட சப்பாணி குற்றவாளி என தீர்ப்பளித்தார். மேலும் அதற்கான தண்டனை விவரங்களை பிற்பகல் அறிவிப்பதாக கூறினார். பிற்பகலில் நீதிபதி பாபு தனது தீர்ப்பில், சப்பாணிக்கு அதிகபட்ச தண்டனையாக வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    Next Story
    ×